Sidebar

21
Sat, Dec
38 New Articles

ஹதீஸ்கள் தேவையா

ஹதீஸ் மறுப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஹதீஸ்கள் தேவையா?

கேள்வி:

ஹதீஸ் தேவை என்றால் நபி ஏன் அதை எழுதச் சொல்லவில்லை? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னவர்களின் வாதம் எப்படி உண்மை என்று நம்புவது ?

முஹம்மது ஃபைசல்

பதில் :

ஹதீஸ்கள் தேவையில்லை என்பதால் தான் அவற்றை எழுத வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற வாதம் தவறானது.

குர்ஆன் வசனங்கள் இறங்கினால் அதை உடனே நபித்தோழர்கள் எழுதிக் கொண்டிருந்தனர்.

இந்நேரத்தில் ஹதீஸ்களை எழுதினால் குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும் என்பதால் தான் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என்று ஆரம்ப நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5326حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَكْتُبُوا عَنِّي وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ وَحَدِّثُوا عَنِّي وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ قَالَ هَمَّامٌ أَحْسِبُهُ قَالَ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ رواه مسلم

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என் வழியாக (எழுதிக் கொள்ளாமல்) அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம்  (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

ஹதீஸ்களை எழுதி வைப்பதைத்  தடைசெய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை அறிவியுங்கள் என்பதையும் சேர்த்தே கூறுகிறார்கள்.

என் வழியாக அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டதில் இருந்து ஹதீஸ்கள் அவசியம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்து விடாது என்று கருதும் அளவிற்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள நபித்தோழர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

3161 حَدَّثَنَا مُسَدَّدٌ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُغِيثٍ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كُنْتُ أَكْتُبُ كُلَّ شَيْءٍ أَسْمَعُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ حِفْظَهُ فَنَهَتْنِي قُرَيْشٌ وَقَالُوا أَتَكْتُبُ كُلَّ شَيْءٍ تَسْمَعُهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا فَأَمْسَكْتُ عَنْ الْكِتَابِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَوْمَأَ بِأُصْبُعِهِ إِلَى فِيهِ فَقَالَ اكْتُبْ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ إِلَّا حَقٌّ رواه الترمذي

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறும் அனைத்து விஷயங்களையும் மனனம் செய்து கொள்வதற்காக எழுதிக் கொள்வேன். அப்போது குரைஷியர் நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியுறும் அனைத்து விஷயங்களையும் எழுதிக் கொள்கிறாயா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலும் சந்தோஷமான நேரத்திலும் (தவறுதலாக எதையாவது) பேசிவிடும் மனிதர் தானே? என்று கூறி (எழுதுவதை விட்டும்) என்னைத் தடுத்தனர். எனவே நான் எழுதுவதை நிறுத்தினேன். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது தனது விரலால் தன்னுடைய வாயை சுட்டிக்காட்டி என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக இதிலிருந்து (அதாவது என்னுடைய வாயிலிருந்து) உண்மையைத் தவிர வேறெதுவும் வெளிப்படாது. நீ (நான் கூறுவதை) எழுதிக்கொள் என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி 3161

2434 حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ كَانَ قَبْلِي وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي فَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا يُخْتَلَى شَوْكُهَا وَلَا تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقِيدَ فَقَالَ الْعَبَّاسُ إِلَّا الْإِذْخِرَ فَإِنَّا نَجْعَلُهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْإِذْخِرَ فَقَامَ أَبُو شَاهٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اكْتُبُوا لِأَبِي شَاهٍ قُلْتُ لِلْأَوْزَاعِيِّ مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை உள்ளவர் அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காக (சட்டத்தின் மூலம்) பழிவாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிர என்று கூறினார்கள். அப்போது யமன் வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

நூல் : புகாரி 2434

ஹதீஸ்களின் அவசியத்தை நீங்கள் விரிவாக அறிய

குர்ஆன் மட்டும் போதுமா?

என்ற நூலை வாசிக்கவும்

29.03.2010. 23:01 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account