Sidebar

23
Sun, Jun
0 New Articles

ஹத்யு வேறு குர்பானி வேறு - பெருநாளில் மட்டுமே குர்பானி

குர்பானி, அகீகா, நேர்ச்சை, சத்தியம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மறக்கடிக்கப்பட்ட ஹத்யு எனும் வணக்கம்
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும் குர்பானி கொடுத்தலைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். இது ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் செய்ய வேண்டிய வணக்கமாகும்.


குழந்தைகள் பிறந்து ஏழாம் நாளில் ஆட்டை அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசங்களை தாமும் உண்டு மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுப்பதை அகீகா என்று நாம் அறிந்து வைத்துள்ளோம்.


காலக்கெடு ஏதுமின்றி வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் மக்காவின் ஹரம் எல்லையில் வைத்து பிராணிகளை - ஆடு, மாடு, ஒட்டகம் - அறுத்துப் பலியிடும் வணக்கம் ஹத்யு எனப்படும்.


இவ்வணக்கம் பற்றி அதிகமான மக்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. அறிந்து வைத்துள்ளவர்களும் முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை.


جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلَائِدَ ذَلِكَ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (97)5


புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், ஹத்யு எனும் பலிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான். வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவே இது (கூறப்படுகிறது.)
திருக்குர்ஆன் 5:97


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)5


2. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம், ஹத்யு எனும் பலிப்பிராணி, (பலிப்பிராணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள்! இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள்! (கஅபா எனும்) புனிதப்பள்ளியை விட்டு உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 5:2


ஹத்யு எனும் பலிப் பிராணிகளை அல்லாஹ் புனிதமாக ஆக்கியுள்ளான் என்பதில் இருந்து ஹரம் எல்லைக்குள் பலியிடும் ஓர் வணக்கம் உள்ளது என்று அல்லாஹ் அறிவிக்கிறான்.


ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்துச் செய்யும் போது பலியிடப்படும் பிராணி மட்டும் தான் ஹத்யு என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.


ஆனால் ஹத்யு எனும் வணக்கம் பல வகைகளில் அமைந்துள்ளது.


ஹஜ் உம்ரா செய்பவர்கள் ஹரம் எல்லையில் பலியிடுவதற்காக சக்திக்கு உட்பட்ட அளவு பலிப்பிராணிகளைக் கொண்டு செல்வார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யச் சென்ற போது நூறு ஒட்டகங்களை ஹத்யு எனும் வணக்கமாகப் பலியிட்டார்கள்.


صحيح البخاري
1718- حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سَيْفُ بْنُ أَبِي سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا يَقُولُ حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُ قَالَ أَهْدَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِائَةَ بَدَنَةٍ فَأَمَرَنِي بِلُحُومِهَا فَقَسَمْتُهَا ثُمَّ أَمَرَنِي بِجِلَالِهَا فَقَسَمْتُهَا ثُمَّ بِجُلُودِهَا فَقَسَمْتُهَا


1718 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை ஹத்யு எனும் பலி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
நூல் : புகாரி 1718


இது உள்ஹிய்யா எனும் குர்பானி அல்ல. மூலத்தில் أَهْدَى அஹ்தா ஹதியாக பலியிட்டார்கள் என்று தான் உள்ளது. தமிழ் மொழி பெயர்ப்புகளில் குர்பானி என மொழி பெயர்த்துள்ளது தவறாகும்.


உம்ராவுக்கும் ஹத்யு உண்டு


ஹஜ்ஜுக்கு மட்டுமின்றி உம்ரா செய்யச் செல்லும் போதும் இயன்ற ஹத்யு எனும் பலிப்பிராணிகளைக் கொண்டு சென்று ஹரமில் பலியிடலாம்.


صحيح البخاري
1812 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَخْبَرَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ قَالَ وَحَدَّثَ نَافِعٌ أَنَّ عَبْدَ اللَّهِ وَسَالِمًا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَمِرِينَ فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ فَنَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُدْنَهُ وَحَلَقَ رَأْسَهُ


1812 நாஃபிஉ அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் சாலிம், அப்துல்லாஹ் ஆகியோர் ஆட்சேபனை செய்த போது இப்னு உமர் (ரலி) அவர்கள், நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்; குறைஷிக் காபிர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்து விட்டார்கள்; ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் தமது ஹத்யு ஒட்டகங்களைப் பலியிட்டு தம் தலையை மழித்துக் கொண்டார்கள்! என்று கூறினார்கள்.

நூல் புகாரி 1812


صحيح البخاري
1694،1695- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ وَمَرْوَانَ قَالَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ مِنْ الْمَدِينَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ حَتَّى إِذَا كَانُوا بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدْيَ وَأَشْعَرَ وَأَحْرَمَ بِالْعُمْرَةِ


1694,1695 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் ஆகியோர் கூறியதாவது:
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் ஹத்யு பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள்.
நூல் : புகாரி 1694


ஹத்யை அனுப்பி வைத்தல்


நமக்குத் தெரிந்தவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்யச் சொல்லும் போது நாம் பலியிட விரும்பும் பிராணிகளை அவர்களிடம் கொடுத்து விட்டு ஹரமில் பலியிடச் சொல்லலாம். இதுவும் ஹத்யு எனும் வணக்கமே.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் தலைமையில் இஸ்லாத்தின் முதல் ஹஜ் குழுவை அனுப்பிய போது அங்கே தம் சார்பில் ஹத்யு கொடுக்க பிராணிகளைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.


صحيح البخاري
1700- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ زِيَادَ بْنَ أَبِي سُفْيَانَ كَتَبَ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَنْ أَهْدَى هَدْيًا حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الْحَاجِّ حَتَّى يُنْحَرَ هَدْيُهُ قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا لَيْسَ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ أَنَا فَتَلْتُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ أَحَلَّهُ اللَّهُ لَهُ حَتَّى نُحِرَ الْهَدْيُ


1700 அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் அவர்கள் கூறியதாவது:
யார் ஹத்யுப் பிராணியைக் கொண்டு வருகின்றாரோ அவர் அதை பலியிடும் வரை ஹஜ் செய்பவரின் மீது விலக்கப்பட்டதெல்லாம் அவர் மீதும் விலக்கப்பட்டதாகும்' என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறாரே! என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஸியாத் பின் அபீ சுஃப்யான் எழுதிக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போலில்லை; நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹத்யுப் பிராணிக்கு கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை எனது கையாலேயே கோத்திருக்கிறேன்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள்; பிறகு, ஹத்யு பிராணியை என் தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பிவைத்தார்கள்; ஆனால் அந்த ஹத்யு ப்பிராணி பலியிடப்படும் வரை அவர்கள், தமக்கு அல்லாஹ் அனுமதித்த எதையும் தடுத்துக் கொள்ளவில்லை! எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 1700


இது அல்லாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் உம்ரா செய்யச் செல்வோரிடம் தமது ஹத்யு பிராணியைக் கொடுத்து அனுப்பி உள்ளனர்.


صحيح البخاري
1698 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ حَدَّثَنَا اللَّيْثُ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ عَنْ عُرْوَةَ وَعَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهْدِي مِنْ الْمَدِينَةِ فَأَفْتِلُ قَلَائِدَ هَدْيِهِ ثُمَّ لَا يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ


1698 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்தே ஹத்யுப் பிராணியைக் கொடுத்து அனுப்புபவர்களாக இருந்தனர். நான் அவர்களது ஹத்யுப் பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைக் கோத்துக் கொடுப்பேன். அவர்கள், இஹ்ராம் கட்டியவர்ர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
நூல் : புகாரி 1698


صحيح البخاري
1702 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الْأَعْمَشُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَفْتِلُ الْقَلَائِدَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُقَلِّدُ الْغَنَمَ وَيُقِيمُ فِي أَهْلِهِ حَلَالًا


1702 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பலிப் பிராணிகளுக்காகக் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலைகளைக் கோத்திருந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஆட்டின் கழுத்தில் தொங்கவிட்டார்கள். (பிராணியை மக்காவுக்கு அனுப்பிவிட்டுத்) தமது வீட்டில் இஹ்ராம் கட்டாத நிலையில் தங்கினார்கள்.
நூல் : புகாரி 1702


صحيح مسلم
2565 حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سِنَانِ بْنِ سَلَمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ذُؤَيْبًا أَبَا قَبِيصَةَ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبْعَثُ مَعَهُ بِالْبُدْنِ ثُمَّ يَقُولُ: «إِنْ عَطِبَ مِنْهَا شَيْءٌ، فَخَشِيتَ عَلَيْهِ مَوْتًا فَانْحَرْهَا، ثُمَّ اغْمِسْ نَعْلَهَا فِي دَمِهَا، ثُمَّ اضْرِبْ بِهِ صَفْحَتَهَا، وَلَا تَطْعَمْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِكَ»


2565 துஐப் அபூகபீஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலி ஒட்டகங்களுடன் என்னை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அப்போது, "இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிப்புக்குள்ளாகி இறந்து விடுமோ என நீர் அஞ்சினால், உடனே அதை அறுத்து விடுவீராக! பிறகு அதன் (கழுத்தில் கிடக்கும்) செருப்பில் அதன் இரத்தத்தை நனைத்து, அதன் விலாப் புறத்தில் அ(ந்த அடையாளத்)தைப் பதித்து விடுவீராக! நீரோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ணாதீர்'' என்று கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2565


صحيح مسلم
2564 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ، حَدَّثَنِي مُوسَى بْنُ سَلَمَةَ الْهُذَلِيُّ، قَالَ: انْطَلَقْتُ أَنَا وَسِنَانُ بْنُ سَلَمَةَ، مُعْتَمِرَيْنِ قَالَ: وَانْطَلَقَ سِنَانٌ مَعَهُ بِبَدَنَةٍ يَسُوقُهَا، فَأَزْحَفَتْ عَلَيْهِ بِالطَّرِيقِ، فَعَيِيَ بِشَأْنِهَا إِنْ هِيَ أُبْدِعَتْ كَيْفَ، يَأْتِي بِهَا فَقَالَ: لَئِنْ قَدِمْتُ الْبَلَدَ لَأَسْتَحْفِيَنَّ عَنْ ذَلِكَ، قَالَ: فَأَضْحَيْتُ، فَلَمَّا نَزَلْنَا الْبَطْحَاءَ، قَالَ: انْطَلِقْ إِلَى ابْنِ عَبَّاسٍ نَتَحَدَّثْ إِلَيْهِ، قَالَ: فَذَكَرَ لَهُ شَأْنَ بَدَنَتِهِ فَقَالَ: عَلَى الْخَبِيرِ سَقَطْتَ بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسِتَّ عَشْرَةَ بَدَنَةً مَعَ رَجُلٍ وَأَمَّرَهُ فِيهَا، قَالَ: فَمَضَى ثُمَّ رَجَعَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، كَيْفَ أَصْنَعُ بِمَا أُبْدِعَ عَلَيَّ مِنْهَا، قَالَ: «انْحَرْهَا، ثُمَّ اصْبُغْ نَعْلَيْهَا فِي دَمِهَا، ثُمَّ اجْعَلْهُ عَلَى صَفْحَتِهَا، وَلَا تَأْكُلْ مِنْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِكَ»


2564 மூசா பின் சலமா அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் சினான் பின் சலமா (ரஹ்) அவர்களும் உம்ராவிற்குச் சென்றோம். சினான் தம்முடன் ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு வந்தார். அந்த ஒட்டகம் வழியில் களைத் துப் போய் நின்று விட்டது. இது (இப்படியே) செல்ல இயலாமல் நின்றுவிட்டால், இதை எப்படி நான் கொண்டு செல்வேன் என்று தெரியாமல் அவர் விழித்தார். மேலும், அவர் "நான் ஊர் சென்றதும் இது தொடர்பாக விரிவாகக் கேட்டறிவேன்'' என்று சொல்லிக் கொண்டார். இதற்கிடையில் முற்பகல் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் "அல்பத்ஹா' எனும் இடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது சினான் (ரஹ்) அவர்கள், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இதைப் பற்றி நாம் பேசுவோம்'' என்று கூறினார்கள். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) தமது பலி ஒட்டகத்தின் நிலை பற்றிக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விவரம் தெரிந்தவரிடம் தான் வந்து சேர்ந்திருக்கிறீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினாறு பலி ஒட்டகங்களுடன் ஒரு மனிதரை (மக்காவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவற்றைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தார்கள். அவர் (சிறிது தூரம்) சென்று விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! பலி ஒட்டகங்களில் ஒன்று களைத்துப் போய் (பயணத்தைத் தொடர முடியாமல்) நின்றுவிட்டால், அதை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்த இடத்திலேயே) அதை அறுத்து விடுக; அதன் (கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள) செருப்புகளில் அதன் இரத்தத்தைத் தோய்த்து அதை அதன் விலாப் பகுதியில் பதித்து விடுக. நீயோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ண வேண்டாம்'' என்று கூறினார்கள்.
நூல் முஸ்லிம் 2564


சொந்த ஊரில் இருந்து கொண்டு ஹத்யை அனுப்பி வைத்தல்


இது அல்லாமல் ஹத்யு பிராணியைக் கொடுத்து அனுப்ப ஆள் அமையாவிட்டால் பலிப்பிராணிக்கு மாலை அணிவித்து காபாவை நோக்கி அனுப்புவார்கள். அன்றைய காபிர்களும் இதை வழமையாக கொண்டு இருந்ததால் அந்த பிராணியின் மீது அடையாளம் உள்ளதைக் கண்டு காபாவின் பக்கம் விரட்டி விடுவார்கள்

.
صحيح البخاري
1699- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ فَتَلْتُ قَلَائِدَ هَدْيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَشْعَرَهَا وَقَلَّدَهَا أَوْ قَلَّدْتُهَا ثُمَّ بَعَثَ بِهَا إِلَى الْبَيْتِ وَأَقَامَ بِالْمَدِينَةِ فَمَا حَرُمَ عَلَيْهِ شَيْءٌ كَانَ لَهُ حِلٌّ


1699 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹத்யுப் பிராணிகளுக்கு, (அவற்றின்) கழுத்தில் தொங்கவிடும் அடையாள மாலையை நான் என் கையால் கோர்த்தேன். அவற்றை அவர்கள் ஹத்யுப் பிராணிகளின் கழுத்தில் தொங்க விட்டார்கள், -- அல்லது நான் அவற்றைப் பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டேன் -- பிறகு அதை கீறிக் காயப்படுத்தி அடையாளமிட்டார்கள். பிறகு அதை கஅபாவின் பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட எதுவும் விலக்கப்படவில்லை.
நூல் : புகாரி 1699


மேலே துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் இது பற்றித்தான் கூறப்படுகிறது. ஹத்யு பிராணிக்கு இடையூறு செய்யாதீர்கள் என்பதன் கருத்து இதுதான்.


அந்தப் பிராணி மக்காவை அடந்ததும் அங்குள்ள பொறுப்பாளர்கள் அதை அங்கே பலியிடுவார்கள்.


தடுக்கப்பட்டால் பரிகாரமாக ஹத்யு


தமத்துவ் ஹஜ்ஜுக்கு பரிகாரமாக ஹத்யு


இது அல்லாமல் ஹஜ்ஜு அல்லது உம்ராவுக்கு செல்பவர்கள் எதிரிகளால் தடுக்கப்பட்டால் அங்கே ஒரு ஹத்யு பிராணியை அறுத்து பலியிட்டு விட்டு அல்லது காபாவை நோக்கி அனுப்பி விட்டு திரும்பி விடலாம்.


சிலர் உம்ரா இல்லாமல் ஹஜ் ஹஜ் மட்டும் செய்யச் செல்வார்கள். இவர்கள் ஹத்யு எனும் பலி கொடுக்கும் அவசியம் இல்லை.


ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒரு பயணத்தில் செய்பவர்கள் குறைந்த பட்சம் ஒரு பலிப்பிராணியைப் பலியிட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைப் பலியிட்டது போல் அதிக அளவிலும் பலியிடலாம்.


وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (196)2


196. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:196


குறைபாடுகளுக்கு பரிகாரமாக ஹத்யு


ஹஜ்ஜின் கிரியைகளில் மாறு செய்பவர்கள் அதற்குப் பரிகாரமாகப் பலியிட வேண்டும். அதுவும் ஹத்யு ஆகும். இதை கீழ்க்கண்ட வசனத்தில் இருந்து அறியலாம்.


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَأَنْتُمْ حُرُمٌ وَمَنْ قَتَلَهُ مِنْكُمْ مُتَعَمِّدًا فَجَزَاءٌ مِثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِينَ أَوْ عَدْلُ ذَلِكَ صِيَامًا لِيَذُوقَ وَبَالَ أَمْرِهِ عَفَا اللَّهُ عَمَّا سَلَفَ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللَّهُ مِنْهُ وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ (95)5


95. நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும்போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய ஹத்யு(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 5:95


ஒருவர் துல்ஹஜ் எட்டாம் நாள் இந்தக் குற்றத்தைச் செய்தால் அவர் எட்டாம் நாளே இந்த ஹத்யு எனும் பரிகாரத்தைச் செய்யலாம். ஒன்பதாம் நாள் இக்குற்றத்தைச் செய்தால் அன்று அவர் ஹத்யு கொடுப்பார்.


ஹஜ் காலம் முடிந்த பின் ஒருவர் பிறை 20ல் உம்ரா செய்யப் போய் இக்குற்றத்தைச் செய்தால் அவர் 20ல் ஹத்யு கொடுப்பார்.


இதிலிருந்து ஹத்யுக்கு காலக் கெடு கிடையாது என்பதை இன்னும் உறுதியாக அறியலாம்.


ஹத்யு என்பது குர்பானி அல்ல என்பதையும் அறியலாம்.


எனவே எல்லா நாட்களிலும் ஹத்யு எனும் வணக்கம் செய்யலாம். ஆனால் குர்பானி எனும் வணக்கத்தை ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் செய்ய வேண்டும். நான்கு நாட்கள் செய்வதற்கு கடுகளவு ஆதாரமும் இல்லை.


இந்த ஆதாரங்களில் இருந்து நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஹத்யு என்பது உள்ஹியா எனும் குர்பானி அல்ல.


ஹத்யு எனும் பலியிடுதலை வருடத்தின் எல்லா நாட்களிலும் செய்யலாம்.


ஹஜ்ஜின் போது பலியிடப்படுவது குர்பானி என விளங்கிக் கொண்டு நான்கு நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என வாதிட்டு மக்களின் இபாதத்தை சிலர் பாழாக்குகிறார்கள்.


ஹத்யு என்பதற்கு அறியப்பட்ட நாட்கள் என்பது கிடையாது. வருடம் முழுவதும் செய்யலாம் என்று இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது அதைப் புறந்தள்ளி விட்டு நான்கு நாட்களில் ஹத்யு கொடுக்க வேண்டும். அது போல் தான் குர்பானியும் கொடுக்க வேண்டும் என உளறுகிறார்கள்.


கீழ்க்காணும் வசனத்துக்கு தவறான பொருள் கொடுத்து மக்களின் குர்பானி இபாதத்தை பாழாக்குகிறார்கள்.


28. அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
திருக்குர்ஆன் 22:28


குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டதற்கு


குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி பலியிட (வருவார்கள்.)


என்று தவறாக இவர்கள் மொழி பெயர்த்துள்ளது தான் இந்த வழிகேடுக்குக் காரணம்.


ஹத்யு என்பதற்கு குறிப்பிட்ட நாட்கள் கிடையாது எல்லா நாட்களிலும் ஹத்யு உண்டு என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளோம். அதற்கு மாற்றமாக ஹத்யு என்பதற்கு குறிப்பிட்ட நாட்கள் தான் உண்டு என்று மொழி பெயர்த்து ஹத்யு எனும் வணக்கத்தை இல்லாமல் ஆக்கி விட்டனர்.


ஹத்யு எனும் பலி மூலம் குறிப்பிட்ட சில நாட்களில் தாறுமாறாக அங்கே இறைச்சி இலவசமாகக் கிடைக்கும். அதை அல்லாஹ் வழங்கியதற்கு நன்றி செலுத்த மக்கள் வருவார்கள் என்பது தான் அவ்வசனத்தின் கருத்தாகும்.


இவர்கள் செய்யும் அர்த்தம் கொடுத்தால் ஹத்யு என்பது குறிப்பிட்ட நாட்கள் என்று ஆகி நான்கு நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஹத்யு இல்லை என்று ஆகும். அதாவது ஹத்யு எனும் வணக்கமே இல்லாமல் போய் விடும்.


ஹத்யு என்பதை நான்கு நாட்கள் கொடுக்கலாம் என்பதே தவறாகும். எந்த நாளிலும் ஹத்யு கொடுக்கலாம். உம்ராவின் போதும் கொடுக்கலாம். ஹஜ் உம்ரா செய்யாமல் ஊரில் இருப்பவர்களும் ஹத்யு பிராணியைக் கொடுத்து அனுப்பலாம். அல்லது மக்காவை நோக்கி விரட்டி விடலாம்.


இவ்வசனத்துக்கு தவறான பொருள் கொடுத்து இத்தனை வகையான ஹத்யு வணக்கங்களையும் இல்லாமல் ஆக்கி விட்டனர்.


நஹ்ரு எனும் அறுப்பதற்குரிய நாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட பெருநாளில் மட்டும் தான் குர்பானி என்று மற்ற நாட்களில் அறுத்து மக்களின் குர்பானியைப் பாழாக்கப் பார்க்கிறார்கள். இறையச்சமுடையோர் வணக்கத்தை பாழாக்கி விடாதீர்!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account