இலங்கை மருதமுனை விவாதம் 1994
31.01.1994, 01.02.1994 ஆகிய இரண்டு நாட்கள் இலங்கையில் உள்ள மருதமுனை எனும் ஊரில் ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக, கந்தூரிகளில் அறுக்கப்பட்ட பிராணிகள் உண்பது ஹலாலா? ஹராமா?
நடைமுறையிலுள்ள கத்முல் குர்ஆனும் கப்ராளிகளும்?
மவ்லூது ஓதலாமா?
கந்தூரி மற்றும் நினைவு நாட்கள் கொண்டாடலாமா?
ஆகிய நான்கு தலைப்புகளில் விவாதம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
எதிர்த் தரப்பில் பல ஆண்டுகள் வேலூர் பாகியாதுஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றி, தற்போது அத்திக் கடையில் பணியாற்றி வரும் மவ்லவி ஷரபுத்தீன் பாகவி அவர்களும், மவ்லவி அப்துல் வஹ்ஹாப் நூரி அவர்களும் இலங்கையைச் சேர்ந்த மவ்லவி ஏ.எல். பத்ருதீன் மற்றும் இரு மவ்லவிகள் ஆகிய ஐந்து மவ்லவிகள் கலந்து கொண்டனர்.
நமது தரப்பில் பி. ஜைனுல் ஆப்தீன், அப்துல் மஜீத் உமரி, அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ மற்றும் இலங்கையைச் சேர்ந்த இரு மவ்லவிகள் ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்.
இரு தரப்பிலும் தலா ஐவர் வீதம் பத்து நபர்களைக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவினர் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக் கூடாது என்று கருதி இரு தரப்பிலும் தலா இருபத்தி ஐந்து நபர்கள் வீதம் மொத்தம் ஐம்பது நபர்கள் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வீடியோ மூலம் இந்த விவாதத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தலைப்புக்கும் மூன்று மணி நேரம் ஒதுக்கப்படடிருந்தாலும் இரண்டு நாட்களிலும் முதல் தலைப்பில் விவாதம் நடந்தும் முடிவுக்கு வரவில்லை.
இரு தரப்பையும் சேர்ந்த ஏற்பாட்டுக் குழுவினர் மறு நாளும் விவாதம் தொடர்ந்து நடைபெறும் என இரண்டாம் நாளின் முடிவில் அறிவித்தனர்.
எத்தனை நாட்களானாலும் நாம் நீடிக்கத் தயார் என்று கூறி நமது தரப்பில் இதை ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் எதிர்த் தரப்பினர் தொடர்ந்து விவாதிக்க நாங்கள் தயாரில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டனர். ஒரு தரப்பினர் தயாராக இல்லாத நிலையில் விவாதத்தைத் தொடர இயலாது என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்தவுடன் விவாதம் முடிவுக்கு வந்தது.
எந்த ஷிர்க்கை ஆதரிப்பதற்காக எதிர்த் தரப்பினர் விவாதத்திற்கு வந்தனரோ அவற்றையெல்லாம் ஷிர்க் என்று அவர்களே ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைக்கு ஆளானார்கள்.
இந்த விவாத நிகழ்ச்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவையுடையோர் ஷஜம்யிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதியா, பரகஹதெனிய, எனும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
விவாதம் சம்பந்தமான விமர்சனத்தில் இரு தரப்பினரும் ஈடுபடக் கூடாது வீடியோவில் மக்கள் பார்த்து உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் இரு தரப்பையும் கேட்டுக் கொண்டதால் அது பற்றிய விபரங்களை வீடியோ மூலமே அறிந்து கொள்க!
05.08.2009. 4:24 AM
இலங்கை மருதமுனை விவாதம் 1994
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode