ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்
(பத்து ஆண்டுகளுகு முன் 2010ல் எழுதப்பட்ட ஆக்கம்)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் (இது தான் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) முன்னாள் மாநிலத் தலைவருமான மல்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார்.
பொதுவாக அநியாயமாக யார் கைது செய்யப்பட்டாலும் குரல் கொடுப்பதற்காகவும், களம் இறங்கி போராடுவதற்காகவும் இருந்த ஒரே அமைப்பாக அன்று தமுமுக மட்டுமே இருந்தது. இந்த இயக்கத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் பாதிக்கப்படும் போது கூட இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தது.
ஹாமித் பக்ரி இந்த இயக்கத்தின் ஆரம்ப கால தூண்களில் ஒருவராக இருந்தும், தமுமுக இயக்கத்தை நாடு முழுவதும் பிரச்சாரத்தின் மூலம் கொண்டு சென்ற பேச்சாளர்களில் ஒருவராகவும், பீஜே, ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர், ரிபாயி உள்ளிட்ட தமுமுகவில் அன்றைய தலைவர்களின் தனிப்பட்ட நண்பராக இருந்தும் ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டதற்காக அன்றைய தமுமுக கண்டன அறிக்கை விடவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட ஹாமித் பக்ரி வழக்குக்காக உதவி கேட்டு தமுமுகவுக்கு கடிதம் எழுதிய போதும் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
இது உண்மையில் அன்றைக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
யார் யாருக்கோ போராட்டம் நடத்திய தமுமுக இயக்கம் ஹாமித் பக்ரிக்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்ற கேள்வி நியாயமானது என்றாலும் அதற்குப் பகிரங்கமாக தமுமுக எந்தப் பதிலும் சொல்லவில்லை.
செயல் வீரர்கள் கூட்டத்தில் நெருக்கமானவர்கள் மத்தியில் மட்டும் தான் தமுமுக விளக்கம் அளித்ததே தவிர மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எந்த விளக்கத்தையும் தமுமுக அளிக்கவில்லை.
தமுமுக எப்படி ஹாமித் பக்ரியை கைவிட்டதோ அது போல் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பும் ஹாமித் பக்ரியைக் கை விட்டது. அவருக்காக எந்த உதவியும் செய்யவில்லை. மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளிப்படையான எந்த விளக்கத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தும் அளிக்கவில்லை.
தமுமுக அவரைக் கைவிட்டதிலும் தவ்ஹீத் ஜமாஅத் அவரைக் கைவிட்டதிலும் எனக்கும் பங்கு உண்டு. சொல்லப் போனால் அதிகப் பங்கு உண்டு. தமுமுக மீது பழியைப் போட்டு விட்டு நான் ஒதுங்க முடியும் என்றாலும் நானே சம்மந்தப்பட்ட விஷயத்தில் எனக்குப் பொறுப்பு இல்லை என்று மறுக்கும் கயமைத்தனம் பொய்யனுக்குத் தேவையாக இருக்கலாம். எனக்குத் தேவை இல்லை.
இது நம்ப முடியாத ஆச்சரியமாகவே மக்களுக்கு இருந்தது.
அப்போது தமுமுகவோ, தவ்ஹீத் ஜமாஅத்தோ வாய் திறந்திருந்தால் ஹாமித் பக்ரியின் நிலை இன்னும் மோசமாகப் போய் இருக்கும் என்பதால் இரண்டு இயக்கங்களும் அசாத்திய மவுனம் சாதித்தன.
ஆனால் இன்று எல்லாம் பழைய செய்தியாகி விட்டதால் இப்போது இந்த உண்மைகளைக் கூறுவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதால் இந்த உண்மைகளை நாம் சொல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. பொய்யன் கூட்டமும் இந்த உண்மைகள் வெளிவர வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதால் நாம் இந்த விஷயத்திலும் வாய் திறக்கும் அவசியம் திணிக்கப்பட்டு விட்டது.
இது குறித்த உள் விபரங்களுக்குச் செல்வதற்கு முன்னாள் ஹாமித் பக்ரி எதற்காகக் கைது செய்யப்பட்டார்? எப்படி அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது என்பதை நாம் விளக்க வேண்டியுள்ளது.
மவ்லவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி தென்காசியைச் சேர்ந்தவர். தமுமுகவில் நெல்லை மாவட்டத்தில் மாவட்டப் பொறுப்பை வகித்தவர். அவர் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் நம்முடைய தவ்ஹீத் பள்ளியில் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் ஹாமித் பக்ரி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திரப் போலீஸார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவரிடம் அல்லது கொல்லப்பட்டவரிடம் கைப்பற்றப்பட்ட செல் போனில் அப்துர் ரஹ்மான் ஷிப்லியின் போன் நம்பர் பதிவாகி இருந்ததன் அடிப்படையில் அவர் செய்யப்பட்டார்.
அவருக்காக நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று பேர்ணாம்பட் தமுமுக கிளை தெரிவித்த போது தமுமுக தலைவர்கள் இதற்காக போராட்டம் நடத்த வேண்டாம் கூறினார்கள். நானும் அதையே கூறி காரணத்தையும் விளக்கினேன். காரணத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் கூறினேன்.
இதன் பின்னர் அப்துர்ரஹ்மான் ஷிப்லி கொடுத்த தகவலின் படி தான் 2/12/2002 அன்று ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீஸ் படை குவித்து சோதனை செய்யப்பட்டது. அவர் நடத்திய தாவா செண்டரும் சோதனை இடப்பட்டது. அவர் முதல்வராக இருந்த ஆயிஷா சித்தீகா பெண்கள் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு காயல்பட்டணமே அல்லோல கல்லோலப்பட்டது.
இது குறித்து காயல்பட்டணம் தமுமுகவினரும், உள்ளூர் பிரமுகர்களும் தமுமுக தலமையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். ஏதாவது செய்யும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் தமுமுக இதில் இப்போது நாம் தலையிட முடியாது. 8/12/2002 அன்று பீஜே கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் உங்கள் ஊரில் நடக்க உள்ளதால் அபோது பீஜே வரும் போது அதற்கான காரணங்களை தமுமுக சார்பில் தெரிவிப்பார் என்று அனைவருக்கும் ஒரே பதில் சொல்லப்பட்டது.
ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட மறு நாளோ அல்லது அதே நாளிலோ காயல்பட்டிணம் ஜாமியுல் அஸ்ஹர் இமாம் மவலவி அப்துல் மஜீத் மஹ்ளரி கைது செய்யப்பட்டார். இதே காரணத்துக்காக அதிராம்பட்டிணம் தவ்பீக் என்பவரும். சென்னை மணடி ஜக்கரியா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
யாருக்கும் அறிமுகமில்லாத மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த இருவரோ, மூவரோ இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர். பின்னர் பின்னர் இந்த வழக்கு குற்றாலத்தில் ரகசியக் கூட்டம் நடத்திய வழக்காக மாற்றப்பட்டது.
மூன்று மவ்லவிகள் உள்பட பத்துக்கும் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும் தமுமுகவும், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தும் மவுனம் சாதித்தது.
அது மட்டுமில்லாமல் உணர்வு இதழில் தமுமுக சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பு இது தான்
இந்த அறிவிப்பு ஹாமித் பகரி கைது விஷயத்தில் தமுமுக தலையிடாது என்பது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியிடப்படும் போது தமுமுக தலைவராக ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ஹைதர் அலியும், பொருளாளராக பாக்கரும் இருந்தனர். நான் அமைப்பாளராக இருந்தேன்.
அனைவரும் சேர்ந்து தான் இந்த அறிவிப்பை வெளியிட்டோம். இதில் அனைவரும் சம பங்காளிகள் என்று இருந்தும் பொய்யன் (பாக்கர்) கூட்டம் வழக்கம் போல் ஹாமித் பக்ரிக்கு பீஜே அநீதி இழைத்து விட்டார் எனக் கூறி முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. ஹாமித் பக்ரியைக் கைவிட்டதில் பீஜேக்கு உரிய பங்கு போல் பொய்யருக்கும் உண்டு என்பதற்கு இது ஆதாரமாகும்.
அத்துடன் அதே பக்கத்தில் பெண்கள் மதரஸா பற்றிய அறிவிப்பு ஒன்றும் என் பெயரில் வெளியிடப்பட்டது. ஹாமித் பக்ரியின் இரண்டாம் மனைவி மதுரையில் நடத்திய பெண்கள் மதரஸாவுக்கு என் பெயரைப் பயன்படுத்தி வசூல் வேட்டை ந்டத்தியதால் அதற்கும், எனக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுவும் நிர்வாகிகள் அனைவரும் ஆலோசித்தே உணர்வில் வெளியிடப்பட்டது.
இந்த உணர்வு அறிக்கை பைண்டிங் செய்யப்படட் புத்தகத்தில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்டது. அதானல் ஒரப்பகுதி ஸ்கேனில் வரவில்லை. நாளை பைண்டிங்கை பிரித்து முழுமையாக வாசிக்கும் வகையில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுகிறேன்.
இப்படி ஹாமித பக்ரியையும் இன்னும் சிலரையும் நாங்கள் அனைவரும் சேர்ந்து கைவிடக் காரணம் என்ன? இன்ஷா அல்லாஹ் நாளை அதை விளக்குகிறேன்.
ஹாமித் பக்ரி கைது! கைவிட்ட தமுமுக!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode