குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றதா?
298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ رواه الترمذي
குபா பள்ளிவாசலில் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : உஸைத் பின் லுஹைர் (ரலி)
நூல் : திர்மிதீ
இதே கருத்தில் இப்னுமாஜா, பைஹகீ, ஹாகிம், தப்ரானீ கபீர், ஸுனன் ஸுக்ரா- பைஹகீ, முஸ்னத் அபீயஃலா, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, ஷுஅபுல் ஈமான்- பைஹகீ ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கருத்து இடம்பெறும் அனைத்து செய்திகளிலும் அபுல் அப்ரத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என்று இந்தச் செய்தியைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான ஹாகிம் அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். தஹபீ அவர்கள் தீவானுல் லுஅஃபா என்ற நூலில் இவர் யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே இந்தச் செய்தி யாரென அறியப்படாதவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.
குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode