Sidebar

21
Sat, Dec
38 New Articles

இலங்கை முஸ்லிம்களின் துரோகம் காரணமாகத் தான் புலிகள் கொன்றார்களா?

பிரபாகரன் - புலிகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இலங்கை முஸ்லிம்களின் துரோகம் காரணமாகத் தான் புலிகள் கொன்றார்களா?

கேள்வி :

இலங்கை முஸ்லிம்கள், கூடவே இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்ததினால் தான் பிரபாகரன் அவர்களைக் கொன்றான். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் ஈழம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்கள்.

ஸ்ரீலங்கன் ஹோம் கார்ட் (srilankan home guard) என்ற ஒன்றில் சேர்ந்தார்கள் (தமிழர்களுக்கு எதிராக...)

அதனால் தான் பிராபகரன் அவர்களைக் கொன்றான்; முஸ்லிம் விரோதப் போக்கு என்பதற்காக அல்ல என்று எனது மாற்று மத நண்பர் கூறுகிறார். விளக்கம் தேவை.

பி.ஏ.ஜாஹிர் அஹமது

பதில்

முஸ்லிம்களையும், நடுநிலையாளர்களையும் ஏமாற்றுவதற்காக புலி பயங்ரவாத அமைப்பினர் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளில் ஒன்றாகும் இது.

இவர்கள் கூறுவது போல் தனி ஈழம் தேவை இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னதால் ஒரு சமுதாயத்தைக் கொன்று குவிக்கலாம் என்றால் அதே நியாயம் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமல்லவா?

தனி ஈழம் வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று குவிக்க இவர்களுக்கு உரிமை உள்ளது என்றால் தனி ஈழம் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் அதை எதிர்க்கும் இவர்களைக் கூண்டோடு ஒழித்ததும் நியாயம் என்று இவர்கள் ஒப்புக் கொண்டு இந்த வாதத்தை முன்வைக்கட்டும்.

இலங்கையில் வட மாகாணத்தில் முஸ்லிமல்லாத தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இருக்கின்றனர். அது போல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இருக்கின்றனர். மற்ற பகுதிகளில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இருக்கின்றனர்.

பிரபாகரன் தனி ஈழம் கேட்பதாக இருந்தால் தனது மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதியைத் தனி ஈழமாகக் கோருவது போல், கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் ஈழம் என்று ஆக்குவதை ஒப்புக் கொள்வது தான் பொருத்தமானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியையும், தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு ஆள நினைப்பது சிங்களப் பேரின வாதத்தை விட கொடுமையானது.

இந்தப் பயங்கரவாதிகளின் கீழ் இருப்பதை விட, சிங்கள நாட்டில் இருப்பது மேல் என்று முஸ்லிம்கள் எடுத்த நிலைபாடு குறை சொல்லத்தக்கதோ துரோகமோ அல்ல. மாறாக முஸ்லிம்களையும், இந்துத் தமிழர்கள் பட்டியலில் சேர்த்து அவர்களையும் ஆள நினைத்த புலிகள் தான் துரோகம் செய்தவர்கள்.

ஐ.நா.வின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத தமிழர்களும், சிங்களர்களும் அதாவது இலங்கை அரசும் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையை முஸ்லிம்கள் வற்புறுத்திய போது முஸ்லிம் விரோதியான பிரபாகரன் இரு தரப்பு பேச்சுவார்த்தை தான் நடத்த வேண்டும். முஸ்லிகளை ஒரு தரப்பாக சேர்க்கக் கூடாது என்று சொன்னார்.

நாட்டில் சிங்களர், தமிழர், முஸ்லிம் ஆகிய மூன்று இனங்கள் உள்ளதாகச் சிங்கள அரசாங்கம் சொன்னது. ஆனால் புலி பயங்கரவாதிகளோ தமிழர், சிங்களர் என்ற இரு இனங்கள் தான் உள்ளன என்றனர். அதாவது முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான் இவர்களின் நோக்கம்.

மேலும், இவர்களுக்கு ஒரு கொள்கை உள்ளது என்றால் இன்னொரு இனத்துக்கு வேறு கொள்கை இருக்கும். அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக முஸ்லிம்களை இவர்கள் கொல்வார்கள் என்றால் இவர்களைப் பாரபட்சமில்லாமல் பூண்டோடு கருவருத்த சிங்கள அரசின் செயலில் ஒரு குற்றமும் இவர்கள் சொல்லக் கூடாது. தன் கொள்கையை ஏற்காதவர்களைக் கொலை செய்த இவர்களைப் பின்பற்றித்தான் சிங்கள அரசும் நடந்துள்ளது.

இதனால் தான் எப்போதும் அமெரிக்காவுக்குப் பயந்து அமெரிக்காவைச் சார்ந்தே முடிவு எடுக்கும் அரபு நாடுகள் புலிகள் முஸ்லிம் சமுதாய எதிரிகள் என்பதால் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. புலிகளின் முஸ்லிம் இனத்துவேஷம் உலக முஸ்லிமகள் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

10.04.2012. 10:33 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account