354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?
இவ்வசனத்தில் (74:30) "அதன் மீது 19 பேர் உள்ளனர்'' என்று கூறப்படுவது நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறது. இதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் குழப்பமோ, சந்தேகமோ இல்லை.
ஆனால் சமீப காலத்தில் வாழ்ந்து, சுட்டுக் கொல்லப்பட்ட ரஷாத் கலீஃபா என்பவன் இதற்குப் புது விளக்கம் என்ற பெயரில் உளறினான். "இந்த உளறலைக் கண்டுபிடித்ததால் நான் ஒரு இறைத்தூதன்'' எனவும் வாதிட்டான்.
எனவே இது பற்றி குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக விபரமாக இதை இங்கே விளக்குகிறோம்.
இந்த வசனம் தொடர்பாக ரஷாத் கலீஃபா என்ன கூறுகிறான் என்பதை முதலில் பார்ப்போம்.
"அதன் மீது பத்தொன்பது இருக்கிறது'' என்றால் திருக்குர்ஆன் மீது பத்தொன்பது இருக்கிறது என்பது கருத்து. திருக்குர்ஆன் மீது பத்தொன்பது உள்ளது என்றால் பத்தொன்பது என்ற எண்ணில் திருக்குர்ஆன் கட்டுப்பட்டுள்ளது; இது தான் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய பெரிய சான்றாகும்.
* திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளன. 114 என்ற எண் பத்தொன்பதால் மீதமின்றி வகுபடும்.
* பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வாக்கியம் திருக்குர்ஆனில் 114 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் 19ஆல் மீதமின்றி வகுபடும்.
* பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் உள்ள எழுத்துக்களைக் கூட்டினால் அதுவும் பத்தொன்பதால் மீதமின்றி வகுபடும்.
இப்படி திருக்குர்ஆனில் எதை எடுத்துக் கொண்டாலும் அது பத்தொன்பதால் மீதமின்றி வகுபடுகிறது. இந்தக் கணிதக் கட்டமைப்பு தான் இது இறைவேதம் என்பதற்குச் சான்றாகும்.
நவீன காலத்தில் திருக்குர்ஆனை இறைவேதம் என்று நிரூபிக்க இந்த அற்புதக் கண்டுபிடிப்பை இறைவன் எனக்கு வழங்கியுள்ளான். எனவே திருக்குர்ஆனை மெய்ப்பிக்கும் தூதராக - ரசூலாக - நான் இருக்கிறேன்.
இது தான் ரஷாத் கலீஃபா என்பவனின் வாதமாகும்.
19 கணக்குக்கு ஒத்துவரவில்லை என்பதால் திருக்குர்ஆனில் இரு வசனங்களை நீக்க வேண்டும்; அதை நீக்கி விட்டுப் பார்த்தால் 19க்குள் திருக்குர்ஆன் அடங்குகிறது எனவும் இவன் உளறினான்.
உலகம் முழுவதும் இந்த 19 பற்றியே அன்றைய காலத்தில் பேச்சாக இருந்தது. ஆயினும், இது ஒரு அபத்தம் என்பது சில வருடங்களிலேயே தெரிந்து அமுங்கி விட்டது.
இங்கே மூன்று விஷயங்களை நாம் தெளிவுபடுத்தவுள்ளோம்.
1. இவ்வசனத்துக்கு ரஷாத் கலீஃபா கூறிய விளக்கம் சரியானது தானா?
2. திருக்குர்ஆன் 19-க்குள் அல்லது கணிதக் கட்டமைப்புக்குள் அடக்கமாகியுள்ளது என்று ரஷாத் கலீஃபா கூறியது உண்மையா?
3. ரஷாத் கலீஃபா என்பவன் ஒரு மனநோயாளி என்பதற்கு அவனது எழுத்துக்களிலிருந்தே சான்றுகள்.
இப்போது முதல் விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.
அதன் மீது, அதாவது திருக்குர்ஆனின் மீது பத்தொன்பது உள்ளது எனக் கூறி முழுக்குர்ஆனும் 19க்குள் அடக்கம் என்று இவன் வாதிட்டது முற்றிலும் தவறாகும்.
அரபுமொழியை அரை குறையாகத் தெரிந்தவர்கள் கூட இவ்வசனத்தின் பொருள் இதுவாக இருக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில் அரபு மொழி இலக்கண விதியின்படி ரஷாத் கலீஃபா கூறுவது தவறாகும்.
இந்த விளக்கம் எவ்வாறு தவறு என்பதைப் புரிந்து கொள்ள அரபு மொழி இலக்கணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
மனிதர்களில் ஆண்களைக் குறிப்பிட 'ன்' என்பதையும் பெண்களைக் குறிப்பிட 'ள்' என்பதையும் தமிழில் நாம் பயன்படுத்துகிறோம். உதாரணம்: அவன் - அவள்; வந்தான் - வந்தாள்.
ஆனால் மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களைப் பற்றியோ, உயிரற்ற ஜடப் பொருள்களைப் பற்றியோ, ஜடமில்லாதவற்றைப் பற்றியோ பேசும் போது இவ்வாறு நாம் பயன்படுத்துவதில்லை. மாறாக அது, இது என்ற சொற்களைத் தான் பயன்படுத்துகிறோம்.
ஒரு மாடு செத்து விட்டது என்றால் மாடு செத்தான் அல்லது செத்தாள் எனக் கூறாமல் செத்தது எனக் கூறுவோம். செத்தது காளை மாடாக இருந்தாலும், பசு மாடாக இருந்தாலும் செத்தது என்றே நாம் கூறுவோம்.
ஆனால் அரபுமொழி இந்த விஷயத்தில் முற்றிலும் வேறுபட்டதாகும்.
அரபு மொழியில் அவன் - அவள் என்ற இரு வகைகள் தான் உள்ளனவே தவிர 'அது' என்ற மூன்றாவது வகை கிடையாது.
நாம் மனிதர்களைப் பற்றிப் பேசினாலும், மற்றவைகளைப் பற்றிப் பேசினாலும் அவன் - அவள் என்ற இரு வகைகளில் மட்டும் தான் அரபுமொழியில் பேச முடியும்.
சூரியன் உதித்தது எனக் கூறாமல் உதித்தாள் என்று கூற வேண்டும். சந்திரன் உதித்தது எனக் கூறாமல் சந்திரன் உதித்தான் எனக் கூற வேண்டும்.
காற்று ஆண்பாலா? பெண்பாலா? என்று தமிழனிடம் கேட்டால் அவன் நம்மை ஒரு மாதிரியாகப் பார்ப்பான். அரபியரிடம் கேட்டால் காற்று பெண்பால் என்று சாதாரணமாகக் கூறி விடுவார்கள். காற்று வீசினாள் என்று தான் அரபுமொழியில் கூற வேண்டும்.
எந்தச் சொல்லாக இருந்தாலும் எதை ஆண்பாலாகப் பயன்படுத்துவது, எதைப் பெண்பாலாகப் பயன்படுத்துவது என்பது 90 சதவிகிதம் அரபியருக்குச் சர்வசாதாரணமாகத் தெரியும்.
நமது கை உடைந்து விட்டால் கை உடைந்தது என்று அரபுமொழியில் கூற முடியாது. அவ்வாறு கூற அரபு மொழியில் எந்தச் சொல்லும் கிடையாது. கை உடைந்தாள் என்றும் மூக்கு உடைந்தான் என்றும் கூற வேண்டும். ஏனெனில், அரபுமொழியில் கை பெண்பால். மூக்கு ஆண்பால்.
திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்யும் போது நமது மொழிக்கேற்ப 'அது' 'இது' என்று நாம் கூறுவோம். ஆனால் மூலத்தில் அவன், இவன் அல்லது அவள், இவள் என்று தான் கூறப்பட்டிருக்கும்.
மனிதர்களைத் தவிர மற்றவை குறித்து அவன் எனக் கூறப்பட்டாலும், அவள் எனக் கூறப்பட்டாலும் தமிழில் 'அது' என்று தான் மொழி பெயர்க்க முடியும்.
இதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட வசனத்தை ஆராய வேண்டும். 'அதன் மீது' என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் 'அலைஹா' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
இதன் நேரடிப் பொருள் 'அவள் மீது' என்பதாகும். 'அலைஹி' என்றால் 'அவன் மீது' என்று பொருள். தமிழில் இரண்டையும் 'அதன் மீது' என்று தான் மொழிபெயர்ப்போம்.
மூலத்தில் 'அவள் மீது' என்று பெண்பாலாகக் கூறப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு இன்னொரு விஷயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அரபு மொழியில் குர்ஆன் என்ற சொல் ஆண்பாலாகும். குர்ஆனைக் குறிக்கும் திக்ர், கிதாப், புர்கான் போன்ற சொற்களும் ஆண்பாலாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
குர்ஆனைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், குர்ஆன் வழி காட்டுவான், அவனிடம் நல்ல அறிவுரை உள்ளது. ‘அவன் மீது’ என்பது போல் தான் அரபுமொழியில் பேச வேண்டும்.
குர்ஆன் என்ற சொல்லும், குர்ஆனைக் குறிக்கும் ஏனைய சொற்களும் திருக்குர்ஆனில் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே அதன் மீது எனத் தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் மூலத்தில் அவள் மீது என்று பெண்பாலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் நிச்சயம் அது குர்ஆனைக் குறிக்கவே முடியாது. 'அதன் மீது' என்ற தமிழாக்கத்தைக் காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். அரபுமொழி தெரிந்தவர்களிடம் குர்ஆனைப் பெண்பாலாகப் பயன்படுத்தினால் அவ்வாறு பயன்படுத்தியவனின் அறியாமையை எண்ணிச் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள்.
அரபுமொழியின் இலக்கணப்படி 'அதன் மீது' என்பது குர்ஆனைக் குறிக்க முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
'குர்ஆன் மீது 19 உள்ளது' என்றால் தான் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் குர்ஆன் அமைந்துள்ளதை இது குறிக்கிறது என்ற வாதம் எடுபடும். இது குர்ஆனையே குறிக்கவில்லை என்றால் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் குர்ஆன் அமைந்துள்ளது என்ற வாதம் எடுத்த எடுப்பிலேயே அடிபட்டு விடுகிறது.
அதன் மீது என்ற சொல் குர்ஆனைக் குறிக்கவில்லை என்றால் வேறு எதைக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
19 பற்றி பேசும் முப்பதாவது வசனம் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ள 24-ம் வசனத்திலிருந்து 31-ம் வசனம் வரை கவனித்தால் போதும். யாருடைய விளக்கவுரையும் தேவையில்லாமல் விளங்கி விடும்.
இங்கே 24, 25 வசனங்களில் குர்ஆன் பற்றியும்,
26, 27 வசனங்களில் நரகம் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
குர்ஆனைப் பற்றிப் பேசும் இரண்டு வசனங்களிலும் ஹாதிஹி (இவள்) என்ற பெண்பால் சொல்லைப் பயன்படுத்தாமல் 'ஹாதா' (இவன்) என்ற ஆண்பால் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
அரபுமொழியில் நரகத்தைக் குறிக்கும் ஸகர், ஜஹன்னம், நார் போன்ற சொற்கள் பெண்பால் சொற்களாகும்.
அதன் மீது என்பதைக் குறிக்க அலைஹா என்று பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளதால் குர்ஆனின் மீது என்று பொருள் கொள்வது அரபு இலக்கணப்படி தவறாகும். நரகம் என்பது பெண்பாலாக உள்ளதால் நரகின் மீது என்று தான் பொருள் கொள்ள முடியும். குர்ஆன் 19 என்ற கட்டமைப்புக்குள் உள்ளது என்று இவ்வசனத்தில் கூறப்படவே இல்லை.
நரகத்தின் மீது பத்தொன்பது உள்ளது என்று தான் இவ்வசனம் கூறுகிறது. நரகின் மீது 19 என்றால் அதன் விளக்கம் என்ன?
பத்தொன்பது உள்ளனர்.
பத்தொன்பது உள்ளது.
என்று கூறுவதானால் அரபியில் இரண்டையும் ஒரே மாதிரியாகத் தான் கூற வேண்டும்.
பத்தொன்பது பேர் உள்ளனர் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாம். பத்தொன்பது உள்ளது என்று அஃறிணையாகவும் பொருள் கொள்ளலாம்.
நரகில் அவனை நுழைப்பேன். அதன் மீது பத்தொன்பது பேர் உள்ளனர் என்பதே இதன் சரியான பொருள். 19 பேர் உள்ளனர் என்று கூறி விட்டு நரகின் காவலர்களாக வானவர்களையே நாம் நியமித்துள்ளோம் என்று கூறப்படுவதால் நரகின் காவலர்களுடைய எண்ணிக்கை 19 என்பது இவ்வசனம் சொல்லும் விஷயமாகும்.
பத்தொன்பது பேர் நரகின் காவலர்களாக நியமிக்கப்பட்டாலும் உமது இறைவனின் படை கணக்கிலடங்காது என 31வது வசனம் முடிகிறது. 19 வானவர்கள் தான் இறைவனிடம் உள்ளனர் என்று எண்ணி விடதீர்கள். உமது இறைவனின் படையை யாராலும் எண்ண முடியாது என்ற வாசகம் இதை உறுதிப்படுத்துகிறது.
எனவே இது குர்ஆனைப் பற்றியோ, அது பத்தொன்பதுக்குள் அடக்கம் என்பது பற்றியோ கூறும் வசனமே அல்ல என்பதால் இதைச் சான்றாகக் காட்டி ரஷாத் கலீஃபா எடுத்து வைத்த எல்லா வாதங்களும் அடிப்பட்டுப் போய் விடுகின்றன.
ரஷாத் கலீஃபா கூறியது போல் பத்தொன்பதில் எல்லாமே அடங்கினாலும் அதற்கும், இவ்வசனத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அதை ஒரு சிறப்பாக இறைவன் ஆக்கியதாகக் கூற முடியாது.
குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளது என்ற வாதத்துக்கு எந்த வசனத்தை இவன் சான்றாகக் காட்டினானோ அதற்கும், இவனது வாதத்துக்கும் சம்மந்தமில்லை என்பதே இவனுக்குப் போதுமான பதிலாகும்.
ஆனாலும் இவன் சொன்னது போல் குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா என்பதையும், இவன் எடுத்துக் காட்டும் கணக்குகள் சரியானவையா என்பதையும் அலசுவோம்.
அவன் கூறியவாறு முழுக்குர்ஆனும் 19 என்ற கட்டமைப்புக்குள் அடங்கியுள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை. ரஷாத் கலீஃபா சுமார் 50 இடங்களைத் தான் பத்தொன்பதுக்குள் அடங்குவதாக எடுத்துக் காட்டியுள்ளான். எஞ்சியுள்ள பல்லாயிரம் வசனங்களோ, அவ்வசனங்களில் அடங்கியுள்ள வார்த்தைகளோ, அவ்வார்த்தைகளில் அடங்கியுள்ள எழுத்துக்களோ 19க்குள் அடங்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
முழுக்குர்ஆனுமே 19 என்ற கட்டமைப்புக்குள் அடக்கமாகியுள்ளது என்பது தான் ரஷாத் கலீஃபாவின் வாதம். இவ்வாறு வாதிடுபவன் சுமார் ஐம்பது இடங்களில் தான் 19 என்ற கட்டமைப்புக்குள் குர்ஆன் அடங்கியுள்ளதாகக் காட்டுகிறான். இலட்சக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட குர்ஆனில் இவன் தேடியது போல தேடினால் 50-க்கு மேற்பட்ட இடங்களில் 18க்குள் அடக்கமாவதைக் காணலாம். இது போல் ஒவ்வொரு எண்ணிலும் அடக்கமாகும் சில வார்த்தைகள் கிடைக்காமல் போகாது.
இந்த அடிப்படை உண்மை அவனுக்கும் தெரியவில்லை. அவனது உளறலை ஏற்றிப் பிடிப்பவர்களுக்கும் தெரியவில்லை.
சில வார்த்தைகள் 19 என்ற கட்டமைப்புக்குள் அடங்குகிறதே என்று யாரேனும் வியப்பாகக் கேட்டால் இது போல் 19 மட்டுமின்றி எல்லா எண்களிலும் அடங்கும் வார்த்தைகள் குர்ஆனில் உள்ளன என்பதே இதற்குப் போதுமான பதிலாகும்.
(19ஆல் வகுபடுவதில் எந்த அற்புதமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக பைபிளிலும் 19ஆல் வகுபடும் பல சொற்களை நாம் கண்டுபிடித்து வைத்துள்ளோம்)
எனவே 19 என்ற கட்டமைப்புக்குள் குர்ஆன் அடங்கியுள்ளதாக ரஷாத் கலீஃபா கண்டுபிடித்துக் கூறியிருக்கிற விபரங்கள் எவ்வளவு அபத்தமாக உள்ளன என்பதைக் காண்போம்.
திருக்குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இந்த எண் 19ஆல் மீதமின்றி வகுபடும். (6*19=114)
114 அத்தியாயங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது ஒன்பதாம் அத்தியாயத்தில் இடம் பெறவில்லை. எனவே 113 பிஸ்மில்லாஹ் தான் வருகிறது. இது 19ஆல் மீதமின்றி வகுபடாதே என்று இவன் தேடிப் பார்த்தானாம். 27:30 வசனத்தின் இடையே கூடுதலாக ஒரு பிஸ்மில்லாஹ் இடம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தானாம். ஆக, மொத்தம் 114 பிஸ்மில்லாஹ் வந்து விட்டதாம். 6*19=114 என்ற கணக்கில் இது அடக்கமாகி விட்டதாம்.
இந்த இரண்டு கணக்குகளும் சரியானவையே. 114 அத்தியாயங்கள் குர்ஆனில் இருப்பதால் அது 19ஆல் வகுபடத் தான் செய்யும்.
114 என்பது 19ஆல் மீதமின்றி வகுபடுவது உண்மை தான். 114 என்பது 6ஆலும் மீதமின்றி வகுபடும். 3ஆலும் மீதமின்றி வகுபடும். 2ஆலும் மீதமின்றி வகுபடும். 38ஆலும் மீதமின்றி வகுபடும். 57ஆலும் மீதமின்றி வகுபடும். 19ஆல் மட்டும் வகுபட்டு வேறு எந்த எண்ணாலும் வகுபடாமல் இருந்தால் தான் 19 ஆல் வகுபடுகிறது என்று சிறப்பித்துச் சொல்ல முடியும்.
இத்துடன் அவன் நிறுத்திக் கொள்ளவில்லை. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் அடங்கியுள்ள ஒவ்வொரு சொல்லையும் எண்ணிப் பார்த்தானாம். அதுவும் 19ஆல் மீதமின்றி வகுபடுவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தானாம்.
அதாவது பிஸ்மி, அல்லாஹ், ரஹ்மான், ரஹீம் ஆகிய சொற்கள் குர்ஆனில் எத்தனை இடத்தில் வந்துள்ளன என்று எண்ணிப் பார்த்தானாம். என்னே ஆச்சரியம்! அவை அனைத்தும் 19க்குள் அடங்குவதைக் கண்டு அதிசயித்தானாம்!
அதாவது 'அல்லாஹ்' என்ற சொல் மொத்தக் குர்ஆனிலும் 2698 தடவை வந்துள்ளதாம். இந்த எண் 19ஆல் 142 தடவை மீதமின்றி வகுபடுகிறது என்று அவன் கூறியுள்ளான். (142*19=2698)
2698 தடவை என்று மொட்டையாக அவன் கூறவில்லை. எந்தெந்த வசனத்தில் 'அல்லாஹ்' என்ற சொல் இடம்பெற்றுள்ளது என்ற பட்டியலையும் தனது நூலில் அவன் வெளியிட்டுள்ளான். இவன் வெளியிட்டுள்ள நூலில் 30ஆம் பக்கம் முதல் 63ஆம் பக்கம் வரை 34 பக்கங்களில் அல்லாஹ் என்ற சொல் இடம் பெற்ற வசனங்களைப் பட்டியலிடுகிறான்.
'அல்லாஹ்' என்ற சொல் இடம் பெற்ற பல வசனங்களை இந்தப் பட்டியலில் இருட்டடிப்புச் செய்துள்ளான்.
'அல்லாஹ்' என்ற சொல் இடம் பெறாத வசனங்களில் 'அல்லாஹ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதாகப் புளுகி இருக்கிறான். இன்னும் பல தில்லுமுல்லுகளைச் செய்து 142*19=2698 என்று கணக்குக் காட்டியுள்ளான்.
உதாரணத்திற்குச் சில தில்லுமுல்லுகளை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.
25வது அத்தியாயம் 68வது வசனத்தில் 'அல்லாஹ்' என்ற சொல் ஒரு தடவை இடம் பெற்றதாக இவன் கூறியுள்ளான். ஆனால் இவ்வசனத்தில் 'அல்லாஹ்' என்ற சொல் இரண்டு தடவை இடம் பெற்றுள்ளது.
40வது அத்தியாயம் 74வது வசனத்தில் 'அல்லாஹ்' என்ற சொல் ஒரு தடவை இடம் பெற்றதாக இவன் குறிப்பிட்டுள்ளான். ஆனால் இவ்வசனத்தில் 'அல்லாஹ்' என்ற சொல் இரண்டு தடவை இடம் பெற்றுள்ளது.
46வது அத்தியாயம் 23வது வசனத்தில் 'அல்லாஹ்' என்ற சொல் இரண்டு தடவை இடம் பெற்றுள்ளதாகக் கணக்குக் காட்டியுள்ளான். ஆனால் இவ்வசனத்தில் ஒரு தடவை தான் 'அல்லாஹ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
இவனது இன்னொரு பித்தலாட்டத்தையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது 9வது அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்கள் இடைச்செருகல் என்று இவன் வாதிட்டான். குர்ஆனின் மொத்த வசனங்களை 19ஆல் வகுக்கும் போது இரண்டு மீதம் வருகின்றது. எனவே ஒன்பதாம் அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்கள் குர்ஆன் அல்ல என்பது இவனது முக்கியமான வாதம்.
இவ்வாறு வாதிட்ட இவன் இந்தப் பட்டியலில் 9:129வது வசனத்தையும் குறிப்பிடுகிறான். அதில் அல்லாஹ் என்ற சொல் ஒரு தடவை இடம் பெற்றுள்ளது. இவனது வாதப்படி இவ்வசனம் குர்ஆனில் உள்ளது அல்ல.
இவனது பட்டியலை இவன் கூட்டிப் பார்த்தான். 2697 தான் வருகிறது. இது பத்தொன்பதால் வகுபட ஒன்று குறைகிறது. உடனே எதைக் குர்ஆனில் உள்ளது அல்ல என்று கூறினானோ அந்த வசனத்தையும் கணக்கில் சேர்த்து 2698ஆக ஆக்கிவிட்டான்.
ஆக இவன் கூறிய எண்ணிக்கையில் அல்லாஹ் என்ற சொல் திருக்குர்ஆனில் இடம்பெறவில்லை. அது 19 ஆலும் வகுபடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
'ரஹீம்' என்ற சொல் குர்ஆனில் மொத்தம் 115 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இவனோ 114 என்று குறிப்பிட்டு பட்டியலையும் வெளியிட்டுள்ளான். இப்பட்டியலில் 9:128 வசனத்தை அவன் சேர்க்கவில்லை. இவ்வசனத்தில் ரஹீம் என்ற சொல் ஒரு தடவை இடம் பெற்றுள்ளது.
ஏன் சேர்க்கவில்லை என்றால் 9:128, 9:129 வசனங்கள் குர்ஆனில் உள்ளது அல்ல; அதை குர்ஆனிலிருந்து நீக்க வேண்டும் என்று காரணம் கூறியுள்ளான்.
'ரஹீமை'க் கணக்கிடும் போது இடைச்செருகல் என்று ஒதுக்கியவன் 'அல்லாஹ்'வைக் கணக்கிடும் போது அவ்வசனத்தைச் சேர்த்துக் கொள்கிறான்.
ஒரு இடத்தில் இவ்வசனத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னொரு வசனத்தில் அதை விட்டுவிட்டான்.
இவன் கணக்குப் போடும் போது பல தமாஷ்களைச் செய்வான்.
இவன் விரும்புகிறவாறு 19இல் அடங்கினால் விட்டு விடுவான். அடங்கவில்லையென்றால், பல கிறுக்குத் தனங்களைக் கூறி 19ல் அடங்கிவிட்டது என்பான்.
'அல்லாஹ்'வையும் 'ரஹீமை'யும் எண்ணும் போது இவன் 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் இவ்விரு சொற்கள் இடம் பெற்றிருந்தும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
113 அத்தியாயங்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று துவங்குகின்றன. 27ஆம் அத்தியாயம் 30வது வசனத்தின் இடையே ஒரு தடவை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற சொற்றொடர் உள்ளது.
அல்லாஹ், ரஹீம் ஆகிய சொற்கள் எத்தனை இடங்களில் உள்ளன என்பதைக் கணக்கிடும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஏனெனில் இதில் அல்லாஹ் என்பதும் ரஹீம் என்பதும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இவன் 113 அத்தியாயங்களில் இடம்பெற்ற 113 பிஸ்மில்லாஹ்வைக் கணக்கில் சேர்க்காமல் விட்டுள்ளான்.
113 இடங்களில் உள்ள 113 அல்லாஹ், 113 ரஹீம், 113 ரஹ்மான் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை.
அல்லாஹ் என்ற சொல் குர்ஆனில் உள்ளதாக இவன் காட்டும் கணக்குப்படி 2698 ஆகிறது. இது 19 ஆல் வகுபடும். ஆனால் இன்னும் சேர்க்க வேண்டிய பிஸ்மில்லாஹ்வில் உள்ள 113 அல்லாஹ் என்ற சொல்லையும் சேர்த்தால் 2698+113=2811 ஆகும். இது 19 ஆல் வகுபடாது.
'ரஹீம்' என்பது இவனது கணக்குப்படி 114. இத்துடன் 113 'பிஸ்மில்லாஹ்' விலும் உள்ள 113 'ரஹீம்' என்ற சொல்லைச் சேர்த்தால் 114+113=227 ஆகும். இந்த எண் 19 ஆல் மீதமின்றி வகுபடாது. எனவே தான் இந்தக் கணக்கில் மட்டும் 'பிஸ்மில்லாஹ்'வில் உள்ள 'அல்லாஹ்', 'ரஹீம்' என்பதை இவன் சேர்க்கவில்லை.
'ரஹ்மான்' என்ற சொல் 57 தடவை இடம் பெற்றுள்ளது. இது மட்டும் தான் 19ஆல் வகுபடுகிறது என்று இவன் கூறுகிறான். இதுவும் தவறாகும். 113 இடங்களில் இடம் பெற்றுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் 113 தடவை ரஹ்மான் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதையும் சேர்த்தால் 57+113=170 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இன்னும் சொல்வதானால் பிரச்சினையே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் பற்றித் தான். அதில் உள்ள வார்த்தைகளைக் கழித்து விட்டு கணக்குக் காட்டுவது உளறல் தவிர வேறில்லை.
அனைத்துக் கணக்குகளிலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை இவன் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சில இடங்களில் 'பிஸ்மில்லாஹ்'வையும் நம்பரில்லாத ஆயத்துகள் எனக் கூறி கணக்கில் சேர்த்துள்ளான்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் முதல் சொல்லாக இடம் பெற்றுள்ள 'பிஸ்மி' என்பது 19இல் அடங்குகிறதா? இது பற்றி அவன் உளறியுள்ளதைப் பாருங்கள்!
அதாவது 'பிஸ்மி' என்பது மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளதாம். 96:1 வசனத்தில் இடம் பெற்றுள்ள 'பிஸ்மி'யைக் கணக்கில் சேர்க்க மாட்டானாம். ஏனெனில் அந்த வசனத்தில் எழுதும் போது கூடுதலாக ஒரு அலிப் எழுதப்பட்டுள்ளதாம்.
சரி மூன்று இடங்களில் தானே பிஸ்மி இடம் பெற்றுள்ளது. அது எப்படி 19ஆல் வகுபடும் என்று அவன் விளக்குவதைக் கேளுங்கள்.
குர்ஆனில் மூன்று இடங்களில் பிஸ்மி என்பது இடம் பெற்றுள்ளது அல்லவா? அந்த இடங்களைக் கவனியுங்கள்!
27வது அத்தியாயத்தில் 30வது வசனத்தில் ஒரு தடவை பிஸ்மி இடம் பெற்றுள்ளது அல்லவா!
எனவே 27ஐயும் 30ஐயும் கூட்டுங்கள்!
57 வந்துவிட்டதா? (ஏன் கூட்ட வேண்டும் என்று கேட்கக் கூடாது.)
இத்துடன் பிஸ்மி இடம்பெற்ற மூன்றைச் சேர்த்தால் 60 ஆகிறதா?
அடுத்தது 11வது அத்தியாயத்தில் 41வது வசனமாக 'பிஸ்மி' இடம் பெறுகிறதல்லவா? எனவே 41ஐயும் 11ஐயும் கூட்டுங்கள்! 52 வருகிறதா?
முதலில் கூட்டிய 60 உடன் 52ஐச் சேருங்கள் 112 (60+52=112) வந்து விட்டதா?
அடுத்தது முதல் (1வது) அத்தியாயத்தில் முதல் (1வது) வசனத்தில் பிஸ்மி இடம் பெறுகிறதல்லவா? எனவே ஒன்றுடன் ஒன்றைக் கூட்டுங்கள். இரண்டு வந்து விட்டதா?
ஏற்கனவே உள்ள 112 உடன் இதைக் கூட்டுங்கள்! (112+2=114) 114 வந்து விட்டதா?
இது 19ஆல் வகுபடும் அல்லவா?
ஆம், இப்படித் தான் இந்தக் கிறுக்கன் உளறி இருக்கிறான்.
'பிஸ்மி' என்ற சொல் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் உள்ளதா? என்பது தான் பதில் சொல்லப்பட வேண்டிய கேள்வி. இல்லை என்பது தான் இதற்குப் பதிலாகும்.
'பிஸ்மி' கணக்கு அவனுக்கே உளறலாகத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, 'பிஸ்மி'யில் 'பி'யை விட்டு விட்டு 'இஸ்மு' என்பது எத்தனை தடவை இடம் பெற்றுள்ளது என்று வேறு கணக்குக்குச் சென்றான்.
'இஸ்மு' என்பது மொத்தம் 19 இடங்களில் வருகிறது எனக் கூறி பட்டியலிட்டுள்ளான். இதிலும் தில்லுமுல்லு செய்துள்ளான்.
'இஸ்மு' என்பது தனித்து வரும் இடங்கள் மொத்தம் 14 தான். மற்ற சொல்லுடன் சேர்ந்து அல்-இஸ்மு பி-இஸ்மி, இஸ்முஹு என்று வரும் இடங்கள் பத்து. ஆக 24 இடங்களில் 'இஸ்மு' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இவனோ 19 என்று பொய்க் கணக்கு காட்டியுள்ளான்.
இந்த ஆராய்ச்சி (?) எவ்வளவு அபத்தமானது என்பது இப்போது புரிகிறதா?
திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் வார்த்தைகளுக்குப் பதிலாகக் குறிப்பிட்ட எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன.
இவ்வாறு 29 அத்தியாயங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவைகளாவன:
2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 50, 68
இத்தகைய அத்தியாயங்களுக்கு இவன் சூட்டிய பெயர் இனிஷியல் சூராக்கள். ஒவ்வொரு இனிஷியல் சூராவிலும் 19ஆல் வகுபடும் அளவுக்கே அதன் இனிஷியல் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இது 19ன் மாபெரும் அற்புதம் என்று இவன் வாதிட்டான்.
அதாவது பகரா என்ற இரண்டாம் அத்தியாயத்தில் அலிப், லாம், மீம் என்ற மூன்று எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அத்தியாயத்தில் எத்தனை அலிப்கள் உள்ளன என்று எண்ணினால் அது 19ஆல் வகுபடும் அளவில் இருக்குமாம்.
அது போல் இந்த அத்தியாயத்தில் லாம் எத்தனை என எண்ணிப் பார்த்தால் அதுவும் 19ஆல் வகுபடும் அளவில் தான் இருக்குமாம்.
இந்த அத்தியாயத்தில் எத்தனை 'மீம்'கள் இடம் பெற்றுள்ளன என்று எண்ணிப் பார்த்தால் அதுவும் 19ஆல் வகுபடுமாம்.
14 நூற்றாண்டுகளாக ஏன் இனிஷியல் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதை எவருமே கண்டுபிடிக்காத நிலையில் நான் அதைக் கண்டுபிடித்து விட்டேன். 19க்குள் குர்ஆன் அடங்கியுள்ளது என்பதற்கான அத்தாட்சிக்காகவே இவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று இவன் புளுகினான்.
அலிப், லாம், மீம் போன்ற எழுத்துக்கள் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் ஏன் இடம் பெற்றன என்பதை அறியாத மக்களுக்கு இவன் கூறுவது மிகப் பெரிய தத்துவமாகத் தோன்றியது. மற்றவர்கள் அர்த்தமற்றதாகக் குர்ஆனை ஆக்கி விட்ட நிலையில் இவன் மட்டுமே அதை அர்த்தமுள்ளதாக ஆக்கியதாக நம்பி இவனை ஆஹா, ஒஹோ என்று போற்றலானார்கள்.
ஆனால், இனிஷியல் எழுத்துக்கள் இவன் கூறிய கணக்குப்படி தான் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதை அறியும் போது இவனது அயோக்கியத்தனம் மேலும் உறுதியாகிறது.
திருக்குர்ஆனின் ஐம்பதாவது அத்தியாயத்தில் 'காஃப்' என்ற எழுத்து - இவனது வாதப்படி இனிஷியல் எழுத்து - இடம் பெற்றுள்ளது. இதைத் தான் அவன் உதாரணத்துக்கு எடுத்துக் காட்டுவான்.
ஐம்பதாவது அத்தியாயத்தில் 'காஃப்' என்ற எழுத்து 57 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பத்தொன்பதால் வகுபடும் என்பது உண்மை தான். (19*3=57)
அந்த அத்தியாயத்தை முழுமையாக வெளியிட்டு காஃப் இடம் பெறும் இடங்களை நட்சத்திர அடையாளம் போட்டுக் காட்டுவான். இவனது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.
இதை அடுத்து 42வது அத்தியாயத்திலும் காஃப் இனிஷியல் எழுத்தாக அமைந்துள்ளது. இந்த அத்தியாயத்திலும் 'காஃப்' 57 தடவை இடம் பெற்றுள்ளது. இதுவும் 19ஆல் வகுபடும். இதைப் பார்த்தவுடன் இவனது ரசிகர்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள்.
இவன் கூறுவது உண்மை என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இவ்வாறு எடுத்துக் காட்ட வேண்டும். பகரா அத்தியாயத்திலிருந்து இவன் கணக்குக் காட்டியிருக்க வேண்டும். இதைப் பற்றி இவனது ரசிகக் கூட்டம் சிந்திப்பது கிடையாது. எனவே தான் இவனது பித்தலாட்டம் பற்றி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துக் காட்ட வேண்டியுள்ளது.
50ஆம் அத்தியாயத்தில் 'காஃப்' இனிஷியல் எழுத்தாக உள்ளதால் அது 19ஆல் வகுபடுகிறது எனக் கூறிய ரஷாத் கலீஃபா, 42ஆம் அத்தியாயத்திலும் காப் இனிஷியல் எழுத்தாக அமைந்துள்ளது. அதுவும் 19ஆல் வகுபடுகிறது என்றான் அல்லவா! அந்த 42ஆம் அத்தியாயத்தில் 'காஃப்' மட்டும் இனிஷியல் எழுத்தாக இடம் பெறவில்லை.
மாறாக, ஹா, மீம், ஐன், ஸீன், காஃப் என்ற ஐந்து இனிஷியல் எழுத்துக்கள் உள்ளன. ஐந்தாவதாக இடம் பெற்ற காஃப் என்ற எழுத்து 57 தடவை இடம் பெற்றுள்ளது எனக் கூறிய ரஷாத் கலீஃபா மற்ற நான்கு எழுத்துக்களைப் பற்றி மூச்சு விடவில்லை.
மேற்கண்ட அத்தியாயத்தில் 'ஹா' என்னும் எழுத்து 51 தடவை இடம் பெற்றுள்ளது. இது 19ஆல் மீதிமின்றி வகுபடாது.
மேற்கண்ட அத்தியாயத்தில் 'மீம்' என்னும் எழுத்து 297 தடவை இடம் பெற்றுள்ளது. இதுவும் 19ஆல் மீதமின்றி வகுபடாது.
மேற்கண்ட அத்தியாயத்தில் 'ஐன்' என்னும் எழுத்து 98 தடவை இடம் பெற்றுள்ளது. இதுவும் 19 ஆல் மீதிமின்றி வகுபடாது.
மேற்கண்ட அத்தியாயத்தில் ஸீன் என்னும் எழுத்து 53 தடவை இடம் பெற்றுள்ளது. இதுவும் 19 ஆல் மீதிமின்றி வகுபடாது.
ஹா, மீம், ஐன், ஸீன், காஃப் என்ற ஐந்து இனிஷியல் எழுத்துக்கள் கொண்ட இந்த அத்தியாயத்தில் நான்கு எழுத்துக்கள் 19 ஆல் வகுபடவில்லை. காஃப் என்ற ஒரு எழுத்து மட்டுமே 19 ஆல் வகுபடுகிறது. அதனால் தான் மற்ற நான்கு எழுத்துக்களைக் கண்டு கொள்ளாமல் காஃப் எழுத்துக்கு மட்டும் ஸ்டார் அடையாளம் போட்டு எண்ணிக் காட்டி மக்களை ஏமாற்றினான்.
வேலை மெனக்கெட்டு இதை யார் எண்ணிப் பார்க்கப் போகிறார்கள் என்ற அசட்டு நம்பிக்கை தான் இதற்குக் காரணம்.
42வது அத்தியாயத்தைப் பொருத்த வரை இன்னொரு கிறுக்குத் தனத்தையும் செய்து 19க்குள் அடங்குவதாகக் கணக்குக் காட்டியுள்ளான்.
அதாவது ஹா, மீம், ஐன், ஸீன், காஃப் என்பதில் முதலிரண்டு எழுத்துக்களை விட்டு ஐன், ஸீன், காஃப் என்ற மூன்று எழுத்துக்களையும் தனித் தனியாகக் காட்டாமல் சேர்த்துக் கூட்டி 19 வரும் என்று உளறியுள்ளான்.
ஐன் - 98
ஸீன் - 53
காப் - 57
மொத்தம் 208
இந்த எண்ணிக்கை 19ஆல் மீதமின்றி வகுபடாது அல்லவா?
இந்த அத்தியாயத்தில் ஸீன் எத்தனை என்று எண்ணும் போது பிஸ்மியில் உள்ள ஸீனையும் எண்ணிக் காட்டுகிறான். இது ஒரு பித்தலாட்டம்.
ஒவ்வொரு எழுத்தையும் எண்ணிக் காட்டுவதற்குப் பதில் மூன்று எழுத்தை மொத்தமாகக் கூட்டி எண்ணியது மற்றொரு பித்தலாட்டம்.
அப்படிக் கூட்டுவதாக இருந்தால், ஹா, மீம், ஐன், ஸீன், காஃப் ஆகிய ஐந்து எழுத்துக்களையும் கூட்ட வேண்டும். அதில் மூன்று எழுத்தை மட்டும் பிரித்துக் கூட்டியது மற்றொரு பித்தலாட்டம்.
அதே அடிப்படையில் 38வது அத்தியாயத்தை எடுத்துக் கொள்வோம். இது 'ஸாத்' என்ற எழுத்தில் - இவனது வாதப்படி இனிஷியல் எழுத்தில் - ஆரம்பமாகிறது. இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 'ஸாத்' என்னும் எழுத்து 19ஆல் வகுபடும் அளவிற்கு இருக்க வேண்டுமல்லவா?
ஆனால் இந்த அத்தியாயத்தில் 'ஸாத்' என்னும் எழுத்து 29 தடவை தான் இடம் பெற்றுள்ளது. இது 19ஆல் வகுபடாது.
எனவே 38வது அத்தியாயத்தில் இவனது கணக்கு ஒத்து வரவில்லை.
'ஸாத்' அத்தியாயத்தில் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் 'ஸாத்' என்ற எழுத்து இடம் பெறவில்லை என்பதால் இவன் வழக்கம் போலவே வேறொரு வகையான தில்லுமுல்லு செய்தான்.
அந்தத் தில்லுமுல்லு இது தான்.
ஏழாவது அத்தியாயத்திலும் இனிஷியல் எழுத்தாக 'ஸாத்' இடம் பெற்றுள்ளது. இதில் 97 தடவை ஸாத் இடம்பெற்றுள்ளது. இதை 38வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 'ஸாத்' எண்ணிக்கையுடன் கூட்ட வேண்டுமாம். (97+29=126) இதுவும் 19 ஆல் வகுபடாதே என்கிறீர்களா?
19வது அத்தியாயத்திலும் ஸாத் என்னும் இனிஷியல் எழுத்து இடம் பெற்றுள்ளது. இதையும் சேர்த்து கூட்ட வேண்டுமாம். (29+97+26=152) இந்த எண்ணிக்கை 19ஆல் வகுபடுமாம். (8*19=152)
'ஸாத்' என்ற இனிஷியல் எழுத்து மூன்று அத்தியாயங்களில் இடம் பெற்றுள்ளது. அதில் எந்த அத்தியாயத்திலும் 19ஆல் வகுபடும் அளவிற்கு இல்லை என்பதை இதன் மூலம் அவனே ஒப்புக் கொள்கிறான்.
'ஸாத்' இடம்பெற்ற மூன்று அத்தியாயங்களை சேர்த்துக் கூட்டுகிறான் அல்லவா? இந்த அளவுகோலை மற்ற இனிஷியல் எழுத்துக்கள் இடம்பெற்ற எல்லா அத்தியாயங்களிலும் பயன்படுத்தமாட்டான்.
'ஸாத்' என்ற எழுத்து மூன்று அத்தியாயங்களில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி மூன்றையும் மொத்தமாகக் கூட்டினான் அல்லவா? அந்த அத்தியாயங்களில் 'ஸாத்' மட்டும் இடம் பெறவில்லை. வேறு சில இனிஷியல் எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் கண்டுகொள்ளாமல் நழுவி விடுகிறான்.
அவன் குறிப்பிடும் அந்த மூன்று அத்தியாயங்கள் இது தான்.
காஃப், ஹா, யா, ஐன், ஸாத் (19வது அத்தியாயம்)
அலிப், லாம், மீம், ஸாத் (7வது அத்தியாயம்)
ஸாத் (38வது அத்தியாயம்)
இம்மூன்று அத்தியாயங்களிலும் ஸாத் இடம் பெற்றுள்ளது. ஆனால் 19வது அத்தியாயத்தில் ஸாத் மட்டு மின்றி மேலும் நான்கு எழுத்துக்களும் உள்ளன.
1) காஃப் - 137 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
2) ஹா - 147 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
3) யா - 312 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
4) ஐன் - 117 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
5) ஸாத் - 26 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
அதாவது 19வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து இனிஷியல் எழுத்துக்களில் எதுவும் அந்த அத்தியாயத்தில் 19ஆல் வகுபடும் அளவுக்கு இல்லை.
அடுத்து ஏழாவது அத்தியாயத்திலும் ஸாத், உடன் மேலும் மூன்று எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
1) அலிப் - 2651 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
2) லாம் - 1527 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
3) மீம் - 1161 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
4) ஸாத் - 97 தடவை உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
ஸாத் இடம் பெற்ற மூன்று அத்தியாயங்களில் எந்த ஒன்றிலும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் ஸாத் என்னும் எழுத்து இல்லை என்பது முழு உண்மை.
அது மட்டுமின்றி 'ஸாத்' உடன் சேர்ந்து மற்ற எழுத்துக்கள் இடம் பெறும் அத்தியாயங்களில் எந்த இனிஷியல் எழுத்தும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை.
இவ்வளவு தெளிவாக இருந்தும் மக்களை மூடர்களாக்க இவன் எத்தகைய தில்லுமுல்லுகளைச் செய்துள்ளான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக இவன் 68வது அத்தியாயத்தை எடுத்துக் காட்டுவான். இந்த அத்தியாயம் நூன் என்ற ஒரு இனிஷியல் எழுத்துடன் ஆரம்பமாகிறது.
இவனது வாதப்படி இந்த எழுத்து இந்த அத்தியாயத்தில் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
68வது அத்தியாயத்தில் நூன் என்னும் எழுத்துக்களை எண்ணினால் 131 தடவை தான் இடம் பெற்றுள்ளது. இந்த எண் 19ஆல் வகுபடாது.
பிஸ்மில்லாஹ்வில் உள்ள ஒரு நூனையும் கணக்கில் சேர்த்தால் மொத்தம் 132 நூன்கள் இந்த அத்தியாயத்தில் உள்ளன. இதுவும் 19ஆல் வகுபடாமல் ரஷாத் கலிஃபா ஒரு பொய்யன், மனநோயாளி என்பதைக் காட்டுகிறது.
இந்த இடத்தில் வேறொரு விதமான கிறுக்குத்தனம் செய்து 19ஆல் வகுபடுகிறது என்று உளறியிருக்கிறான்.
எல்லா மொழிகளிலும் எழுத்துக்களுக்கு இரண்டு வடிவங்கள் உள்ளன. N என்னும் ஆங்கில எழுத்தை N என்றும் EN என்றும் எழுத முடியும் அது போல் தமிழில் 'ர' என்பதை 'ர' எனவும் 'ரகரம்' எனவும் எழுத முடியும்.
அரபுமொழியிலும் இப்படி இரு விதமாக எழுத்துக்களை எழுத முடியும். மீம் என்ற எழுத்தை م என்றும் ميم என்றும் எழுத முடியும்.
அதே போன்று நூன் என்ற எழுத்தை ن என்றும் எழுதலாம் نون என்றும் எழுதலாம்.
'ரகரம்' என்பதில் இரண்டு 'ர' இருந்தாலும் 'ர' என்று குறிப்பிடும் போது அதை இரண்டு 'ர' என்று யாரும் எண்ண மாட்டார்கள்.
68வது அத்தியாயத்தில் ن என்று துவங்குகிறது அல்லவா? இதைக் குர்ஆனில் எழுதப்பட்டதற்கு மாற்றமாக نون என்று எழுதியுள்ளான். இவ்வாறு எழுதினால் نون என்பதில் இரண்டு நூன்கள் இருப்பது போல் தெரியும்.
இப்படிச் செய்தால் ஒரு நூன் அதிகமாகி மொத்தம் 133 நூன் வரும். இது பத்தொன்பதால் வகுபடும் என்று இவன் உளறும் போது இவனது ரசிகர்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம் தான்.
அடுத்ததாக இவன் எடுத்துக் காட்டுவது 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயமாகும்.
இவனது வாதத்தின்படி யா, ஸீன் என்ற அத்தியாயத்தில் யா என்ற எழுத்து 19ஆல் வகுபடும் அளவுக்கு இருக்க வேண்டும். அது போல் ஸீன் என்ற எழுத்தும் 19ஆல் வகுபடும் அளவுக்கு இருக்க வேண்டும்.
யாஸீன் அத்தியாயத்தில் ஸீன் என்ற எழுத்து 47 தடவை இடம் பெற்றுள்ளது. இது 19ஆல் வகுபடாது. யாஸீன் அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் ஒரு ஸீன் உள்ளது. அதையும் கணக்கில் சேர்த்தால் 48 ஸீன் ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
'யா' என்ற எழுத்தை எண்ணுவதற்கு முன் இந்த எழுத்தின் தனித்தன்மை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த எழுத்துக்கு மூன்று நிலைகள் உள்ளன.
(1) ய், ய, யி, யு என்று உச்சரிக்கப்படுவது ஒரு நிலை. உதாரணமாக ஷய்த்தான் என்று அரபியில் எழுதினால் அதில் உள்ள 'யா' மெய்யெழுத்தாக 'ய்' என்று உச்சரிக்கப்படுகிறது.
(2) தோற்றத்தில் 'யா' போன்று அமைந்திருக்கும். ஆனால் அலிஃபாக வாசிக்கப்படும். அல்லது வாசிக்கப்படாமல் விடப்படும். இது இரண்டாவது நிலை. உதாரணமாக 'அலா' என்று அரபியில் எழுதினால் கடைசியில் 'யா' இருக்கும். ஆனால் 'யா' வின் உச்சரிப்பு இருக்காது. இது இரண்டாவது நிலை.
