மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா?
மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே?
மசூத், கடையநல்லூர்
இவருக்கு கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல் துறைக்குச் சென்று கொலை மிரட்டல் விட்டவர்களுக்கு எதிராகப் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முற்போக்குகளாவது கொலை மிரட்டலுக்கான மெயில் அல்லது கடிதம் அல்லது போன் நம்பர் ஆகியவற்றுடன் அவரை அழைத்துச் சென்று புகார் கொடுத்திருக்க வேண்டும்.
அல்லது அநாமதேயமான மிரட்டல் என்றால் அது பற்றி அலட்சியப்படுத்த வேண்டும்.
அப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பதில் இருந்து கொலை மிரட்டலை இவரே தயாரித்துக் கொண்டார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
யாராவது கொலை மிரட்டல் விட்டால் அது கண்டிக்கத்தக்கது என்பதில் நாமும் உடன்படுகிறோம். . ஆனால் இது தனக்குத்தானே இவர் அளித்துக் கொண்டது என்ற சந்தேகம் தான் நமக்கு வருகிறது.
28.01.2013. 23:42 PM
மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode