Sidebar

23
Mon, Dec
26 New Articles

ஒட்டு முடி வைக்கலாமா

பெண்கள் பகுதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana
ஒட்டு முடி வைக்கலாமா
 
பதில் :
 
ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ابْنُ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ زَوَّجَتْ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا فَقَالَ لَا إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلَاتُ رواه البخاري
 
அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்து கொண்டார். பிறகு அவர் நோயுற்றார். அதனால் அவருடைய தலை முடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)
 
நூல் : புகாரி 5934
 
மற்றொரு அறிவிப்பில் அவரது கணவர் ஒட்டு முடி வைப்பதை விரும்புகிறார்; எனவே வைத்துக் கொள்ளலாமா என்று அந்தப் பெண் கேட்ட போது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
புகாரி 3468, 3488, 4887, 5205, 5933, 5934, 5935, 5938
3468حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ وَكَانَتْ فِي يَدَيْ حَرَسِيٍّ فَقَالَ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ رواه البخاري
முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), "மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?'' என்று கேட்டு விட்டு, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுத்ததையும், "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான்' என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்'' என்று சொல்லக் கேட்டேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான்
 
நூல் : புகாரி 3468
4887 حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ قَالَ ذَكَرْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ حَدِيثَ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ فَقَالَ سَمِعْتُهُ مِنْ امْرَأَةٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَ حَدِيثِ مَنْصُورٍ رواه البخاري
ஒட்டுமுடி வைத்துக் கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
அறிவிப்பாவ்ர்  : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
 
நூல் : புகாரி 4887
 
மனிதர்களின் முடியைத் தான் வைத்துக் கொள்ளக் கூடாது. செய்ற்கையாக தயாரிக்கப்பட்டவைகளை வைத்துக் கொள்ளலாம் என்று சிலர் கூறுகின்றனர். இது தவ்றாகும். ஏனெனில் முஸ்லிமில் வரும் பின்வரும் ஹதீஸில் எதனையும் சேர்க்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
و حدثني الحسن بن علي الحلواني ومحمد بن رافع قالا أخبرنا عبد الرزاق أخبرنا ابن جريج أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله يقول زجر النبي صلى الله عليه وسلم أن تصل المرأة برأسها شيئا
பெண்கள் தமது தலை முடியில் எந்தப் பொருளையும் சேர்க்கக் கூடாது என்று தடை செய்தார்கள்.
நூல் : முஸ்லிம்
 
26.06.2010

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account