பட்டப் பெயர் சூட்டலாமா?
பட்டப் பெயர் கொண்டு ஆழைக்காதீர்கள் என்று மார்க்கம் சொல்லும் போது கீழைப் பொய்யர் என்று ஒருவரை நீங்கள் குறிப்பிடுவது சரியானதா?
ஷாஹுல் இஸ்மாயீல்
பதில்:
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 49:11,12
ஒருவருக்கு உடல் ரீதியில் குறை ஏதும் இருந்தால் அந்தக் குறையைச் சுட்டிக்காட்டி பட்டப்பெயர் வைப்பது கூடாது. உதாரணமாக நொண்டி, குருடு போன்ற பெயர்களைக் கூறுவது இந்த வசனத்தின் அடிப்படையில் தவறாகும்.
ஒருவரிடம் இல்லாத தன்மையை அவருக்குப் பட்டப்பெயராகச் சூட்டி அவரை நோவினைப்படுத்துவதும் தவறாகும். ஒருவர் தவறு செய்த பிறகு திருந்தி வாழும்போது அவர் முன்பு செய்த தவறை குத்திக்காட்டும் வகையில் அவருக்குப் பட்டப்பெயர் வைப்பதும் தவறாகும்.
ஆனால் ஒருவன் நிறைய பொய்களையும், அவதூறுகளையும் பரப்பித் திரிகின்றான். இதிலே முழு மூச்சாகச் செயல்படுகிறான். சுட்டிக்காட்டிய பிறகும் அதிலிருந்து திருந்த மறுக்கிறான். பொய்யைத் தனது கொள்கையாகக் கொண்டு குழப்பம் செய்யும் நபர்களைப் பொய்யர் என்று கூறுவது தவறல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
3621 فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَأَهَمَّنِي شَأْنُهُمَا فَأُوحِيَ إِلَيَّ فِي الْمَنَامِ أَنْ انْفُخْهُمَا فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي فَكَانَ أَحَدُهُمَا الْعَنْسِيَّ وَالْآخَرُ مُسَيْلِمَةَ الْكَذَّابَ صَاحِبَ الْيَمَامَةِ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, ''அதை ஊதி விடுவீராக!'' என்று கனவில் எனக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவை இரண்டும் பறந்து போய் விட்டன. அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கின்ற இரு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) நான் விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும், மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலிமாவாகவும் அமைந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 3621
7131 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بُعِثَ نَبِيٌّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ الْأَعْوَرَ الْكَذَّابَ أَلَا إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ فِيهِ أَبُو هُرَيْرَةَ وَابْنُ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அனுப்பப்பட்ட எந்த இறைத் தூதரும் தம் சமுதாயத்தாரை, மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 7131
8 و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَرْمَلَةَ بْنِ عِمْرَانَ التُّجِيبِيُّ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي أَبُو شُرَيْحٍ أَنَّهُ سَمِعَ شَرَاحِيلَ بْنَ يَزِيدَ يَقُولُ أَخْبَرَنِي مُسْلِمُ بْنُ يَسَارٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ مِنْ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُضِلُّونَكُمْ وَلَا يَفْتِنُونَكُمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' தோன்றுவார்கள். நீங்களோ, உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்துவிடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் முஸ்லிம்
நாம் யாரையும் அநியாயமாக விமர்சனம் செய்வதில்லை. நம்மைப் பற்றி அவதூறுகளைக் கூறித் திரிபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்நிலையில் அவர்கள் வரம்பு மீறினால் நாம் வரம்பு மீறுவது தவறல்ல.
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنْ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا(148)4
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4 : 148
புனித மாதத்துக்கு (நிகர்) புனித மாதமே! புனிதங்கள் இரு தரப்புக்கும் சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2 : 194
17.08.2010. 17:05 PM
பட்டப் பெயர் சூட்டலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode