பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?
? மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படையில் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாது என்று கூறுகின்றனர். இது சரியா?
பதில்
நீங்கள் குறிப்பிடுவது போல் முஸ்லிம் உள்ளிட்ட நூல்களில் ஹதீஸ்கள் உள்ளன.
صحيح مسلم
125 - (2128) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிக்கும் கூட்டத்தினர் ஆவார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) ஆடை அணிந்தும் நிர்வாணமாக (பிற ஆண்களை) ஈர்த்து (பிறரால் ஈர்க்கப்பட்டும் நடக்கும் பெண்களாவர். அவர்களின் தலைகள் ஒட்டகங்களின் திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்
திமில்கள் செங்குத்தாக வானை நோக்கி இருக்கும். அது போல் செங்குத்தாகக் கொண்டை போடுவதைத் தான் இது குறிக்கிறது. இதற்கு சிலர் இஷ்டத்துக்கு பல விளக்கங்கள் கொடுத்தாலும் நேரடி அர்த்தமே தெளிவாக உள்ளதால் அந்த விளக்கங்களை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.
வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் பெண்கள் கொண்டை போடக் கூடாது என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக உள்ளது.
11.04.2014. 3:20 AM
பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode