Sidebar

26
Thu, Dec
34 New Articles

தானே புயலும் மமக ஜால்ராவும்

தமுமுக TMMK
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தானே புயலும் மமக ஜால்ராவும்

மமகட்சியின் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தானே புயல் வராதா என தமிழக மக்கள் ஏங்குவதாக சட்டசபையில் பேசியதாக தாங்கள் கூறும் செய்தியை கழகக் கண்மணிகள் மறுக்கின்றார்களே! உண்மையிலேயே அவர் அவ்வாறு பேசினரா?

- ரஹ்மான், தேவதானப்பட்டி

இந்தக் கேள்விக்குரிய பதிலை அறிவதற்கு அது குறித்து உணர்வில் எழுதியது என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம். எனவே உணர்வில் இது குறித்து எழுதப்பட்டதை எடுத்துக் காட்டிவிட்டு பதிலை அதன் கீழே வெளியிட்டுள்ளோம்.

இது குறித்து உணர்வில் எழுதப்பட்டது இது தான்:

தானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (?)

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!

ஆனால், இப்படி தானே புயல் தங்களது மாவட்டத்திற்கு வராதா என புயல் வராத மாவட்டங்களில் வசிக்கும் தமிழக மக்கள் ஏங்கித் தவிப்பதாக மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் என்பவர் சட்ட சபையில் முழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். பதிலுரையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு நன்றி தெரிவித்து, அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் சட்டசபையில் பேசினர்.

அப்போது ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கு ஏற்ப முதல்வருக்கு ஜால்ரா தட்டிப் பேசினார்கள். அப்போது தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வாத்தியார் அவர்கள் அதிமுககாரர்களே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு முதல்வருக்கு ஜால்ரா தட்டி, அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் ஜால்ரா தட்டுவதில் விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.

தானே வந்த வார்த்தைகள் :

ஆம்! : தானே புயல் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைப் பார்க்கும் போது, பிற மாவட்டங்களில் வசிப்போர், நமது மாவட்டத்தில் புயல் வரவில்லையே என்று, ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி ஜால்ரா தட்டுவதில் என்னை விஞ்ச ஆள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வாத்தியார்

இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த எம்.எல்.ஏ :

இதற்கு முன்பு எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சட்டசபைக்குச் சென்றுள்ளார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக உள்ளது வாத்தியார் அவர்களின் வர்ணனை.

தானே புயலால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்கும் வேலையில், அந்த மக்களின் மனம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாதிருக்கும் இவ்வேளையில் இது போன்ற புயல் தங்களது மாவட்டத்தில் வரவில்லையே என்று பிற மாவட்ட மக்கள் ஏங்குவதாக இவர் கூறியிருக்கும் கருத்தைப் பார்த்தால் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை விட, அம்மா அவர்கள் மீதும், எம்.எல்.ஏ பதவி சுகத்தின் மீதும் இவர் கொண்ட பாசப்புயலின் காரணமாக இவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நமக்கு பளிச்சென்று தெரிகின்றது.

இவர் இருக்க வேண்டிய இடம் சட்டசபையல்ல; கீழ்பாக்கம் மருத்துவமனை தான் என்பதும், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதோடு இவருக்கும் இவரது மனநிலையை சரி செய்ய மருத்துவ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் சமுதாய அக்கறை உள்ளவர்களின் தற்போதைய ஆசை.

சொன்னாலும் சொல்வார்:

நல்ல வேளை பிச்சைக்காரர்களுக்கு முதல்வர் அவர்கள் ஏதேனும் சலுகைகளை அறிவிக்காமல் போனார். அப்படி முதலைமைச்சர் பிச்சைக்காரர்களுக்கு ஏதேனும் சலுகைகளை அறிவித்தால், பிச்சையெடுக்காத மற்ற மக்கள் அனைவரும் தாங்களும் பிச்சைக்காரர்களாக இருந்திருக்கக் கூடாதா? என ஏங்குவதுதாக முதல்வருக்குப் புகழாராம் சூட்டினாலும் சூட்டுவார்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், கேன்சர் நோயாளிகளுக்கும் ஏதேனும் புதிய திட்டத்தையோ, புதிய சலுகைகளையோ முதலமைச்சர் அறிவித்தாரேயானால், நாமும் எய்ட்ஸ் நோயாளியாகவோ, கேன்சர் நோயாளியாகவோ இருந்திருக்கக் கூடாதா? என அனைத்து மக்களும் ஏங்குவதாகச் சொன்னாலும் சொல்வார்.

விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு கூட அடிக்கடி முதலமைச்சர் நிவாரண உதவித் தொகைகளை அறிவித்து வருகிறார். எனவே அதையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த உதவித் தொகைகளை பார்த்து தமிழக மக்கள் தங்களது வீட்டிலும் இழவு விழக்கூடாதா? என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் ஜால்ரா தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அளவுக்கு மானம்கெட்டுப்போய் ஜால்ரா தட்டும் ஒரு சட்டசபை உறுப்பினரை தமிழக முஸ்லிம் வரலாறு இப்போது தான் முதல் முறையாகச் சந்திக்கின்றது.

சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை :

இதற்கு முன்பு இருந்த சுயநல எம்.எல்.ஏ க்கள் மற்றும், சிறந்த ஜல்ராத்தட்டி எம்.எல்.ஏ க்கள், மற்றும் சிறப்பாக அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்த முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் அனைவரது சாதனை(?)களையும், தான் எம்.எல்.ஏவாகப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே வாத்தியார் அவர்கள் முறியடித்திருப்பது இவரது சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை. இந்த தனித்துவ(?) முத்திரையின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தையும், ஜால்ரா தட்டுவதிலும், அடிமைச்சாசனம் எழுதிக்கொடுப்பதிலும், முதல் இடத்தைப் பிடித்துள்ளார் வாத்தியார்.

இவரது இந்த அம்மா புகழ்மாலையைக் கேட்டுவிட்டு தானே புயலால் பாதிக்கப்படாத மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தானே முன்வந்து துடைப்பத்துடனும், பிய்ந்த செருப்புகளுடனும் வாத்தியாருக்கு வரவேற்பளிக்கக் காத்துக் கொண்டுள்ளனர். தானே புயல் வராதா? என தமிழக மக்கள் தற்போது எதிர்பார்க்கவில்லை; இவர் துடப்பத்தால் அடிவாங்க தங்கள் மாவட்டத்திற்கு வரமாட்டாரா? என்றுதான் தமிழக மக்கள் தற்போது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

மானம் என்பது துளியளவு கூட இல்லை:

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடனான கூட்டணியில் மமகட்சி இல்லை என்று ஜெயலலிதா அறிவித்த பிறகும் கூட மானம் கெட்டுப்போய் கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். அப்போதே தமிழக முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டனர் இவர்களுக்கு மானம் என்பது துளியளவு கூட இல்லை என்று.

அடித்து துவைத்தாலும், எட்டி மிதித்தாலும், காரித்துப்பினாலும், எங்களுக்கு எல்லாமே அம்மா தான் என்று இவர்கள் மானம்கெட்டு நிற்கும் நிலைபார்த்து சமுதாயம் இவர்களைக் காரி உமிழ்கின்றது. இருந்த போதிலும் நாங்கள் மானமிழந்து மரியாதை இழந்து, இன்னும் எதை வேண்டுமானாலும் அடகு வைத்தாவது எங்களுக்கு அம்மாவிடத்திலிருந்து வாரியத்தை வாங்கிவிடலாம் என்பதுதான் இவர்களது கனவு என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை. இப்படியெல்லாம் அதிமுககாரர்களையே விஞ்சக்கூடிய அளவுக்கு நீங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தினாலும் உங்களுக்கு வாரியப் பதவி கிடைக்குமா என்பது சந்தேகமே. அம்மா காலில் சாஷ்டங்கமாக விழுந்தால் எப்படியும் வாரியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தால் வாத்தியார் அதையும் செய்யத் தயாராகவே இருப்பார் என்பதற்கு இது அச்சாரமாக அமைந்துள்ளது.

எட்டி மிதிக்கும் போது, எட்டி மிதிப்பவரது காலைக் கட்டிப்பிடித்து, பார்த்து மிதியுங்கள் ஐயா, உங்கள் கால் வலிக்கப் போகின்றது என்று சொல்லும் மானம் கெட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதையும் தாண்டி இவர்கள் ஒருபடி கீழே போய், உங்களிடம் இப்படி மிதிவாங்க பல பேர் ஏங்கிக் கொண்டுள்ளார்கள் என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அப்படிதான் இவர்களது மானம்கெட்ட செயல்பாடு அமைந்துள்ளது.

விஜயகாந்துக்கு சொன்னது தான் வாத்தியாருக்கும் :

ஏதோ முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எனவே முஸ்லிம்களின் பிரதிநிதியாக நாம் இருக்கின்றோம். எனவே அம்மாவுடைய நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துவிடலாம் என்று வாத்தியார் தப்புக் கணக்கு போடுவாரேயானால், அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.

விஜயகாந்த் வெற்றி பெற்றதே அதிமுகவை வைத்துத் தான். தேமுதிகவிற்கு ஒதுக்கிய சீட்டுக்களில் அதிமுக நின்றிருக்குமேயானால் அதிமுக இன்னும் அதிக இடங்களைப் பிடித்திருக்கும் என்று சட்டசபையில் ஜெயலலிதா சொன்னது தேமுதிகவிற்கு மட்டுமல்ல; உங்களைப் போல ஜால்ரா தட்டிக் கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் சேர்த்துத் தான் என்பதை தற்போதைக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இவ்வளவு சொன்ன பிறகும், இவ்வளவு கேவலப்பட்ட பிறகும் அம்மா அம்மா என்று இவர் தனது சுயநலனுக்காக அம்மா புராணம் இவர்கள் பாடுகிறார் என்றால் மம கட்சியில் உள்ள மற்றவர்கள் இதை எப்படி சகித்துக் கொள்கிறார்கள்?

அரசியல் தான் தேவை என்று கருதும் மம கட்சியினர் இது போன்ற மானத்தை முழுமையாக கப்பலேற்றும் மம கட்சிக்கு முழுக்கு போட்டு விட்டு இவர்கள் அளவுக்கு மானத்தை விற்காத முஸ்லிம் லீக், தேசிய லீக் போன்ற கட்சிகளை நாடலாமே?

இவ்வாறு நாம் எழுதியது குறித்துத் தான் கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வியும் பதிலும் வருமாறு:

மமகட்சியின் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தானே புயல் வராதா என தமிழக மக்கள் ஏங்குவதாக சட்டசபையில் பேசியதாக தாங்கள் கூறும் செய்தியை கழகக் கண்மணிகள் மறுக்கின்றார்களே! உண்மையிலேயே அவர் அவ்வாறு பேசினரா?

- ரஹ்மான், தேவதானப்பட்டி

? மமகட்சியின் ஜவாஹிருல்லா பேசிய செய்தி தினமலர் உள்ளிட்ட பல நாளிதழ்களில் வந்துள்ளது. அதற்கான ஆதாரம் இதோ.

தினமலர் செய்தி

ஜவாஹிருல்லா - மனித நேய மக்கள் கட்சி: தானே புயல் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைப் பார்க்கும் போது, பிற மாவட்டங்களில் வசிப்போர், நமது மாவட்டத்தில் புயல் வரவில்லையே என்று, ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 4-2012

தினபூமி செய்தி

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி):- தானே புயல் தொடர்பாக முதல்வர் எதிர்க்கட்சி துணை தலைவரிடம் எனது பதிலுரையில் நீங்களே அசந்து போவீர்கள் என்று கூறி இருந்தார். முதல்வரின் நிவாரண பணிகள் அறிவிப்புகளை பார்க்கும்போது எங்கள் மாவட்டத்தை புயல் தாக்கி இருக்க கூடாதா? என்று ஏக்கம் ஏற்படுகிறது.

பிப்ரவரி 4-2012

ஆனால் நீங்கள் கேள்வி கேட்ட பிறகு தான் தமுமுகவின் வெப்சைட்டைப் பார்த்தோம். வாத்தியாருக்கே வெட்கம் வந்து விட்டது போலும். மற்ற விஷயங்களை அப்படியே போட்டு விட்டு தானே புயல் பற்றி தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பான அறிவிப்புகளைச் செய்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், இந்த அரசுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசியதாகப் போட்டுள்ளார்கள்.

தான் ஆற்றிய உரையை வெளியிட தானே வெட்கப்படும் அளவுக்கு கேவலத்தை இவர்கள் அடைந்துள்ளனர்.

ஆனால் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமுமுக வெப்சைட்டில் அவர் பேசிய முழு உரையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தினமலரில் வந்தது போலவே வாசகங்கள் உள்ளன. இரண்டுக்கும் ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட தமுமுக வெப்சைட்

அந்தோனியாரை வழிபடும் முஸ்லிம்கள்

அதுமட்டுமல்ல. சட்டமன்றத்தில் இவர் செய்த சங்கநாதம் என்ன தெரியுமா? கச்சத்தீவில் புனித அந்தோனியார் கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் போகிறார்கலாம். அதனால் கச்சத்தீவுக்கு போக வசதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். கிறித்தவர்கள் வழிபாடு செய்கிறார்கள் என்று கூறினால் அதை இவர்கள் ச்மாளிக்கலாம். ஆனால் முஸ்லிம்களும் போகிறார்கள் என்று இவர் கூறுகிறார் என்றால் இவரை என்னவென்பது? அதுவும் திருவிழாவில் கலந்து கொள்ள செல்கிறார்கள் அவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருப்பார்கள்? இதோ அவர் கூறியதைப் பாருங்கள்

எனது ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட கச்சதீவில் மாண்புமிகு முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் கூறுகிறேன் கச்சதீவில் ஆண்டுதோறும் புனித அந்தோணியர் கோவில் திருவிழா நடைபெறுகின்றது. இந்த ஆண்டு மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் அந்த திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மதங்களைச் சேர்ந்த 5000 பேர் செல்வார்கள். கடந்த காலங்களில் இந்த யாத்திரிகரகள் மீன் பிடி படகுகளிலும் வல்லங்களிலும் தான் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் பாதுகாப்பற்ற வகையில் பயணம் செய்கிறார்கள். இந்த ஆண்டு அந்தத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கு செல்லக்கூடிய பயணிகளுக்காக ஒரு கப்பல் கோஸ் கார்டு அல்லது தனியார் கப்பலை ஏற்பாடு செய்து அனைத்து யாத்திரீகர்களையும் அழைத்துச் செல்ல ஆவணச் செய்ய வேண்டுமென மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்கள் மாண்புமிகு அவைத் தலைவர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

லால்பேடை எக்ஸ்பிரஸ் மற்றும் திருவாரூர் மாவட்ட தமுமுக வெப்சைட்

மற்றொரு தில்லுமுல்லு

மமக சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் தானே புயல் குறித்து பேசியது உண்மையா என்று நாம் ஒரு கேள்வி வந்த போது தான் நாம் அவர்களின் இணைய தளத்தில் இதை வெளியிட்டுள்ளார்களா என்று தேடிப்பார்த்தோம். அதைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் தமுமுக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதை பெருமையோடு வெளியிட்டிருந்தார்கள். நாம் இது குறித்து விமர்சனம் செய்த பின்னர் அதை தூக்கி விட்டு வேறுவிதமாக மாற்றி விட்டனர்.

நாம் விமர்சனம் செய்வதற்கு முன்னர் அவர்கள் வெளியிட்டது

இவரது எல்லை மீறிய ஜால்ராவை விமர்சனம் செய்த பின்னர் அதை எப்படு மக்களுக்கும் தங்கள் தொண்டர்களுக்கும் இருட்டடிப்பு செய்துள்ளனர் என்பதைக் கீழே பாருங்கள்

22.02.2012. 22:55 PM

இதை பதிவிறக்கம் செய்ய
onlinepj

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account