(3) 'யா' என்ற எழுத்தின் மேல் ஹம்ஸா என்னும் எழுத்து அமர்ந்திருப்பது மூன்றாவது நிலை. தோற்றத்தில் 'யா' வாக இருந்தாலும் அவை அ, இ என்று உச்சரிக்கப்படும். ய, யி என்று உச்சரிக்கப்படாது.
யாஸீன் அத்தியாயத்தில் முதல் வகை 'யா' 214 இது 19ஆல் வகுபடாது. (பிஸ்மியில் உள்ள ரஹீமில் முதல் வகை 'யா' 1 உள்ளது. இதையும் கணக்கில் சேர்த்தால் 214+1=215 ஆகும். இது 19ஆல் வகுபடாது.)
இரண்டாவது வகை 'யா' 21. இது 19ஆல் வகுபடாது.
மூன்றாவது வகை 'யா' 9. இது 19ஆல் வகுபடாது.
மூன்று வகை யாவையும் கூட்டினால் 214+1+21+9=245 இதுவும் 19ஆல் வகுபடாது.
மூன்று வகை யாவையும் தனித் தனியாக எண்ணிப் பார்த்தாலும் 19ஆல் வகுபடவில்லை. மூன்றையும் சேர்த்துக் கூட்டினாலும் 19ஆல் வகுபடவில்லை.
அப்படியானால் ரஷாத் கலிஃபா எப்படி இதைச் சான்றாகக் கட்டினான் என்று கேட்கிறீர்களா?
'யா'வைத் தனியாகக் கூட்டாமல் ஸீனைத் தனியாகக் கூட்டாமல் இரண்டையும் சேர்த்துக் கூட்டினால் 19 வரும் என்று கணக்குக் காட்டியுள்ளான். சேர்த்துக் கூட்டினாலாவது 19 வருமா என்றால் தில்லுமுல்லு செய்தால் தான் வருமே தவிர சாதாரணமாக எண்ணினால் வரவே வராது.
மூன்று வகை 'யா' மொத்தம் 245
'ஸீன்' 47
மொத்தம் 282
இதுவும் 19ஆல் வகுபடாது.
மூன்று வகையான 'யா' வையும் கணக்குக் காட்டக் கூடாது. 'யா'வாக உச்சரிக்கப்படும் முதல் வகையைத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் கூறினால் அப்போதும் 19ஆல் வகுபடாது.
முதல் வகை 'யா' 214
ஸீன் 47
மொத்தம் 261
இதுவும் 19ஆல் வகுபடாது.
இரண்டாவது வகை 'யா' வைத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் கூறினால் அப்போதும் 19ஆல் வகுபடாது.
இரண்டாவது வகை 'யா' 21
ஸீன் 47
மொத்தம் 68
இதுவும் 19ஆல் வகுபடாது.
மூன்றாம் வகை 'யா' வைத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் கூறினால் அப்போதும் 19ஆல் வகுபடாது.
மூன்றாம் வகை 'யா' 9
ஸீன் 47
மொத்தம் 56
இதுவும் 19ஆல் வகுபடாது.
இவனது வாதப்படி 'யா'வையும், 'ஸீன்' ஐயும் எந்த வகையில் கூட்டினாலும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை.
இப்படி 'யா' வையும், 'ஸீன்' ஐயும் சேர்த்து எண்ணும் போது சில இடங்களில் மூன்றாம் வகை 'யா' வைக் கணக்கில் சேர்த்துள்ளான். சில இடங்களில் சேர்க்காமல் நழுவி விட்டான். அதாவது 19ஆல் வகுபடுவதற்கு ஏற்ப சில 'யா'க்களை கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் மோசடி செய்துள்ளான்.
'யா' வையும், 'ஸீன்' ஐயும் மொத்தமாகக் கூட்டினால் 285 வருகிறது. இது 19ஆல் வகுபடும் என்று கூறியுள்ளான். எந்த அளவுகோலின் படி பார்த்தாலும் 285 வரவே வராது என்பது தான் உண்மை.
அடுத்து அவன் எடுத்துக்காட்டுவது 40வது அத்தியாயம். இந்த அத்தியாயத்தில் ஹா, மீம் என்ற இரண்டு இன்ஷியல் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இவனது வாதப்படி இந்த அத்தியாயத்தில் ஹா என்ற எழுத்தும், மீம் என்ற எழுத்தும் 19ஆல் வகுபடும் அளவில் இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு இல்லை.
ஹா எனும் எழுத்து 62 தடவை இடம்பெற்றுள்ளது. இது 19ஆல் வகுபடாது.
இத்துடன் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள ஒரு ஹாவையும் சேர்த்தால் 63ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தில் மீம் எனும் எழுத்து 377 உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
இத்துடன் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள 3 மீம்களைச் சேர்த்தால் 380 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
தனித்தனியாக 19ஆல் வகுபடாவிட்டாலும் இரண்டையும் கூட்டினால் 380+64 = 444 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
41வது அத்தியாயத்திலும் ஹா, மீம் எனும் இரண்டு எழுத்துக்கள் உள்ளன.
இதில் இடம்பெற்ற ஹா 46 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள ஒரு ஹா வையும் சேர்த்தால் 47 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இதில் இடம்பெற்ற மீம் 273 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள 3 மீம்களையும் சேர்த்தால் 276 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
ஹா, மீம், ஐன், ஸீன், காஃப் ஆகிய ஐந்து எழுத்துக்களில் காஃபைத் தவிர வேறு எதுவும் 19ஆல் வகுபடாது என்பதை முன்னரே விளக்கி விட்டோம்.
43வது அத்தியாயம் ஹா, மீம் என்ற இரண்டு எழுத்துக்களில் ஆரம்பமாகிறது.
இதில் இடம்பெற்ற ஹா 42 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள ஒரு ஹாவையும் சேர்த்தால் 43 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இதில் உள்ள மீம் 321 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
பிஸ்மியில் உள்ள 3 மீம்களையும் சேர்த்தால் 324 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இரண்டையும் கூட்டினால் 324+43=367 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
44வது அத்தியாயமும் ஹா, மீம் என்றே துவங்குகிறது.
இதில் ஹா 14 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள ஹாவையும் சேர்த்தால் 15 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இதில் இடம்பெறும் மீம் 147 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
பிஸ்மியில் உள்ள மீமையும் சேர்த்தால் 150 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இரண்டையும் சேர்த்தால் 150+15=165 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
45வது அத்தியாயத்திலும் ஹா, மீம் ஆகிய இரு எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் இடம்பெற்ற ஹா 29 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள ஹாவைச் சேர்த்து 30 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இதில் உள்ள மீம் 197 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள 3 மீம்களையும் சேர்த்தால் 200 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இரண்டையும் கூட்டினால் 230 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
46வது அத்தியாயமும் ஹா, மீம் எனும் இரண்டு எழுத்துக்களில் துவங்குகிறது.
இதில் இடம்பெற்ற ஹா 34 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள ஹாவையும் சேர்த்தால் 35 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இதில் உள்ள மீம் 222 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள பிஸ்மியில் உள்ள 3 மீம்களயும் சேர்த்தால் 225 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இரண்டையும் சேர்த்தால் 225+35=260 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
ஹா, மீம் எனத் துவங்கும் எந்த அத்தியாயத்திலும் 19ஆல் வகுபடும் அளவுக்கு இந்த எழுத்துக்கள் அமையவில்லை. இதை ரஷாத் கலீஃபாவும் ஒப்புக் கொள்கிறான்.
ஹா, மீம் என்று இடம்பெற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் இடம் பெற்றுள்ள ஹா, மீம்களை மொத்தமாகக் கூட்ட வேண்டுமாம். அப்போது 19ஆல் வகுபடும் என்கிறான்.
ஹா, மீம் என்பது மட்டும் இடம் பெற்ற அத்தியாயங்களை மட்டும் இவன் கூட்ட மாட்டான். ஹா, மீம், ஐன், ஸீன், காஃப் என்பதையும் கூட்டுவான்.
இதைத் தவிர இவன் செய்த மற்றொரு கணக்குத் தில்லுமுல்லையும் பார்க்க வேண்டும்.
ஒரு எண் 19ஆல் வகுபடுகிறது என்றால் அதன் விடை 19ஆல் முடியும் வரை வகுத்துக் கொண்டே செல்ல வேண்டும். அப்போது தான் 19ஆல் வகுபடுகிறது எனக் கூறவேண்டும்.
2147=19*113 என்று இவன் கணக்கு காட்டுகிறான். 113 என்பதும் 19ஐ விட அதிக மதிப்புடைய எண். எனவே 113/19 = என்று இவன் வகுத்துக்காட்டி 19இல் முடிக்க வேண்டும்.
இதை நாம் சொல்லவில்லை. இவனே வேறிடத்தில் இதை ஒப்புக் கொண்டுள்ளான்.
ஆனால் எழுத்துக்களை எண்ணிப் பார்க்காமலேயே கண்டுபிடிக்கும் பல தில்லுமுல்லுகளையும் அவன் செய்துள்ளான். இதைக் கண்டுபிடிக்க 5 சதவிகித மூளை இருந்தாலே போதும். இவன் ஏமாற்றுகிறான் என்பதைக் கண்டு கொள்ள முடியும். ஏமாற்றுப் பேர்வழி என்று தன்னைத் தானே இவன் இனம் காட்டிய பின்பும் சிலர் இவனைத் துதி பாடுகிறார்கள். அத்தகைய கிறுக்குத் தனங்களை இப்போது பார்ப்போம்.
திருக்குர்ஆன் 19வது அத்தியாயத்தில், காஃப், ஹா, யா, ஐன், ஸாத் என ஐந்து எழுத்துக்கள் உள்ளதையும் அவற்றில் ஒரு எழுத்துக் கூட 19ஆல் வகுபடும் அளவில் அந்த அத்தியாயத்தில் இல்லை என்பதையும் முன்னர் நாம் நிரூபித்தோம்.
இங்கு தான் அவனது கிறுக்குத்தனம் ஆரம்பமாகிறது.
இந்த அத்தியாயத்தில் ஐந்து எழுத்துக்கள் இருக்க இவன் நான்கு எழுத்துக்களை விட்டு 'ஹா' என்ற எழுத்தை மட்டும் எண்ணுகிறான். ஐந்து எழுத்துக்கள் இருக்க நான்கை விட்டு விட்டு ஏன் 'ஹா' வை மட்டும் எண்ண வேண்டும் என்று கேட்க பெரிய அறிவு ஒன்றும் தேவையில்லை.
ஹா வையே எடுத்துக் கொள்வோம்.
19ஆம் அத்தியாயத்தில் 'ஹா' என்பது 148 ஆகும்.
எழுத்து வடிவில் 'தா' வாகவும், நிறுத்தும் போது 'ஹா' வாகவும் உச்சரிக்கப்படும் 27 இடங்கள் உள்ளன. இதையும் 'ஹா'வுடன் சேர்த்துள்ளான். (எழுத்தின் வடிவத்தைத் தான் இவன் எப்போதும் கணக்குக் காட்டியுள்ளான்.) ஆனால் வடிவத்தில் 'தா' வாகவுள்ளதை 'ஹா' என்று கணக்குக் காட்டுகிறான்.
இவன் கூறியவாறே வைத்துக் கொள்வோம். 147 'ஹா' வுடன் 'தா' வடிவத்திலும், 'ஹா' வின் உச்சரிப்பிலும் உள்ள 27 ஐக் கூட்டினால். 148+27=175 வருகிறது.
காஃப், ஹா, யா, ஐன், ஸாத் ஆகிய ஐந்து எழுத்துக்களில் நான்கை விட்டு விட்டு 'ஹாவை' எண்ணிப் பார்த்த இவன் அதையாவது 19ஆல் வகுத்துக் காட்ட வேண்டுமல்லவா?
அவன் காட்டிய கணக்குப்படி 175 'ஹா' தான் உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
19ஆல் வகுபடவில்லையே எனக் கூறினால் அதற்கு அவன் கூறும் பதில் என்ன தெரியுமா? இந்த 175ஐ அப்படியே வைத்துக் கொண்டு 20ஆம் அத்தியாயத்துக்கு வாருங்கள் என்கிறான்.
20வது அத்தியாயம் 'தா, ஹா' என்ற இரண்டு எழுத்துக்களால் ஆரம்பமாகிறது. ஒரு வேளை இதில் உள்ள ஹாவையும் எண்ணச் சொல்வான் என நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்தீர்கள்.
தா, ஹா அத்தியாயத்தில் உள்ள தாவையும், ஹாவையும் ஒன்றாகச் சேர்த்து எண்ண வேண்டுமாம்.
இந்த இடத்திலாவது இவனது அடிவருடிகள் சிந்திக்க வேண்டும். ஒரு அத்தியாயத்தில் உள்ள 'ஹா' வை 19ஆல் வகுத்துக் காட்டு என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அது முடியவில்லை என்றால், இன்னொரு அத்தியாயத்தில் உள்ள எழுத்துக்களையும் கூட்ட வேண்டும் என்றால் 'ஹா' வை மட்டும் கூட்டு எனக் கூறியிருக்க வேண்டும்.
'ஹா' வுடன் 'தா' வை ஏன் சேர்க்க வேண்டும்? எனச் சிந்தித்திருந்தால் இவன் ஒரு பித்தலாட்டக்காரன் என்று புரிந்திருப்பார்கள். இவன் கூறுகின்ற கணக்குப்படி 19ஆம் அத்தியாயத்தில் 'ஹா' வையும், 20ஆம் அத்தியாயத்தில் உள்ள 'தா, ஹா' இரண்டையும் கூட்டினால் அந்தக் கூட்டுத் தொகையாவது 19ஆல் வகுபடுமா? என்றால் நிச்சயம் வகுபடாது.
அதாவது 'தா' என்ற எழுத்து 28 தடவை வருகிறது. வட்டமான 'தா'வும், 'ஹா'வும் சேர்ந்து 251 வருகிறது.
அதாவது இந்த அத்தியாயத்தில் தாவும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை. ஹாவும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை. இரண்டையும் சேர்த்தால் 279 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
இதை அவனும் ஒப்புக் கொள்கிறான். 279 என்ற எண் 19ஆல் வகுபடாவிட்டால் கவலையில்லை. ஏற்கனவே 19ஆம் அத்தியாயத்தில் ஹா 175 தடவை வந்ததல்லவா? அதையும் இதையும் கூட்டுங்கள் என்று கூறுகிறான்.
இரண்டையும் கூட்டினால் 454 வருகிறது. இந்த எண் 19ஆல் வகுபடுமா என்றால் வகுபடாது.
இப்படி ஐந்து தில்லுமுல்லுகள் செய்த பிறகும் அவனுக்குக் கிடைத்தது 454 தான். இதுவும் 19ஆல் வகுபடாதே என்று கேள்வி கேட்டால் கொஞ்சம் பொறுங்கள். 454ஐ மனதில் பதிய வைத்துக் கொண்டு 26வது அத்தியாயத்துக்கு ஜம்ப் பண்ணுங்கள் என்பது தான் இவனது விடை.
26வது அத்தியாயத்தில் தா, ஸீன், மீம் என்ற மூன்று எழுத்துக்கள் உள்ளன. இம்மூன்றையும் கூட்டுங்கள் என்று கூறுகிறான்.
தா - 33
ஸீன் - 94 (பிஸ்மியும் சேர்த்து)
மீம் - 484 (பிஸ்மியும் சேர்த்து)
ஆக மொத்தம் 611
26வது அத்தியாயத்தில் தா வும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை.
ஸீனும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை.
மீமும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை.
மூன்றையும் சேர்த்துக் கூட்டினாலும் 611 வருகிறது. இதுவும் 19ஆல் வகுபடவில்லை.
611 என்ற எண் 19ஆல் வகுபடாதே என்று கேட்டால் ஏற்கனவே 454 உள்ளது அல்லவா? அதையும் இதையும் சேர்த்துக் கூட்டுங்கள் என்று கூறுகிறான். கூட்டினால் 611+454=1065 ஆகும்.
இந்த எண்ணிக்கையும் 19ஆல் வகுபடாதே என்று கேட்டால் அதற்குள் அவசரப்படலாமா? 1065ஐ மனதில் வைத்துக் கொண்டு அப்படியே 27வது அத்தியாயத்துக்கு வாருங்கள் என்பது தான் அவனது பதில்.
27வது அத்தியாயம் தா ஸீன் என்று ஆரம்பமாகிறது. இதில்,
தா - 27
(பிஸ்மியுடன்) ஸீன் - 94
மொத்தம் - 121
27 தா வும் 19ஆல் வகுபடாது.
94 ஸீனும் 19ஆல் வகுபடாது.
இரண்டையும் கூட்டினால் 121. இதுவும் 19ஆல் வகுபடாது.
19க்கும், இதற்கும் சம்பந்தமே இல்லையே எனக் கேட்டால், அவசப்படாதீர்கள். ஏற்கனவே மனதில் உள்ள எண்ணுடன் இதையும் கூட்டுங்கள் என்பது தான் இவனது பதில்.
இவன் கூறுகிற படி 1065+121=1186 வருகிறது. இவன் இவ்வளவு தில்லுமுல்லு செய்தும் இந்த எண்ணும் 19ஆல் வகுபடவில்லை.
"என்னய்யா இதுவும் 19ஆல் வகுபடவில்லையே!'' எனக் கேட்டால் அதற்குள் அவசரப்படலாமா? 1186ஐ மனதில் வைத்துக் கொண்டு அப்படியே 38வது அத்தியாயத்துக்குத் தாவுங்கள் என்கிறான்.
38வது அத்தியாயம் தா, ஸீன், மீம் என்று மூன்று எழுத்துக்களில் துவங்குகிறது.
இதில் 19 தா
இதில் 102 ஸீன் (பிஸ்மியுடன்)
இதில் 460 மீம் (பிஸ்மியுடன்)
உள்ளது.
தா 19 தடவை வந்துள்ளது. இது மட்டும் தான் 19 ஆல் வகுபடும்
102 ஸீனும் 19ஆல் வகுபடாது.
460 மீமும் 19ஆல் வகுபடாது.
மூன்றையும் கூட்டினால் 19+102+460=581 ஆகும். இதுவும் 19ஆல் வகுபடாது.
581ம் 19ஆல் வகுபடவில்லையே எனக் கேட்டால் அதனால் என்ன? ஏற்கனவே கைவசம் உள்ள 1186ஐ 581 உடன் கூட்டுங்கள் 1767 வருகிறதா? இதை 19ஆல் வகுத்துப் பாருங்கள். ஆகா 19ன் மகிமையைப் பார்த்தீர்களா?
சம்மந்தமில்லாமல் நான்கு அத்தியாயங்களில் உள்ள எழுத்துக்களையும், ஒரு அத்தியாயத்தில் ஐந்தில் ஒரு எழுத்தை மட்டும் கூட்டி கணக்குக் காட்டிய இதே முறையில் எந்த எண்ணை நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த எண்ணைக் காட்டலாம்.
இந்த ஐந்துடன் ஏன் நிறுத்த வேண்டும்? இன்னும் பல அத்தியாயங்கள் இது போல் இனிஷியல் அத்தியாயங்களாக உள்ளனவே எனக் கேட்டால் 19தான் வந்து விட்டதே என்பான்.
இவனுக்கு "மென்டல் 19'' என்று செல்லப் பெயர் ஏன் சூட்டப்பட்டது என்பது இப்போது புரிகிறதா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டியதில் 19ஆல் வகுபடுவதை விட வகுபடாதது தான் மிக மிக அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்க!
மேலே நாம் எடுத்துக் காட்டிய 16 அத்தியாயங்களில் 37 இனிஷியல் எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் காஃப் இரண்டு தடவை, தா ஒன்று ஆக மூன்று மட்டுமே 19ஆல் வகுபடும். மீதி 34 இடங்கள் 19ஆல் வகுபடாதவையாக உள்ளன.
அலிஃப், லாம், மீம் என்ற எழுத்துக்களுடன் துவங்கும் அத்தியாயங்களையும் இவன் எடுத்துக்காட்டி 19ஆல் வகுபடும் அளவில் மேற்கண்ட மூன்று எழுத்துக்களும் அமைந்துள்ளன என்று வாதிடுகிறான்.
திருக்குர்ஆனில் 2, 3, 29, 30, 31, 32 ஆகிய ஆறு அத்தியாயங்கள் அலிஃப், லாம், மீம் என்ற எழுத்துக்களுடன் ஆரம்பமாகின்றன.
இதில் இரண்டாவது அத்தியாயம் பற்றி அவன் தனது நூலில் 192-ம் பக்கத்தில் குறிப்பிடும் போது .
மொத்த அலிஃப் 4502
மொத்த லாம் 3202
மொத்த மீம் 2195
ஆக மொத்தம் 9899
9899=19பு521 என்று குறிப்பிடுகிறான்.
இதில் பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவனது வாதத்தின்படி பார்த்தாலும் மூன்றும் சேர்ந்து தான் 19ஆல் வகுபடும் அளவில் உள்ளன.
தனித்தனியாகப் பார்த்தால் 4502 அலிஃப் உள்ளது. இது 19ஆல் வகுபடாது. 3202 லாம் உள்ளது. இது 19ஆல் வகுபடாது. 2195 மீம் உள்ளது. இதுவும் 19ஆல் வகுபடாது.
இம்மூன்று எழுத்துக்களில் எந்த ஒன்றும் 19ஆல் வகுபடும் அளவில் இல்லை.
அனைத்தையும் கூட்டினால் 19ஆல் வகுபடும் அளவுக்கு உள்ளது என வாதிடுவதும் அவனுக்கு எதிராகவே உள்ளது.
அதாவது 9899 என்பதில் 521 தடவை 19ஆல் வகுபடும் என்று வாதிடுகிறான். 521 என்பதும் 19ஐ விட பல மடங்கு பெரிய எண்ணாகும். அதையும் 19ஆல் வகுத்துப் பார்க்க வேண்டும். 521ஐ 19ஆல் வகுக்க முடியாது. எனவே அத்துடன் நிறுத்திக் கொண்டான். இது இரண்டாவது தவறு.
மூன்றாவது தில்லுமுல்லு இது தான்.
இந்த அத்தியாயத்தில் லாம், மீம், ஆகியவை தாம் அவன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளன. அலிஃபைப் பொறுத்த வரை இவன் குறிப்பிட்டவாறு 4502 என்ற எண்ணிக்கையில் இல்லை.
இரண்டாம் அத்தியாயத்தில் 4502 அலிஃப் தான் உள்ளது என்பதை அவனது துதிபாடிகள் நிரூபித்துக் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் அவர்களுக்கு வழங்க நாம் தயாராக இருக்கிறோம். ஒரு கோடி வழங்குவதாகக் கூட அறிவிக்கலாம். ஏனெனில் எவராலும் இந்த எண்ணிக்கை சரி என்பதை நிரூபிக்கவே முடியாது.
உண்மையில் இந்த அத்தியாயத்தில் 4722 அலிஃப்கள் உள்ளன. இவன் 4502 என்று புளுகியிருக்கிறான். 4722+3202+2195 = 10119 இந்த எண் 19ஆல் வகுபடாது.
தவறான எண்ணிக்கையைக் கூறியதால் தான் மூன்றையும் சேர்த்து 19 என்று அவனால் கணக்குக் காட்ட முடிந்ததே தவிர சரியான கணக்கைக் காட்டினால் மூன்று எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டினாலும் அவை 19ஆல் வகுபடாது.
பொதுவாக இத்தனை அலிஃப்கள் என்று அவன் கூறியிருந்தால் சாதாரணப் பொய்யன் என்று இவனைக் கருதலாம். ஒவ்வொரு வசனத்திலும் இத்தனை அலிஃப்கள் உள்ளன என்று பட்டியலையும் தைரியமாக வெளியிட்டுள்ளான். தனது துதிபாடிகளின் மடமை மீது அவனுக்கு இருக்கும் அசாதாரண நம்பிக்கை காரணமாக பட்டியல் போட்டுப் புளுகியிருக்கிறான்.
* உதாரணத்திற்கு இரண்டாம் அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் ஒன்பது அலிஃப் உள்ளதாகக் கூறியுள்ளான். ஆனால் எட்டு அலிஃப்கள் தான் உள்ளன.
* ஆறாவது வசனத்தில் ஒன்பது அலிஃப்கள் உள்ளதாக தைரியமாக எழுதியுள்ளான். ஆனால் ஏழு அலிஃப்கள் தான் உள்ளன.
* ஏழாவது வசனத்தில் மூன்று அலிஃப்கள் உள்ளதாக அவன் கூறுகின்றான். ஆனால் அவ்வசனத்தில் ஐந்து அலிஃப்கள் இருப்பதைக் காணலாம்.
* எட்டாவது வசனத்தில் பதினோரு அலிஃப்கள் உள்ளன எனக் கூறுகிறான். ஆனால் ஒன்பது அலிஃப்கள் தான் உள்ளன.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளமான வசனங்களில் அவன் அலிஃப்களின் எண்ணிக்கையில் புளுகியிருக்கிறான்.
20வது வசனத்தில் 20
22வது வசனத்தில் 24
23வது வசனத்தில் 12
25வது வசனத்தில் 25
26வது வசனத்தில் 33
28வது வசனத்தில் 5
9வது வசனத்தில் 11
31வது வசனத்தில் 16
33வது வசனத்தில் 22
34வது வசனத்தில் 14
35வது வசனத்தில் 15
36வது வசனத்தில் 15
37வது வசனத்தில் 7
39வது வசனத்தில் 11
40வது வசனத்தில் 11
41வது வசனத்தில் 19
42வது வசனத்தில் 7
43வது வசனத்தில் 10
என்று அவன் வெளியிட்டுள்ள நூலில் 193ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளான். இப்பட்டியலில் மேற்கூறப்பட்ட அத்தனையும் தவறாகும். இவ்வசனங்களில் இவன் கூறும் எண்ணிக்கையை விட அதிகமாகவோ, குறைவாகவோ தான் அலிஃப்கள் உள்ளன.
இந்தப் பக்கத்தில் 45 வசனங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளான். இதில் 22 வசனங்கள் பற்றி பச்சைப் பொய் சொல்லியிருக்கிறான். இந்த அத்தியாயம் முழுவதையும் எண்ணிப் பார்த்தால் 100க்கும் மேற்பட்ட வசனங்களில் இவன் கூறிய எண்ணிக்கையில் அலிஃப் அமைந்திருக்கவில்லை என அறிந்து கொள்ள முடியும்.
அடுத்து அலிப் லாம் மீம் என்ற இனிஷியல் எழுத்துடைய மூன்றாவது அத்தியாயத்தை எடுத்துக் கொள்வோம்.
இது பற்றி அவன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்.
மொத்த அலிஃப் - 2521
மொத்த லாம் - 1892
மொத்த மீம் - 1249
ஆக மொத்தம் 5662
5662 = 19 பு 292
என்று கூறுகிறான். அதாவது இவனது வாதத்தின்படியே இந்த எழுத்துக்கள் எதுவும் 19ஆல் வகுபடும் அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
2521 அலிஃப் 19ஆல் வகுபடாது.
1892 லாம் 19ஆல் வகுபடாது.
1249 மீம் 19ஆல் வகுபடாது
என்பதை ஒப்புக் கொள்கிறான்.
மூன்றையும் கூட்டினால் 19ஆல் வகுபடும் என்று தான் இவனே வாதிடுகிறான். 5662ஐ 19ஆல் வகுத்தால் 292 வரும் என்கிறான். 292, 19ஆல் வகுபடாது என்பதை வசதியாக மறந்து விடுவான்.
இவன் கூறிய எண்ணிக்கையில் அலிஃப் அமைந்துள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த அத்தியாயத்தில் 2521 அலிஃப் இருப்பதாக அவன் கூறுவதும் பச்சைப்பொய் தான். 2662 அலிஃப்கள் உள்ளன, என்பதே உண்மையாகும்.
அலிஃப் - 2662
லாம் - 1892
மீம் - 1249
ஆக மொத்தம் 5803
இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தில் மூன்று எழுத்துக்களையும் தனித்தனியாகப் பார்த்தாலும், மொத்தமாகக் கூட்டினாலும் 19ஆல் வகுபடவேயில்லை. ஆனாலும் வழக்கம் போல் தைரியமாகப் புளுகியிருக்கிறான்.
இந்த அத்தியாயத்துக்கும் பட்டியல் போட்டுள்ளான். அதாவது ஒவ்வொரு அத்தியாயத்திலும் அலிஃப் எத்தனை? லாம் எத்தனை? மீம் எத்தனை என்று அவன் வெளியிட்ட பட்டியலில் தப்பான எண்ணிக்கையையே காட்டியுள்ளான்.
இது போன்ற கிறுக்குத்தனங்களை நம்பும் இவனது ரசிகர்களுக்கு கூர்மையான அறிவு இருக்காது என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே வசனத்தின் பட்டியலிலேயே பொய் கூறியிருக்கிறான்.
4வது வசனத்தில் 14அலிஃப்
5வது வசனத்தில் 10அலிஃப்
6வது வசனத்தில் 12அலிஃப்
7வது வசனத்தில் 38அலிஃப்
10வது வசனத்தில் 12அலிஃப்
11வது வசனத்தில் 13அலிஃப்
14வது வசனத்தில் 22அலிஃப்
என்று கூறுகிறான். இவை அனைத்தும் பொய்யாகும். யார் வேண்டுமானாலும் எண்ணிப் பார்த்து இந்த எண்ணிக்கையில் அலிஃப் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த அத்தியாயத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட வசனங்களில் அலிஃப்களின் எண்ணிக்கையைப் பற்றி பச்சைப் பொய் கூறியிருக்கிறான்.
அலிஃப், லாம், மீம் இடம் பெறும் அத்தியாயங்களில் 29வது அத்தியாயம் குறித்தும் இது போலவே புளுகியுள்ளான்.
மொத்த அலிஃப் - 774
மொத்த லாம் - 554
மொத்த மீம் - 344
ஆக மொத்தம் 1672
1672 = 19 பு 88
என்று தனது நூலில் பக்கம் 206ல் குறிப்பிட்டுள்ளான்.
இம்மூன்று எண்ணிக்கையில் எதுவும் 19ஆல் வகுபடாது. மூன்றையும் சேர்த்தால் 19ஆல் வகுபடுமே என்றால் கள்ளக் கணக்குக் காட்டினால் தான் வகுபடுமே தவிர சரியான கணக்கைக் காட்டினால் வகுபடாது.
இவன் கூறியது போல் அலிஃப்களின் எண்ணிக்கை இல்லை. மாறாக இந்த அத்தியாயத்தில் 813 அலிஃப்கள் உள்ளன.
அலிஃப் - 813
லாம் - 554
மீம் - 344
ஆக மொத்தம் 1711
இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தில் இம்மூன்று எழுத்துக்களில் எதுவும் தனித்தனியாகவோ, மொத்தமாகக் கூட்டியோ 19ஆல் வகுபடவே இல்லை என்பது தான் உண்மை.
வழக்கம் போலவே புளுகுப் பட்டியலை இந்த அத்தியாயத்திற்கும் இவன் வெளியிட்டுள்ளான்.
2வது வசனத்தில் 11 அலிஃப்
4வது வசனத்தில் 10 அலிஃப்
5வது வசனத்தில் 12 அலிஃப்
8வது வசனத்தில் 12 அலிஃப்
9வது வசனத்தில் 7 அலிஃப்
10வது வசனத்தில் 25 அலிஃப்
11வது வசனத்தில் 6 அலிஃப்
12வது வசனத்தில் 12 அலிஃப்
13வது வசனத்தில் 12 அலிஃப்
13 வசனங்களுக்குள் 9 பொய்களைச் சொல்லி உள்ளான். இந்த ஒன்பது வசனங்களிலும் அவன் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட எண்ணிக்கையை விட கூடவோ, குறையவோ அலிஃப்கள் உள்ளன.
30வது அத்தியாயத்திலும் அலிஃப், லாம், மீம் இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி இவன் பின்வருமாறு கணக்குக் காட்டுகிறான்.
மொத்த அலிஃப் - 544
மொத்த லாம் - 393
மொத்த மீம் - 317
ஆக மொத்தம் 1254
1254 = 19 பு 66
எனக் கூறுகிறான். இவனது வாதப்படியே 544 அலிஃப் தான் இந்த அத்தியாயத்தில் உள்ளன. இது 19ஆல் வகுபடாது.
393 லாம் உள்ளது இது 19ஆல் வகுபடாது.
317 மீம் உள்ளது. இது 19ஆல் வகுபடாது.
மூன்றையும் கூட்டினால் வகுபடுமா என்றால் வழக்கம் போல் கள்ளக் கணக்கு காட்டினால் தான் வகுபடுமே தவிர சரியான கணக்குக் காட்டினால் வகுபடாது. ஏனெனில் இந்த அத்தியாயத்தில் 568 அலிஃப்கள் உள்ளன. 544 அலிஃப் அல்ல. எனவே 568+393+317=1278
இது 19ஆல் வகுபடாது. இம்மூன்று எழுத்துக்களும் தனித்தனியாகவோ மொத்தமாகக் கூட்டியோ 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை.
அது போல் 31வது அத்தியாயமும் அலிஃப், லாம், மீம் என்று துவங்குகிறது.
இது பற்றி அவன் காட்டும் கணக்கு இது தான்.
மொத்த அலிஃப் - 347
மொத்த லாம் - 297
மொத்த மீம் - 173
ஆக மொத்தம் 817
817 = 19 பு 43
என்று கணக்குக் காட்டுகிறான். மேற்கண்ட மூன்று எண்களில் எதுவுமே 19ஆல் வகுபடாது. மொத்தமாகக் கூட்டினால் கூட 19ஆல் வகுபடாது.
அவன் காட்டியிருப்பது கள்ளக் கணக்காகும். ஏனெனில் இந்த அத்தியாயத்தில் 386 அலிஃப்கள் உள்ளன. 347 அல்ல.
எனவே 386+297+173 = 856
இது தனித்தனியாகவும், மொத்தமாகக் கூட்டினாலும் 19ஆல் வகுபடாது.
அதே போல் 32வது அத்தியாயமும் அலிஃப், லாம், மீம் என்று துவங்குகிறது.
இதுபற்றி இவன் பின்வருமாறு கணக்குக் காட்டுகிறான்.
மொத்த அலிஃப் - 257
மொத்த லாம் - 155
மொத்த மீம் - 158
ஆக மொத்தம் 570
570 = 19 பு 30
இம்மூன்று எண்களில் எதுவும் 19ஆல் வகுபடாது என்பதால் இம்மூன்றில் எந்த எழுத்தும் 19ஆல் வகுபடும் அளவில் இல்லை என்பது உறுதி.
மொத்தமாகக் கூட்டினால் 19ஆல் வகுபடுமா? என்றால் தவறான கணக்குக் காட்டினால் தான் வகுபடும். சரியான எண்ணிக்கையைக் கூறினால் வகுபடாது.
இவன் வெளியிட்ட புளுகுப் பட்டியலில் இருந்தே உண்மையை அறியலாம்.
5வது வசனத்தில் 13 அலிஃப்
6வது வசனத்தில் 4 அலிஃப்
7வது வசனத்தில் 5 அலிஃப்
8வது வசனத்தில் 21 அலிஃப்
9வது வசனத்தில் 7 அலிஃப்
10வது வசனத்தில் 11 அலிஃப்
13வது வசனத்தில் 11 அலிஃப்
என்று கூறுகிறான். இவை முற்றிலும் தவறாகும். இவ்வசனங்களில் இவன் கூறுகின்ற எண்ணிக்கையில் அலிஃப்கள் இல்லை.
ஆக அலிஃப், லாம், மீம் எனத் துவங்கும் ஆறு அத்தியாயங்களில் ஒரு அத்தியாயத்தில் கூட எந்த எழுத்தும் 19ஆல் வகுபடாது. மொத்தமாகக் கூட்டினாலும் 19ஆல் வகுபடாது. 19க்கும், இந்த அத்தியாயங்களின் எழுத்துக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இவனுக்கு நிகரான பொய்யன், பித்தலாட்டக்காரன் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தெரிகிறதா?
அலிஃப், லாம், மீம் மட்டுமின்றி எஞ்சிய மற்ற இனிஷியல்(?) அத்தியாயங்களிலும் இவன் ஏராளமான தகிடுதத்தங்கள் செய்துள்ளான்.
அலிஃப், லாம், ரா எனத் துவங்கும் அத்தியாயங்களை எடுத்துக் கொண்டு ரஷாத் கலீபா கணக்குக் காட்டுகிறான். அடிவருடிகளின் மடமையில் முழு நம்பிக்கை வைத்து இந்தக் கணக்கிலும் ஏராளமாகப் புளுகியிருக்கிறான்.
அலிஃப், லாம், ரா என்பது 10வது அத்தியாயத்தின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் பற்றி பின்வருமாறு இவன் கணக்குக் காட்டுகிறான்.
அலிஃப் - 1319
லாம் - 913
ரா - 257
ஆக மொத்தம் 2489
இதை 19ஆல் வகுக்க முடியும் (19*131=2489) என்று கூறுகிறான்.
இவன் காட்டுகின்ற கணக்கின்படி பார்த்தாலும் இம்மூன்று எழுத்துக்களும் தனித்தனியாக பார்த்தால் 19ஆல் வகுபடாது. மூன்றையும் கூட்டினால் தான் 19ஆல் வகுபடுகிறது.
ஆனால் இதுவும் வழக்கம் போலவே கள்ளக் கணக்காகும். ஏனெனில் இந்த அத்தியாயத்தில் இவன் கூறுவது போல 1319 அலிஃப்கள் இல்லை; மாறாக 1366 அலிஃப்கள் உள்ளன.
1366+913+257=2536, மொத்தம் 2536 வருகிறது. இவன் கூறுவது போல் 2489 அல்ல. 2536 என்ற எண் 19ஆல் வகுபடாது.
அலிஃப்களுக்குப் பல வடிவம் உள்ளதாலும், எண்ணும் போது குழப்பம் ஏற்படும் என்பதாலும் அலிஃப்கள் எண்ணிக்கையில் துணிந்து கள்ளக் கணக்கு காட்டுகிறான்.
உதாரணமாக இந்த அத்தியாயத்தில் 5வது வசனத்தில் 19 அலிஃப்கள் இருப்பதாக அவன் பட்டியல் போட்டுள்ளான். ஆனால் 18 அலிஃப்கள் தான் உள்ளன. அது போல் 6வது வசனத்தில் 12 அலிஃப்கள் என்று இவன் கூறுகிறான். ஆனால் 14 அலிஃப்கள் இந்த வசனங்களில் உள்ளன. இப்படி ஏராளமான வசனங்களில் அலிஃப்களின் எண்ணிக்கை பற்றி கண்டபடி உளறியுள்ளான்.
அடுத்து 11வது அத்தியாயத்திலும் அலிஃப், லாம், ரா, இடம் பெற்றுள்ளது. இது பற்றி அவன் பின்வருமாறு கணக்குக் காட்டுகிறான்.
அலிஃப் - 1370
லாம் - 794
ரா - 325
மொத்தம் 2489
(19பு131=2489) இது 19ஆல் வகுபடுகிறது என்கிறான், இதிலிருந்து இம் மூன்று எழுத்துக்களும் தனித்தனியாக வகுத்தால் 19ஆல் வகுபடாது என்பதை அவனே ஒப்புக்கொள்கிறான். மூன்றையும் கூட்டினால் வகுபடுமா என்றால் நிச்சயம் வகுபடாது. வழக்கம் போலவே இங்கேயும் கள்ளக்கணக்குக் காட்டியுள்ளான்.
இவன் கூறுவது போல் 1370 அலிஃப்கள் இந்த வசனத்தில் இல்லை. மாறாக 1421 அலிஃப்கள் உள்ளன. இந்தக் கணக்குப்படி இம்மூன்றின் கூட்டுத் தொகை 1421+793+323=2537 ஆகும். இந்தக் கூட்டுத் தொகை 19ஆல் வகுபடாது.
ஒவ்வொரு வசனத்திலும் அலிஃப்கள் எண்ணிக்கையை வழக்கம் போலவே பட்டியலிட்டுள்ளான். இந்தப் பட்டியலிலும் பல வசனங்களில் தில்லுமுல்லு செய்துள்ளான். உதாரணமாக முதல் வசனத்தில் 4 அலிஃப்கள் என்று இவன் கூறுகிறான். ஆனால் ஐந்து அலிஃப்கள் உள்ளன. அது போல் மூன்றாம் வசனத்தில் 15 அலிஃப்கள் என்கிறான். ஆனால் 16 அலிஃப்கள் உள்ளன. இப்படி ஏராளமாக தில்லுமுல்லுகள் செய்துள்ளான்.
இது போல் 12வது அத்தியாயத்திலும் அலிஃப், லாம், ரா இடம் பெற்றுள்ளது. இது பற்றி அவன் காட்டும் கணக்கு இது தான்.
அலிஃப் - 1306
லாம் - 812
ரா - 257
மொத்தம் 2375
19பு125=2375, என்று கூறுகிறான். இவனது வாதப்படி இம்மூன்று எழுத்துக்களில் எதுவும் 19ஆல் வகுபடும் அளவில் இல்லை என்பது உறுதியாகின்றது.
மொத்தமாகக் கூட்டினாலும் 19ஆல் வகுபடாது. ஏனெனில் இவன் கூறுவது போல் 1306 அலிஃப்கள் இந்த அத்தியாயத்தில் இல்லை. மாறாக 1378 அலிப்கள் உள்ளன. எனவே மொத்தமாகக் கூட்டினால் 1378+812+257=2447. இந்த எண் 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்தில் இவன் செய்த தில்லுமுல்லுக்கு உதாரணமாக முதல் வசனத்தில் 5 அலிஃப்கள் என்று கூறுகிறான். ஆனால் 6 அலிஃப்கள் உள்ளன. நான்காம் வசனத்தில் 11 அலிஃப்கள் என்கிறான். ஆனால் 12 அலிஃப்கள் உள்ளன. இப்படி பல கள்ளக் கணக்குகளைக் காட்டியுள்ளான்.
இது போல் 14வது அத்தியாயத்திலும் அலிஃப், லாம், ரா இடம் பெற்றுள்ளது. இதுபற்றி அவன் கீழ்க்கண்டவாறு கணக்குக் காட்டுகிறான்.
அலிஃப் - 585
லாம் - 452
ரா - 160
மொத்தம் 1197
19பு63=1197.
இவனது வாதப்படியே இம்மூன்று எழுத்துக்களில் எந்த ஒன்றும் 19ஆல் வகுபடும் எண்ணிக்கையில் இல்லை என்பது உறுதி.
மொத்தமாகக் கூட்டினால் 19ஆல் வகுபடுமா என்றால் நிச்சயமாக வகுபடாது. ஏனெனில் இந்த அத்தியாயத்தில் இவன் கூறுவது போல் 585 அலிஃப்கள் இல்லை. மாறாக 614 அலிஃப்கள் உள்ளன. இந்தச் சரியான கணக்கின்படி 614+452+160=1226. இந்த எண் 19ஆல் வகுபடாது.
இவன் கள்ளக் கணக்குக் காட்டியதற்குச் சான்றாக முதல் வசனத்தையே எடுத்துக் கொள்ளலாம். இதில் 12 அலிஃப்கள் இருப்பதாக இவன் கணக்குக் காட்டியுள்ளான். ஆனால் 16 அலிஃப்கள் உள்ளன. இது போல் பலவசனங்களிலும் கள்ளக் கணக்குக் காட்டியுள்ளான்.
அடுத்து 15வது அத்தியாயத்திலும் அலிப், லாம், ரா இடம் பெற்றுள்ளது. இது பற்றி அவன் பின்வருமாறு கணக்குக் காட்டுகிறான்.
அலிஃப் - 493
லாம் - 323
ரா - 96
மொத்தம் 912
19பு48=912 என்பது இவன் காட்டும் கணக்கு.
இவன் கணக்குப்படியே இம்மூன்று எழுத்துக்களில் எந்த ஒன்றும் 19ஆல் வகுபடவில்லை. மூன்றையும் கூட்டினால் வகுபடுமா என்றால் பொய்க் கணக்குக் காட்டினால் தான் வகுபடும்.
உண்மையில் இந்த அத்தியாயத்தில் இவன் கூறுவது போல் 493 அலிஃப்கள் இல்லை. மாறாக 527 அலிஃப்கள் உள்ளன. இந்தக் கணக்குப்படி 527+323+96=946 ஆகும். இது 19ஆல் வகுபடாது.
இந்த அத்தியாயத்திலும் பல வசனங்களில் அலிஃப்களின் எண்ணிக்கையை வாயில் வந்தபடி உளறி இருக்கிறான். உதாரணமாக 6வது வசனத்தில் 7 அலிஃப்கள் என்கிறான். ஆனால் 8 அலிஃப்கள் உள்ளன. இப்படி பல வசனங்களில் பொய்க் கணக்குக் காட்டுகிறான்.
எனவே அலிஃப், லாம், மீம் போலவே அலிஃப், லாம், ரா எனும் எழுத்து இடம் பெற்ற அத்தியாயங்களிலும் இம்மூன்று எழுத்துக்களும் தனித்தனியாக எண்ணினாலும் மொத்தமாகக் கூட்டினாலும் 19ஆல் வகுபடாது என்பது சந்தேகமற நிரூபணமாகின்றது.
இறுதியாக அலிஃப், லாம், மீம், ஸாத் என்ற அத்தியாயத்தை எடுத்துக் கொள்கிறான். ஏழாவது அத்தியாயமான இந்த அத்தியாயம் குறித்து பின் வருமாறு அவன் கணக்குக் காட்டுகிறான்.
அலிஃப் - 2529
லாம் - 1530
மீம் - 1164
ஸாத் 97
மொத்தம் 5320
19பு280=5320 என்று கணக்குக் காட்டுகிறான். இவன் காட்டுகின்ற கணக்கின்படி பார்த்தாலும் இந்த நான்கு எழுத்துக்களில் எந்த ஒன்றும் 19ஆல் வகுபடவில்லை. மொத்தமாகக் கூட்டினால் வகுபடுமா என்றால் அப்போதும் வகுபடாது. ஏனெனில் இந்த அத்தியாயத்தில் இவன் கூறுவது போல் 2529 அலிஃப்கள் இல்லை. மாறாக 2651 அலிஃப்கள் உள்ளன. இந்தச் சரியான கணக்கின் படி 2651+1530+1164+97=5442 ஆகும். இது 19ஆல் ஆல் வகுபடாது.
வழக்கம் போலவே இந்த அத்தியாயத்திலும் அலிஃப்கள் விஷயத்தில் பல மோசடிகளை ரஷாத் கலீபா செய்திருக்கிறான்.
உதாரணத்துக்குச் சொல்வது என்றால் 3வது வசனத்தில் 12 அலிஃப்கள் என்று அவன் கூறுகிறான். ஆனால் இருப்பது 11 அலிஃப்கள் தான். நான்காவது வசனத்தில் 10 அலிஃப்கள் என்கிறான். ஆனால் 12 அலிஃப்கள் உள்ளன. இப்படி வசனங்கள் நெடுகிலும் பொய்யான எண்ணிக்கையைக் கூறியுள்ளான். ஆக அவன் கூறுகின்ற இன்ஷியல் எழுத்துக்கள் கொண்ட அத்தியாயங்களுக்கும், 19க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளோம்.
முதலில் அருளப்பட்ட 96வது அத்தியாயத்தில் மொத்த எழுத்துக்கள் 285 இருக்கிறது. இது 19ஆல் வகுபடும் என்று கூறியுள்ளான்.
இது பற்றி அவன் இரண்டு நூல்களில் இரண்டு விதங்களில் முரண்பட்டுக் கூறுகிறான். "விஷுவல் பிரசன்டேசன்'' என்ற நூலில் 17ஆம் பக்கத்தில் குறிப்பிடும் போது "96வது அத்தியாயத்தில் 285 எழுத்துக்கள் உள்ளன'' எனக் குறிப்பிட்டுள்ளான். ஆனால் இவன் வெளியிட்ட "குர்ஆன்மொழி பெயர்ப்பு'' என்ற பித்தலாட்ட நூலில் பக்கம் 376ல் குறிப்பிடும் போது "96வது அத்தியாயத்தில் 304 எழுத்துக்கள் உள்ளன'' எனக் குறிப்பிட்டுள்ளான். ஆனால் இந்த இரண்டு எண்களுமே தவறானதாகும்.
ஏனெனில் 96வது அத்தியாயத்தில் உள்ள எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் அதில் 288 எழுத்துக்கள் தான் இருக்கும். சில தில்லுமுல்லுகள் செய்து மூன்று எழுத்தைக் குறைத்து 285 என்கிறான். இந்த எண் தான் 19ஆல் வகுபடும் என்பதற்காகவே இந்தக் கள்ளக் கணக்கு.
இதைவிட பெரிய சான்றாக அமைந்திருப்பது அவன் தன்னை இறைத்தூதன் என்று நிரூபிக்க எடுத்துக் காட்டும் சான்றுகள். இவற்றை சராசரி மனிதன் கூட பைத்தியக்காரனின் உளறல் என்று கண்டுபிடித்து விட முடியும்.
அதை விளங்குவதற்கு முன்னால் மற்றொரு முக்கியமான விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைய உலகில் நியூமராலஜி என்ற பெயரில் எழுத்துக்களுக்கு எண்களின் மதிப்பை வழங்கி பல கிறுக்குத்தனங்கள் நடந்து வருவதை அறிவோம். இந்த மூட நம்பிக்கைக்கு முஸ்லிம்களில் உள்ள மார்க்கமறியாதவர்கள் தான் வழிகாட்டியுள்ளார்கள். தாயத்து, தட்டு, தகடு போன்ற காரியங்களுக்கு இது பயன்படும் என்பதால் இப்படி ஒரு கணக்கைக் கண்டுபிடித்தனர். இந்த மூடத்தனமான கணக்கைத் தான் இவன் தனக்குச் சான்றாகக் காட்டுகிறான்.
இந்த வகையில் தான் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு 786 என்று மார்க்க அறிவு இல்லாதவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதை அப்ஜத் கணக்கு என்கின்றனர். இந்த எழுத்துக்கு, இந்த எண் மதிப்பு என்று தீர்மானித்தது யார்? அல்லாஹ்வா? திருக்குர்ஆனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லாஹ் இப்படிக் கூறியிருக்கிறானா? நிச்சயமாக இல்லை.
யூதர்கள் தங்களின் ஹிப்ரு மொழிக்கு பயன்படுத்தியது தான் இந்த அப்ஜத் கணக்கு. சில அரபு எழுத்துக்கள் தவிர எல்லா அரபு எழுத்துக்களும் ஹிப்ரு மொழியிலும் உள்ளது. ஹிப்ரு மொழியில் யூதர்கள் எந்த எழுத்துக்கு எந்த எண்ணைக் கொடுக்கிறார்களோ அதையே தான் இவர்களும் கொடுத்துள்ளனர். அரபு மொழியில் உள்ள ஆறு எழுத்துக்கள் ஹிப்ரு மொழியில் இல்லாததால் அதற்கு மட்டும் இவர்கள் புதிதாக எண்கள் இட்டுள்ளனர்.
இந்த யூதக் கணக்கை ஆதாரமாகக் காட்டி தன்னை இறைத்தூதர் என்றான்.
இவன் பெயர் ரஷாத் கலீஃபா. இதில் ரஷாத் என்பதில் ரா (200), ஷீன் (300), அலிஃப் (1),தால் (4) ஆகிய நான்கு எழுத்துக்கள் உள்ளன. இதன் மதிப்பு 505 ஆகும். (200+300+1+4=505)
கலீஃபா என்பதில் ஹா (600), லாம் (30), யா (10), ஃபா (80), ஹா (5) ஆகிய ஐந்து எழுத்துக்களின் மதிப்பு 725 ஆகும். (600+30+10+80+5=725)
இந்த இரண்டையும் கூட்டினால் 1230 என்று இந்தக் கணக்கை முதலில் காட்டுகிறான்.
இதை அடிப்படையாக வைத்து தன்னை இறைத்தூதர் என்று அவன் நிரூபிக்கும் லட்சணத்தைப் பாருங்கள்!
2:119 வசனம் உம்மை சத்தியத்துடன் தூதராக அனுப்பியுள்ளோம் என்று கூறுகிறது. இவ்வசனம் தன்னைத் தான் கூறுகிறது என்று இவன் வாதிடுகிறான். இவனைத் தான் குறிக்கிறது என்பதற்கு என்ன சான்று என்கிறீர்களா? ரஷாத்துடைய எண் 505, கலீஃபாவுடைய எண் 725 இவ்விரண்டுடன் 119ஐக் கூட்டுங்கள். 1349 வருகிறதா? இது 19ஆல் வகுபடுவதால் 19ஐக் கண்டு பிடித்த எண்னைத் தான் அது குறிக்கிறது என்பது இவனது வாதம். (71*19=1349)
அதாவது இவ்வசனம் 119ஆவது வசனமாக அமைந்துள்ளதால் இவன் பெயருக்குரிய எண்ணுடன் 119ஐக் கூட்ட வேண்டும் என்கிறான்.
இந்த வாதத்திலிருந்தே இவன் மறைகழன்றவன் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும், என்றாலும் இவன் எடுத்துக் காட்டும் மற்றொரு சான்றைப் பார்த்தால் இன்னும் உறுதியாக இவனைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
5:19 வசனத்தில் நமது தூதர் உங்களிடம் வந்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதுவும் தன்னைத் தான் குறிப்பிடுகிறது என்பது இவனது வாதம். எப்படி என்று கேட்கிறீர்களா? ஏற்கனவே கூறியவாறு தான் இங்கேயும் கூறுவான் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
இவன் ஏற்கனவே காட்டிய கணக்குப்படி 505+725 உடன் வசன எண் 19ஐக் கூட்டினால் 1249 வரும். இது 19ஆல் வகுபடாதே என்று நீங்கள் குழம்புவீர்கள். இந்தக் கிறுக்கனுக்கு அது பற்றிக் கவலையில்லை. இன்னொரு ஐந்தைக் கூட்டுங்கள் (1249+5=1254) இது 19ஆல் வகுபடும் என்று கூறுகிறான். ஐந்தை ஏன் கூட்ட வேண்டும் என்கிறீர்களா? ஐந்தாவது அத்தியாயத்தில் இவ்வசனம் உள்ளதால் ஐந்தைச் சேர்க்க வேண்டுமாம்!
அப்படியானால் ஏற்கனவே இரண்டாவது அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனத்திற்காக இரண்டை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டால் இரண்டைச் சேர்க்காமலே 19 வந்து விட்டதே என்பான். இவனைக் கிறுக்கன் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
26:214 முதல் 223 வரை உள்ள வசனங்களில் உமது உறவினரை எச்சரிப்பீராக என்று தொடங்கி பல விஷயங்கள் கூறப்படுகிறது. இதுவும் தன்னையே குறிக்கிறது என்று இவன் வாதிட்டான்.
505+725 உடன் 214ஐச் சேர்க்க வேண்டுமாம்! 1444 வருமாம்! இது 19ஆல் வகுபடுமாம்! (76பு19=1444) எனவே இது தன்னைத் தான் குறிக்கிறது என்றான்.
இங்கே வசன எண்ணை மட்டும் சேர்த்தவன், 26வது அத்தியாயத்தில் இடம் பெறுவதால் 26ஐச் சேர்க்கவில்லை. காரணம் 26-ஐ சேர்த்தால் அது 19ஆல் வகுபடாது.
25வது அத்தியாயம் 27, 28, 29, 30 ஆகிய நான்கு வசனங்களில் தூதர் பற்றிக் கூறப்படுகிறது. இது தன்னைத் தான் குறிப்பிடுகிறது என்று வாதிட்ட இவன் முன்பு கூறியது போல் கணக்குக் காட்டுவான் என்று நினைத்தால் நீங்கள் ஏமாறத் தான் வேண்டும். இது உலகத்தில் யாரும் கண்டுபிடிக்காத கிறுக்கர்களுக்கு மட்டுமே தெரிந்த புதுமையான கணக்கைக் காட்டியுள்ளான்.
இவனது பெயர் 505+725=1230 இத்துடன் 27வது வசனத்துக்காக 27ஐக் கூட்டினால் 1230+27=1257 வருகின்றது.
இது 19ஆல் வகுபடாது.
சரி 28வது வசனமும் இதன் தொடர்ச்சியாக உள்ளதால் 28ஐயும் கூட்டுங்கள். 1257+28=1285 ஆகும்.
இதுவும் 19ஆல் வகுபடாது. 29வது வசனமும் இதன் தொடர்ச்சியாக உள்ளதால் 29ஐயும் கூட்டுங்கள். 1285+29=1314 ஆகும்.
இதுவும் 19ஆல் வகுபடாது. அதனால் கவலையில்லை. 30வது வசனமும் இதன் தொடர்ச்சியாக உள்ளதால் ஒரு 30ஐக் கூட்டுங்கள். 1314+30=1344 ஆகும்.
இதுவும் 19ஆல் வகுபடவில்லையா? 25வது அத்தியாயத்தில் இந்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் அதற்காக ஒரு 25ஐச் சேருங்கள்! 1344+25=1369 ஆகும்.
என்ன செய்தாலும் 19ஆல் வகுபட மாட்டேன் என்கிறதா? அப்படியானால் உங்களுக்குக் கணக்குத் தெரியவில்லை. இதை வேறு விதமாக புதுமையாக மென்டல் கணக்குப்படி கூட்டினால் 19ஆல் வகுபடும்.
"மென்டல் கணக்கு'' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு நீங்கள் 25 ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள். மறுநாள் மற்றொரு 25 ரூபாய் கொடுக்கிறீர்கள். இப்போது அவர் தர வேண்டியது ஐம்பது ரூபாய் என்றால் அது சுய நினைவுடன் உள்ளவர்களின் கணக்கு.
ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு இரண்டாயிரத்து ஐநூற்று இருபத்து ஐந்து ரூபாய் கேட்டால் அது தான் மென்டல் கணக்கு. அதாவது முதலில் கொடுத்த 25 உடன் மேலும் 25ஐச் சேர்க்கும் போது வரிசையாகச் சேர்க்க வேண்டும். 25 25 இப்படிச் சேர்த்தால் 2,525 ஆகும் அல்லவா? இந்த மென்டல் கணக்குப்படி மேற்படி வசனங்களை நீங்கள் கணக்குப் போட்டால் 19ஆல் வகுபடுமாம். அதாவது 505, 725, 25, 27, 28, 29, 30 இப்படி 16 இலக்கம் கொண்ட கோடிகோடி எண்ணாக ஆக்கினால் அது 19ஆல் வகுபடும் என்கிறான்.
இவனும், இவனது அடிவருடிகளும் முழுமையான பைத்தியக்காரர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
அடுத்து 28வது அத்தியாயம் 44 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து அல்லாஹ் பேசுகிறான். இதுவும் தன்னைத் தான் குறிக்கிறது என்று இவன் வாதிட்டான். இதற்கு இவன் காட்டிய கணக்கு முன்பு காட்டியதில் பாதியும் அதற்கு முன் காட்டிய கணக்கில் பாதியும் கலந்த சூப்பர் மென்டல் கணக்கு.
அது எப்படி என்கிறீர்களா? ரஷாத்துக்கு 505ஐயும், கலீபாவுக்கு 725ஐயும் 505 725 என்று சேர்க்காமல் முறையாகக் 505+725 என்று கூட்ட வேண்டுமாம். 1230 வருகிறதா?
இதுவரை சரியாகக் கூட்டிவிட்டு அதன் பிறகு கிறுக்குப் பிடிக்க வேண்டுமாம். 1230 உடன் 44ஐக் கூட்டக் கூடாதாம். 1230 44 என்று வரிசையாகச் சேர்த்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 44 என்று மாற்ற வேண்டுமாம்.
1230 உடன் 44 சேர்த்தால் 1274 என்பது சுயநினைவுள்ளவர்கள் கணக்கு, 123044 என்பது சூப்பர் மென்டல் கணக்கு. இந்தத் தொகை 19ஆல் வகுபடுமாம். எவ்வளவு பெரிய பைத்தியக்காரனைத் தூதர் என்கிறார்கள் புரிகிறதா?
அடுத்து 44வது அத்தியாயத்தில் 13வது வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிக் கூறப்படுகிறது. ஆனால் இது தன்னைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டான். இதற்கு இது வரை கூறிய எந்தவிதமான முறையையும் கையாளாமல் முற்றிலும் வேறுபட்ட கணக்கைக் காட்டுகிறான்.
ரஷாத்துக்கு 505
கலீஃபாவுக்கு 725
அத்தியாயத்திற்கு 44
வசனத்துக்கு 13
இது 19ஆல் வகுபடாது. மென்டல் கணக்குப்படியும், சூப்பர் மென்டல் கணக்குப்படியும் கூட இது 19ஆல் வகுபடாது. இவனும் என்னென்னவோ செய்து பார்த்தான். எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை. எனவே ரஷாத் கலீஃபாவைச் சாகடித்து விட்டு 19இல் அடக்கம் செய்து விட்டான். ஆம்! இந்த இடத்தில் 505ஐயும், 725ஐயும் கண்டு கொள்ளக் கூடாதாம். 44 உடன் 13ஐக் கூட்டுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமாம்! 44+13=57 (19*3=57) இவன் எவ்வளவு பெரிய பைத்தியக்காரன் என்பது இப்போதாவது புரிகிறதா?
27வது அத்தியாயத்தில் 82வது வசனம் யுகமுடிவு நாளின் போது ஒரு பிராணியை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. இறுதி நாளில் வரும் அந்தப் பிராணி நானே என்று வாதிட்டான். இறுதிக் காலத்தில் வரவிருக்கும் தூதரைப் பற்றியே இது முன்னறிவிப்புச் செய்ததாம்.
இப்போது அவன் காட்டும் கணக்கே அலாதியானது. யாருடைய கற்பனையிலும் தோன்றியிராதது.
27வது அத்தியாயத்தில் 82வது வசனத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனவே 2+7+8+2=19 என்று கூட்ட வேண்டுமாம்!
தன்னைத் தூதர் என்பதற்கு இது போன்ற கிறுக்குத் தனமான பல கணக்குகளைக் கண்டுபிடித்து அடி வருடிகளை முட்டாள்களாக்கியுள்ளான்.
இதை விழுங்கி ஏப்பம் விடும் இன்னொரு கணக்கையும் இவன் கண்டுபிடித்துள்ளான்.
4687
362
41
-----
5090
-----
என்பதை இவன் சில இடங்களில்
4687
362
41
------
12407
------
என்று கூட்டியுள்ளான். அதாவது பத்து ஸ்தானத்தை ஆயிரம் ஸ்தானத்தில் வைத்துக் கூட்டி 19ஆல் வகுபடும் என்று உளறியிருக்கிறான்.
தன்னை முழுக்கிறுக்கன் என்று சந்தேகமற நிரூபித்துக் காட்டியவன் உலக வரலாற்றிலேயே இவன் ஒருவனாகத் தான் இருக்க முடியும்.
சூப்பர் கம்ப்யூட்டரில் கூட அடங்காத எண்ணிக்கையையும் கூட மலைப்பை ஏற்படுத்தும் வகையில் இவன் குறிப்பிடுகிறான்.
பகரா அத்தியாயத்தில் 286 வசனங்கள் உள்ளது அல்லவா? இதை 1 என்று ஆரம்பித்து 286 வரை நீளமாக எழுதியுள்ளான். 123456789101112131415 161718................286 என்று யார் கணக்குப் பார்க்க முடியும் என்ற தைரியத்தில் உளறியுள்ளான்.
கிறுக்கனும், பொய்யனும் நல்ல மனிதனாகக் கூட இருக்க முடியாது எனும் போது இறைவனின் தூதராக எப்படி இருக்க முடியும்?
என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் மனிதனின் பலவீனம் அப்படியே தான் இருக்கிறது. 19 விஷயமும் அத்தகைய ஒன்று தான்.
மனிதன் எண்களை அறிந்த நாள் முதலே அதன் மீது வியப்பும், பயமும் கொண்டான். சில எண்கள் தனக்கு நன்மை செய்யுமென்றும் சில எண்கள் தனக்குத் தீங்கிழைக்குமென்றும் நம்பினான். தனக்கு ராசியான எண்கள் என்று சிலதைக் குறித்துக் கொண்டான். சிலதை ராசியில்லாதவை என்றான்.
நியூமராலஜி என்று ஒன்றை உருவாக்கினான். அதன்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்தான். சில மந்திரங்களை எழுதி அதை நியூமராலஜிப்படி எண்களாக மாற்றினான். அந்த எண்களைக் கூட்டி வரும் விடை அந்த மந்திரத்தைக் குறிப்பதாக எண்ணினான். நீளமான மந்திரங்களை சிறு எண்களாக மாற்றினான். இப்படி மாற்றிய பல மந்திர எண்களை தகடுகளில் எழுதி வீட்டுச் சுவரில் மாட்டினான். தாள்களில் எழுதி கையிலும் கழுத்திலும் மாட்டினான். இவை தனக்கு நல்லது என்று நம்பினான்.
13 போன்று சில எண்ணுள்ள வீடுகளில் வசிக்க மறுத்தான். 12க்கு பிறகு 12-ஏ, 14, 15, 16 என்று வீடுகளுக்கு கதவிலக்கம் கொடுத்தான்.
காட்டுவாசிகள், மலைஜாதி மக்கள் மட்டுமின்றி படித்து பண்பட்டவர்களாகக் கருதப்படும் அமெரிக்கா, ஐரோப்பா மக்கள் வரை இந்த மூடநம்பிக்கைகள் உள்ளன.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில மக்கள் ஒரு சில எண்களைச் சிறப்பானதாகக் கருதினர். அவ்வாறே 19 என்ற எண்ணையும் சிலர் புனிதமாக அவ்வப்போது கருதி வந்துள்ளனர்.
யூதர்களின் ஒவ்வொரு பிரிவினரிடமும் ஒரு எண் புனிதமானதாக இருந்தது. 19ஆம் எண்ணைப் புனிதமாகக் கருதும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர். மற்றவர்களைப் போலவே அவர்களும், அண்ட கோளங்கள் அனைத்தையும் 19இல் அடக்கி விளையாடி வந்தனர்.
(இவ்வுண்மையை ரஷாது கலீஃபாவும் ஏற்றுக் கொண்டுள்ளான். அவன் தனது quran # the final testament என்னும் நூலில் பக்கம் 403ல் இவ்வாறு கூறுகிறான்.)
முதன் முறையாக 19 எண்ணுக்கு ஒரு மதத்தின் பெயரால் அங்கீகாரம் கொடுக்க முயன்றது கி.பி. 816 (ஹிஜ்ரி 201)ல் தான்.
ஈரானிலுள்ள குராசான் பகுதியைச் சார்ந்த பாபக் குராமி என்றொரு பொய்யன் 19ஐ அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சித்தாந்தத்தைத் தோற்றுவித்தான். சுமார் இருபதாண்டுகள் முஸ்லிம்களிடையே குழப்பம் செய்து வந்த இவன் ஹிஜ்ரி 223 (கி.பி.837)ல் கொலை செய்யப்பட்டான்.
இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரை அவனது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்தே வந்திருக்கின்றனர்.
பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இதே குராசான் பிரதேசத்தைச் சார்ந்த ஹுஸைன் புஸ்ருயி என்பவன் இரண்டு புதிய கொள்கைகளின் ஊற்றுக் கண்ணாக இருந்தான்.
குராசானின் புஸ்ரவையா என்னும் கிராமத்தில் பிறந்த இவனது வழி காட்டுதலில் தான் பாபிசம் தோன்றியது. அது பிறகு பஹாயிசமாக மாறியது.
தன்னை 'பாபு'ல் பாப் என்று கூறிய இவனும், தன்னை 'பாப்' என்று அறிவித்த அலி முஹம்மது ஷீராஸியும், தன்னை ‘பஹாவுல்லா' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட மிர்சா ஹுஸைன் அலியும் அவர்களது ஆரம்ப கால சீடர்களான மற்றும் 16 பேரும் ஷியாக்களின் இத்னா அஷ்அரியா (12 இமாம்கள் கூட்டம்) பிரிவைச் சார்ந்தவர்கள்.
இஸ்லாமின் பெயரில் தோன்றிய ஏறத்தாழ அத்தனை வழிகெட்ட கொள்கைகளும் வழிதவறிய கூட்டமான ஷியாக்களிடமிருந்தே உருவாகின. 12 (இமாம்கள்), 5 (அல்லாஹ், அலி, பாத்திமா, ஹசன், ஹுஸைன் - பஞ்சா), போன்ற எண்களைப் புனிதமாகக் கருதி பழகிப் போன இந்த ஷியா பாஹாய்களுக்கு தங்களுக்கென்று ஒரு புனித எண் தேவைப்பட்டது. எனவே அவர்கள் 19 என்ற எண்ணைத் தேர்ந்தெடுத்து அதைப் புனிதமானது என்றும், அதைச் சுற்றியே அகில மனைத்தும் இயங்குவதாகவும் கூறினார்கள்.
அவர்களது கோட்பாடுகளிலும் 19 முக்கியப் பங்கை வகிக்கிறது. அவற்றுள் சிலவற்றைக் கீழே தருகிறோம்.
1. பாப் பிறந்த ஆண்டு 1819 - 1+8+1+9=19
2. பாப் பிறந்தது 19ஆம் நூற்றாண்டில்
3. பாப் பிறந்தது 19ஆம் நூற்றாண்டின் 19ஆம் வருடத்தில்
4. தன்னை பாப் என்று அறிவித்த போது அவனையும் சேர்த்து 19 பேர் அந்தக் கொள்கையிலிருந்தனர்.
5. ஒவ்வொரு வருடத்தையும் 19 மாதங்களாகப் பிரித்தனர்.
6. ஒவ்வொரு மாதத்தையும் 19 நாட்களாகப் பிரித்தனர்.
7. வருடத்தில் 19 நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் (அவர்கள் நோன்பு வேறு. இஸ்லாமிய நோன்பு வேறு)
8. 19 தடவை தலாக் கூறலாம்.
9. தலாக்கின் இத்தா காலம் 19 நாட்கள்.
10. கணவன் இறந்தால் இத்தா 5*19=95 நாட்கள்.
11. மாதவிலக்கான பெண்கள் 5*19=95 தடவை கழுவினால் போதும் (குளிக்க வேண்டாம்)
12. நகரில் வாழ்வோர் 19 மிஸ்கால் தங்கம் மஹர் கொடுக்க வேண்டும்.
13. கிராமங்களில் வாழ்வோர் 19 மிஸ்கால் வெள்ளி மஹர் கொடுக்க வேண்டும்.
14. ஜக்காத் 19 சதவீதம் கொடுக்க வேண்டும்.
15. ஒவ்வொரு 19 வருடத்துக்குப் பிறகும் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டைப் புதுப்பிக்க வேண்டும்.
16. திருமணம் நிச்சயம் செய்த 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னை பஹாவுல்லா என்று ஹுஸைன் அலி அறிவித்தான்.
17. ‘அல்லா-வு-அப்ஹா' என்று தினமும் 5பு19=95 தடவை கூற வேண்டும்.
18. தஸ்பீஹ் மணியில் 5பு19=95 முத்துக்கள் தானிருக்கும்.
19. இறந்தவரைப் புதைக்கு முன் கூறும் பிரார்த்தனை 19 தடவை கூற வேண்டும்.
20. ஒவ்வொரு 19ஆம் நாள் முடிவிலும், 19ஆம் நாள் பண்டிகை என்ற பண்டிகையை ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டும்.
21. ஒரு மித்கால் என்பது 19 நக்குட்களை கொண்டது. (1 மித்கால் = சுமார் 4. 1/2 பவுன்)
22. 19 மித்கால் தங்கத்திற்கு சமமான உடைமை இருந்தால் ஜக்காத் கடமையாகும்.
23. 19 மித்காலுக்கு மேலுள்ள சொத்துக்கு ஹுக்குள் (ஜக்காத்) கொடுக்கத் தேவையில்லை. அது இன்னொரு 19 மித்கால் தங்க மதிப்பை அடைந்தால் தான் அதற்கு ஹுக்குள் கொடுக்க வேண்டும்.
24. தன்னை பாப் என்று அலி முஹம்மது ஸிராஷி அறிவித்து 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னை பஹாவுல்லா என்று ஹுஸைன் அலி அறிவித்தான்.
25. அவர்களின் தண்டனைகளிலும் 19 இருக்கும். விபச்சாரம் செய்தவனுக்கு தண்டனை: முதல் தடவையாக இருந்தால் 19 மித்கால் தங்கம் அபராதம், இரண்டாம் முறையாக இருந்தால் அதற்கு இரட்டிப்பாக 2*19=38 மித்கால் தங்கம் அபராதம், மூன்றாம் முறை அதற்கு இரட்டிப்பாக 4*19=76 மித்கால் தங்கம் அபராதம்.
சரி! 19வது தடவையாக இருந்தால் மரண தண்டனை.
26. பஹாவுல்லா எழுதிய 'அக்தாஸ்' என்ற அவர்களின் வேதநூல் பல பாராக்களாகப் பிரித்திருக்கிறார்கள்.
முன்னர் இருந்த எண்ணிக்கைகளை மாற்றி இப்போது 10*19=190 பாராக்கள் வருமாறு பிரித்திருக்கிறார்கள்.
வழக்கம் போல் இஸ்லாமின் அனைத்து எதிரிகளுக்கும் முதல் புகலிடமான இஸ்ரேல் நாட்டின் ஹைபா நகரில் பஹாய் கூட்டத்தின் சர்வதேச தலைமையகம் உள்ளது.
யூதர்கள் என்ன தான் பாலூட்டி சீராட்டி இந்த பஹாயிசத்தை வளர்த்தாலும் அசத்தியம் சத்தியத்தை மறைக்க இயலாதல்லவா? ஆகவே இவர்களால் இஸ்லாமுக்கு எந்தத் தீங்கிழைக்கவும் முடியவில்லை.
இஸ்லாமை அழிப்பதற்கு ஆரம்ப காலம் முதலே யூதர்கள் முயன்று வந்தனர். இடைக்காலத்தில் கிறிஸ்தவர்களும் தங்களை அந்தப் பணியில் இணைத்துக் கொண்டனர். ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு கம்யூனிஸ்டுகளும் அதில் ஈடுபட்டனர்.
ஆனாலும் இதில் முழுமூச்சாய் இருப்பவர்கள் யூதர்கள் தாம்.
இஸ்லாமுக்கு வெளியேயிருந்து குழப்பம் செய்த பாபிசம் - பஹாயிசத்தை விட இஸ்லாமிலிருப்பதாகக் கூறிக் கொண்டு இஸ்லாமிற்கெதிராகப் பிரச்சாரம் செய்த காதியானிகள் தான் முஸ்லிம்களை அதிகமாகக் குழப்ப முடிந்தது என்பதை உணர்ந்த யூதர்களின் நவீன சதி தான் இந்த 19.
புதிதாய் ஒன்றைச் சொல்லிக் குழப்புவதை விட ஏற்கனவே பஹாய்கள் சொல்லிக் குழப்பிய 19லிருந்தே ஆரம்பிக்க முடிவு செய்து ஆள் தேடும் படலம் ஆரம்பமானது.
அமெரிக்க நாட்டையே ஆட்டிப் படைக்கும் சர்வ சக்தி கொண்ட அமெரிக்க யூதர்கள் குழு (American Jewish Lobby) அமெரிக்காவில் வேலை செய்து வந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த ரஷாது கலீஃபாவைத் தேர்ந்தெடுத்தது.
ரஷாது கலீஃபாவின் தந்தை பிரபலமான சூஃபியாக இருந்தார். புனித ஜான் என்று மனிதர்களைப் புனிதராக்கி, புனிதரைக் கடவுளாக்கும் யூதர்களின் சூஃபிசக் கொள்கையில் பிறந்து வளர்ந்தவருக்கு, மனிதன் இறைவனில் இரண்டறக் கலந்து ‘அனல் ஹக், அனல் ஹக்' (நானே இறைவன், நானே இறைவன்) என்று பித்துப் பிடித்து கத்துவதைச் சரி கண்டவருக்கு, மனிதன் இறைவனாகவே ஆகும் போது நீ இறைத் தூதராவதில் கஷ்டமேதுமில்லை என்பதைப் புரிய வைக்க யூதர்கள் சிரமப்படத் தேவையில்லாது போனது.
பிழைப்புக்காக அமெரிக்காவில் வேலை செய்ய வந்த ரஷாது கலீஃபாவுக்கு யூதக் கோஷ்டியினர் அமெரிக்கப் பிரஜை உரிமை பெற்றுத் தந்தனர். அதிகச் சம்பளம் தருகிறோம் - இப்போதுள்ள வேலையை விட்டுவிட்டு நாங்கள் சொல்லும் வேலையைச் செய் என்று பேரம் நடந்தது. எழுதும் பேனாவிலிருந்து கம்ப்யூட்டர் வரை வாங்கிக் கொடுக்கப்பட்டது. உதவிக்கு ஆட்களும் சப்ளை செய்யப்பட்டது. எரிசென், சீசர் மஜுல், அரிக், கர்மால்லி, யூசுப், பரக்கத், அபிப், எமிலி கே ஸ்டெர்ரட், ரமதான், எடிப் யுக்செல், காடுட் அடிசோமா, லிசா ஸ்ப்ரே என்ற யூதக் கூலிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
குர்ஆனைக் கம்ப்யூட்டரில் செலுத்தி ஆய்வு செய்யத் துவங்கினான் ரஷாது கலீஃபா. 19 பற்றி பக்கம் பக்கமாகப் பிய்த்து உதறுகிற உளறுகிற அளவிற்கு ஆய்வு செய்ய அவருக்கு எவ்வளவு சிறந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேரைப் பயன்படுத்தி இருப்பான்.
சாஃப்ட்வேர் புரோகிராமிங் மலிவாக இருக்கும் இன்றைக்கும் கூட ஒரு தனி புரோகிராம் செய்ய ஆகும் செலவிற்கு பல கம்ப்யூட்டர்களே வாங்கி விடலாம். அதிலும் அரபியில் புரோகிராம் செய்யும் ஆட்களும் அரிது.
ஆனால் ரஷாது கலீஃபாவோ இது 1968ல் நடந்ததாகக் கூறுகிறான். (வ்ன்ழ்ஹய் ற்ட்ங் ச்ண்ய்ஹப் ற்ங்ள்ற்ஹம்ங்ய்ற் பக்கம் 378-79) அப்போது அரபி சாப்ட்வேர் செய்ய எவ்வளவு செலவாகியிருக்கும். (நிறைய முறை 19ஆல் பெருக்கினால் விடை வரும்) இதை யூதர்களே பட்டுவாடா செய்தனர். அரபி சாப்ட்வேரும் அவர்களே தயாரித்துக் கொடுத்தனர். அரபியைத் தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இருந்த போதிலும் 1968 முதல் ஐந்தாண்டுகளாக இத்திட்டத்திற்கு அமெரிக்க டாலர்களாக முதலீடு செய்திருந்த யூத எஜமானர்கள் அவசரப்பட்டதால் அது வரை 19 பற்றி சேகரித்து வைத்திருந்த தகவல்களை முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்டு வெள்ளோட்டம் பார்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் பிரகாரம் 1973ஆம் ஆண்டு iracle of the quran significance of the mysterious alphabets குர்ஆனின் அற்புதம்: புதிரான எழுத்துக்களின் முக்கியத்துவம் என்ற பெயரில் ஒரு நூலைIslamic Productions எனும் தங்களின் சொந்தக் கம்பெனி மூலம் வெளியிட்டது. அதில் காஃப் என்று துவங்கும் 42, 50ஆம் சூராக்கள், ஸாத் என்று துவங்கும் 7, 19, 38 ஆகிய சூராக்கள், நூன் என்று ஆரம்பிக்கும் 68ஆம் சூரா ஆகியவை பற்றி மட்டும் சிறிது எழுதியிருந்தான். அந்த நூலுக்கு அதிக அளவில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
அப்பாவி முஸ்லிம்கள் சிலர் அந்த விளம்பரங்களில் மதியிழந்து தாங்களும் அந்த நூலின் பகுதிகளை சிறு பிரசுரங்களாக வெளியிட்டனர். இதனால் அவன் முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமானான்.
வெள்ளோட்டம் வெற்றி பெற்றது. திட்டம் திருப்தியளித்ததால் அதனையே தீவிரமாகச் செயல்படுத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. அதே பாணியில் ஆராய்ச்சி செய்வதில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டனர். 1968ல் துவங்கிய இந்தக் கரசேவை 1990ல் அவன் கொன்றொழிக்கப்பட்ட பின்னரும் அவனது அடியாட்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
இவர்களுக்கும், இஸ்லாமுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும், இவர்கள் இஸ்லாமில் குழப்பம் விளைவிப்பதற்காக யூதர்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதையும் மேலே நாம் குறிப்பிட்டுள்ள செய்திகளைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.
திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode