Sidebar

23
Mon, Dec
26 New Articles

ஈஸா நபி கியாமத் நாளின் அடயாளம் என்பது சரியா?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஈஸா நபி கியாமத் நாளின் அடயாளம் என்பது சரியா?

கேள்வி

43:61 வசனத்தில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்ப்பு மிக பெரும் மோசடியாக தெரிகிறது. இல்முல் சா அத்தி என்பது மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். இல்ம் என்பது அறிவு என்று இருக்க அது மறுமை குறித்து பேசும் போது ஈஸா நபியை அங்கே தினிப்பதற்காக அறிவை அடையாளமாக மாற்றலாமா? அந்த வசனம் குர்ஆனையே குறிக்கிறது. அதுவே எந்த மாற்றமும் இல்லாமல் நேரடியாக பொருள்படுகிறது. மேலும் அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும். அவர் மறுமை நாளின் அடையாளம் என்று தான் கிருத்துவர்கள் நம்புகிறார்கள். அதையே ரசூல் சல் அவர்கள் கூறி அதனால் தன்னைப் பின்பற்றச் சொல்வார்களா? அல்லது குர்ஆன் மறுமை நாளின் குறித்த இல்மை தருகிறது என்று சொல்லி தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வார்கள்?

நௌசாத், சுவீடன்

பதில்

நமது இந்த மொழி பெயர்ப்பு கவனமில்லாமல் செய்யப்பட்டதல்ல. மிகுந்த கவனத்துடன் தான் செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்கு இடமில்லாத வகையில் தான் கவனமாகச் செயல்பட்டுள்ளோம்.

அடையாளம் என்ற மொழிபெயர்ப்பு சரியா என்பதை முதலில் பார்ப்போம். பின்னர் உங்கள் வாதம் சரியா எனப் பார்ப்போம்.

43:61 வசனத்தில் இல்மு (عِلْمٌ) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் அறிவு என்று இருக்க அடையாளம் என்று மொழி பெயர்க்கலாமா என்று கேட்டுள்ளீர்கள்.

இல்மு என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்று கருதி இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இச்சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. அடையாளம் என்ற பொருளும் உண்டு.

علم என்ற சொல்லில் இருந்து தான் علامة (அலாமத்) என்ற சொல் பிறக்கிறது. அடையாளம் என்பது இதன் பொருள். இதன் பன்மைச் சொல்லான علامات (அலாமாத்) என்ற சொல் அடையாளங்கள் என்ற பொருளில் திருக்குர்ஆனிலும் (16:16) பயன்படுத்தப்பட்டுள்ளது.

16{وَعَلَامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ  [النحل: 16

கடல் பயணிகளுக்கு மலைகள் அடையாளமாக உள்ளதால் மலைகளைக் குறிக்க اعلام  என்ற சொல் 42:32, 55:24 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

42{وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ [الشورى: 32]

55{ وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ} [الرحمن: 24]

இச்சொற்கள் அனைத்தும் இல்ம் என்ற அதே வேர்ச் சொற்களைக் கொண்டவையாகும்.

குறிப்பிட்ட துறையைக் குறிப்பதற்கும் இல்ம் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

இல்ம் எனும் சொல் மற்றொரு சொல்லுடன் இணைத்துச் சொல்வதாக இருந்தால் இடைச் சொல் உதவியில்லாமல் நேரடியாக சேர்த்துச் சொல்லப்படும்.

அறிவு என்ற சொல்லை குர்ஆன் பற்றிய அறிவு என்று சொல்ல வேண்டுமானால் இரு சொற்களையும் இடைச் சொல் உதவியில்லாமல் علم القران (இல்முல் குர்ஆன்) என இணைக்க வேண்டும்.

இடைச் சொல் உதவியுடன் இணைத்தால் அடையாளம் என்ற அர்த்தம் வரும்.

இல்மு عِلْمٌ என்ற சொல்லுடன் அஸ்ஸாஅத் السَّاعَةِ எனும் சொல் இணைக்கப்பட்ட நான்கு சொற்கள் குர்ஆனில் உள்ளன. அவற்றில் மூன்று சொற்கள் லி لِ என்னும் இடைச் சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்டுள்ளது. ஈஸா நபி குறித்த சொல் அப்படி இணைக்கப்படாமல் லி لِ என்ற இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இடைச்சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்ட சொற்களுக்கு கியாமத் நாள் பற்றிய அறிவு என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஈஸா நபி பற்றி பேசும் வசனத்தில் லி لِ எனும் இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அடையாளம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அறிவு என்று பொருள் கொள்வதாக இருந்தால் மற்ற மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டது போல் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும்

அந்த நான்கு வசனங்களையும் காண்க

31{إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ  السَّاعَةِ} [لقمان: 34

41{إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ } [فصلت: 47

43{وَعِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [الزخرف: 85

இம்மூன்று வசனங்களிலும் இல்மு என்ற சொல் அஸ்ஸாஅத் எனும் சொல்லுடன் நேரடியாக இணைந்துள்ளதால் இம்முன்று சொற்களுக்கும் கியாமத் நாள் பற்றிய அறிவு என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

ஆனால் 43:61 வசனத்தில் இல்முஸ்ஸாஅத் என கூறாமல் இல்முன் லிஸ் ஸாஅதி என்று கூறப்பட்டுள்ளது. லி என்ற இடைச் சொல்லால் இணைக்கப்பட்டுள்ளதால் கியாமத் நாளின் அடையாளம் என்பதே சரியான மொழி பெயர்ப்பாகும்.

43{وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ  [الزخرف: 61

அடுத்து ஹு என்ற சொல் அவர் என்ற பொருளிலும், அது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். நீங்கள் அது என்று பொருள் கொண்டு குர்ஆனைக் குறிக்கும் என்று கேட்டுள்ளீர்கள்.

நாம் அவர் என்று பொருள் கொண்டு ஈஸா நபி என  பொருள் கொண்டுள்ளோம்.

ஹு என்ற சொல்லுக்கு பொருள் கொள்\ளும் போது அதற்கு முன் எது பற்றி பேசப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஈஸா நபி பற்றித் தான் பேசப்பட்டுள்ளது என்பதால் இவ்விடத்தில் குர்ஆன் என்று கருத முடியாது.

மேலும் இல்ம் என்பதற்கு அடையாளம் என்பது தான் பொருள் என நிருபணமாகி விட்டதால் குர்ஆன் என்ற அர்த்தம் பொருந்தாது. குர்ஆன் கியாமத் நாளின் அடையாளமாக இல்லை. கியாமத் நாளின் நெருக்கத்தில் குர்ஆன் அருளப்படும் என்று இருந்தால் தான் குர்ஆன் கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்ல முடியும்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று நாம் சொல்வது போல் கிறித்தவர்களும் நம்புகிறார்கள் என்ற அடிப்படையில் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளீர்கள்..

அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும் என்று கேட்டுள்ளீர்கள்.

நீங்கள் இந்த வசனத்தை மட்டும் வைத்து இப்படி வாதிடுகிறீர்கள். இது குறித்து பேசும் 57 வது வசனம் முதல் 61 வசனம் வரை சேர்த்துப் பார்த்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.

{وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ (57) وَقَالُوا أَآلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ (58) إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ (59) وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلَائِكَةً فِي الْأَرْضِ يَخْلُفُونَ (60) {وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (61)} [الزخرف: 61]

57. மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

58. "எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?'' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

59. நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை.459 இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

60. நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியிருப்போம்.

61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)

இதில் 57வது வசனம் கிறித்தவர்கள் பற்றிப் பேசவில்லை. ஈஸா நபியை ஏற்காத மக்கத்து காஃபிர்களைப் பற்றி பேசுகிறது. ஈஸா நபி தந்தையில்லாமல் பிறந்ததைக் கேட்டு அவர்கள் எள்ளி நகையாடினார்கள்.

ஈஸா நபி சம்மந்தமாக நபிகள் நாயகம் கொண்ட கருத்தில் மக்காவின் காஃபிர்கள் இருக்கவில்லை. அதற்கு மாற்றமான கருத்தில் தான் இருந்தனர். எனவே என்னைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறுவது கேலிக்குரியதாக ஆகாது.

அவர் எப்படி உயர்த்தப்பட்டு இருக்க முடியும்? இது சாத்தியமற்றதல்லவா என்ற எண்ணம் ஆழ்மனதில் இருப்பதால் அதைப் பொய்யாக்க இயன்ற வரை மனித மனம் நினைக்கிறது.

ஆனால் அவரது பிறப்பு இதை விட அற்புதமானது சாத்தியமற்றது என்பதை நம்புவோருக்கு இது பிரச்சனை இல்லை.

மிஃராஜில் நபியை அழைத்துப் போனதில் நபியின் திறமை  ஒன்றும் இல்லை. வல்லமை மிக்க அல்லாஹ்வின் வல்லமையைக் காட்டும் நிகழ்வு என்று புரிந்து கொள்கிறோம்.

அது போல் தான் ஈஸா நபி உயத்தப்பட்டதில் அவரது ஆற்றலோ வல்லமையோ வெளிப்படவில்லை. அல்லாஹ் தான் நினைத்த்தைச் செய்யும் வல்லமை உள்ளவன் என்று புரிந்து கொண்டால் இதில் எந்த மனக்குழப்பமும் ஏற்படாது.

ஈஸா நபி குறித்து கீழ்க்கண்ட ஆக்கங்களையும் பார்க்கவும்

ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா

ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை ஏற்பார்கள்

ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்

இறுதிக்காலத்தில் ஈஸா வருவார்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account