வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா?
ஏனெனில் அங்கு இஸ்லாமியப் புத்தகம் மட்டும் வைக்காமல் இன்னபிற புத்தகங்களும் வைக்க வேண்டும். (உதாரணம்: கவிதை, கதை, பலசமய புத்தகங்கள்). இதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பதில் கூறவும்.
-பேராசிரியர் நதீம், மன்சூர் அஹமத்.
பதில் :
தீமைகளிலிருந்து நாம் முழுவதுமாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் நீங்கள் சொல்வது போன்ற நூல்களை வைத்து நூலகம் நடத்த முடியாது என்பது சரிதான்.
ஆனால் எழுத்து வடிவில் எழுதப்பட்ட தீமைகளைப் பற்றி மக்களுக்குச் சொல்வதாக இருந்தால் அந்த எழுத்துக்களையும் நாம் வாசித்தாக வேண்டும். அப்போது தான் அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
உதாரணமாக பைபிளில் உள்ள தவறுகளை நாம் எடுத்துக் காட்ட நினைத்தால் நாம் அந்த நூலையும் வைத்திருக்க வேண்டும். உங்கள் தவ்ராத்தைக் கொண்டு வாருங்கள் என்று குர்ஆன் அறைகூவல் விட்டதில் இருந்து அந்த நூலையும் நாம் வாசித்து அதில் உள்ள விபரங்களை அறிந்து வைத்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது.
அது போல் பிற மதங்களின் கொள்கைகளை நம்புவதற்காக அல்லாமல் அறிந்து வைத்துக் கொள்வதற்காக அதையும் வாசித்துத் தான் ஆகவேண்டும். ஒரு நூலில் குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமான கருத்துக்கள் இருந்தால் அதை வாசித்தால் தான் அதன் தவறுகளை மக்களுக்கு விளக்க முடியும்.
மத்ஹப் நூல்களில் உள்ள தவறுகளை நாம் விமர்சிக்கிறோம் என்றால் அதை நாமும் வாங்கி வாசிப்பதால் தான் சாத்தியமானது. இந்த அடிப்படையில் எல்லா நூல்களையும் நாம் நூலகத்தில் வைக்கலாம்.
ஆனால் விபரம் அறியாத மக்கள் அதில் உள்ளவை சரியானவை என்று நம்பி விடக் கூடாது என்பதற்காக இதில் உள்ள கருத்துக்களை இஸ்லாத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விமர்சனம் மற்றும் ஆய்வு என்ற அடிப்படையில் வாசிகக்கவும் என்று ஒரு ரப்பர் ஸ்டாம்பை அது போன்ற நூல்களில் அடித்து வைத்தால் நல்லது.
08.08.2012. 15:04 PM
வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode