அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?
புகாரி நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
صحيح البخاري
5445 – حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ اليَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வா (ரக) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 5445
صحيح البخاري
5768 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمٌ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ سُمٌّ، وَلَا سِحْرٌ ذَلِكَ اليَوْمَ إِلَى اللَّيْلِ» وَقَالَ غَيْرُهُ: «سَبْعَ تَمَرَاتٍ»
மற்றொரு அறிவிப்பில் அன்று இரவு வரை இடரளிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
பார்க்க நூல்: புகாரி 5768
மேற்கண்ட செய்தி திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகளில் ஒன்றாகும்.
இது எப்படி திருக்குர்ஆனுக்கு முரண்படுகிறது? என்று பார்ப்போம்.
அல்லாஹ்வின் வார்த்தை முழுவதும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதாகும். அல்லாஹ்வின் செய்திகளில் பொய் கலப்பு இருக்காது.
அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
திருக்குர்ஆன் 4:87
உலகப் பொருட்கள் சம்மந்தமாக ஒரு செய்தி சொல்லப்பட்டால் அதை உண்மையா பொய்யா என்று யாரும் சோதித்து அறிய முடியும். பேரீச்சம்பழம் உலகில் கிடைக்கும் பொருட்களில் ஒன்றாகும். இதை சோதித்துப் பார்த்தால் இச்செய்தி உண்மையல்ல என்பது தெரிய வரும்.
அஜ்வா பேரீச்சம்பழங்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தப் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு விஷத்தைக் குடித்தால் அது பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்; அப்போதுதான் நபிகளார் சொன்ன இந்தச் செய்தி உண்மையாகும்;
இந்தச் செய்தியை உண்மை என்று நம்பக் கூடியவர்களிடம் அஜ்வா பழத்தைச் சாப்பிட்டு, விஷத்தைக் குடித்துக் காட்ட்டுங்கள்; விஷம் வேலை செய்கிறதா என்று பார்க்கலாம் என்று கேட்டால் ஓட்டம் எடுக்கிறார்கள்.
அஜ்வா சாப்பிட்டு விட்டு விஷத்தை அருந்தினால் விஷம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிதர்சனமான உண்மைக்கு மாற்றமாக இது அமைந்துள்ளதால் அல்லாஹ்வைவிட உண்மை பேசக்கூடியவன் யார் என்ற வசனத்திற்கு முரணாக உள்ளதை நாம் அறியலாம்.
صحيح مسلم
1 – «مَنْ حَدَّثَ عَنِّى بِحَدِيثٍ يُرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ». حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ. ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ أَيْضًا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ وَسُفْيَانَ عَنْ حَبِيبٍ عَنْ مَيْمُونِ بْنِ أَبِى شَبِيبٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَلِكَ.
பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல் : முஸ்லிம் 1
இது ஆதாரப்பூர்வமானது என்று சொல்பவர்களும் மனதார நம்பாத ஹதீஸாக உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
ஆனாலும் இதை எப்படியாவது சரியான ஹதீஸ் என்று மக்களை நமப வைக்க வேண்டும் என்பதற்காக சில எதிர் வாதங்களை எடுத்து வைக்கின்றார்கள். பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டி அந்த எதிர் வாதத்தை முன்வைக்கிறார்கள்.
صحيح البخاري
2276 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ [ص:93] مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து சூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம் என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்டுவிட்டு, எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல் : புகாரி 2276
மேற்கண்ட செய்தியில் தேள் கடித்த ஒருவருக்கு அல்ஹம்து சூராவை ஓதிப் பார்த்தவுடன் அவருக்குக் குணமாகியுள்ளது. அந்த ஹதீஸின் அடிப்படையில் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது ஒரு தேளைப் போட்டுக் கடிக்க விடுகின்றோம்; தேள் கடித்தவுடன் அல்ஹம்து சூராவை ஓதி அந்த விஷத்தை முறிப்பீர்களா? இந்த சவாலுக்குத் தயாரா?
இதுதான் அவர்களின் எதிர்வாதம்.
மேற்கண்ட செய்தியில் தேள் கடிக்கு அல்ஹம்து சூராவைக் கொண்டு ஓதிப்பார்த்தால் ஷிஃபா (நலம்) கிடைக்கும் என்று நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.
இதற்கும் அஜ்வா சம்மந்தமான செய்திக்கும் பெரிய வேறுபாடு உள்ளதை இவர்கள் விளங்காத காரணத்தால் இந்த எதிர்வாதத்தை வைக்கிறார்கள்.
அல்ஹம்து ஓதுதல் என்பது அஜ்வா போல் உலகப் பொருள் அல்ல. ஒரு பொருளில் ஒரு தன்மை உள்ளது என்று சொன்னால் அந்தப் பொருளை முஸ்லிம் சாப்பிட்டாலும், முஸ்லிமல்லாதாவர் சாப்பிட்டாலும் அதில் உள்ள பயன் கிடைத்து விடும். பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து உள்ளது என்றால் அந்தச் சத்து கிடைப்பதற்கு இறையச்சம், விசுவாசம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அல்ஹம்து சூரா என்பது ஒரு உலகப் பொருள் அல்ல. அது பலனளிக்க வேண்டுமானால் அதை ஓதுபவரின் ஈமான், இறையச்சம், தூய எண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பயனளிக்கும். இதை எனவே இதை சோதித்துப் பார்க்கக் கூடாது; சவால் விடக் கூடாது.
ஒருவர் அல்ஹம்து ஓதி அதனால் விஷம் இறங்காவிட்டால் அவரது ஈமானில்; பலவீனம் காரணமாக பயனளிக்காமல் போய்விட்டது என்று கருத வேண்டும். அப்படி கருதும் போது அந்த ஹதீஸின் கருத்து பொய்யாகாது.
ஆனால் அஜ்வாவை யார் சாப்பிட்டாலும் அதற்குச் சொல்லப்பட்ட பயன் கிடைக்க வேண்டும். கிடைக்காவிட்டால் அது பொய் என்பது உறுதியாகி விடும்.
அஜ்வா பேரீச்சம்பழத்தில் விஷ முறிவு ஏற்படுத்தும் தன்மை உள்ளதாக இந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது; அப்படியானால் அதை ஆய்வு செய்து ஆய்வகத்தில் கொடுத்து சோதனை நடத்தி அதில் விஷ முறிவுத்தன்மை உள்ளதை நிரூபிக்க முடியும். அப்படியும் அவர்கள் நிரூபிக்கவில்லை.
அல்ஹம்து சூராவை ஓதுவதை லேபில் சோதித்துப் பார்க்க முடியாது. சோதித்துப் பார்க்கும் பொருள் அல்ல. நம்பிக்கை கொள்ளும் வணக்கமாகும்.
அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode