ஆண்கள் வைரம் அணியலாமா?
சுபைதா சப்ரீன்
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மட்டுமே ஆண்களுக்குத் தடை செய்துள்ளார்கள்.
5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي رواه النسائي
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டை தமது வலக்கரத்திலும், தங்கத்தை தமது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ
ஆண்கள் தங்கம் அணிவது மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஒரு பொருள் வைரம், மற்றும் தங்கத்தை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அணிவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
தங்கம் ஆண்களுக்கு ஏற்ற ஆபரணம் அல்ல என்பது தற்காலத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஆண்கள் வைரம் அணிவதில் இதுபோன்ற பாதிப்புகள் இல்லை என்பது மேலதிகமான தகவல்.
13.03.2012. 14:11 PM
ஆண்கள் வைரம் அணியலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode