Sidebar

Display virtual keyboard interface
09
Thu, Jan
32 New Articles

தொழக் கூடாத மூன்று நேரங்கள் யாவை

தொழுகை நேரங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தொழக் கூடாத மூன்று நேரங்கள் யாவை

மூன்று நேரங்களில் தொழுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். ஆனால் சிலர் பள்ளிவாசல்களில் உதயம், உச்சம், அஸ்தமனம் ஆகிய அட்டவணை நேரங்களுக்கு 20 நிமிடம் முன்பும், பின்பும் தொழக் கூடாது என்று எழுதிப் போட்டுள்ளனர். இது சரியா? தொழக் கூடாத நேரங்களின் எல்லைகளை விளக்கவும்!

பதில்

و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ يَقُولُ ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள். 1,சூரியன் உதிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை. 2, நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை. 3, சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1373

இந்த ஹதீஸில் தொழுகைக்குத் தடை செய்யப்பட்ட நேரங்கள் எவை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சூரிய உதயம், உச்சி, அஸ்தமனம் போன்றவை ஒரு வினாடியில் முடிந்து விடுவதில்லை. உதாரணமாக சூரியன் உதிக்கத் துவங்கி, அது முழுமையாக வெளியே வருவதற்கு சுமார் சில நிமிடங்கள் ஆகும்.

அது போன்று சூரியன் உச்சிக்கு வந்த பின்னர் உச்சியிலிருந்து சாய்ந்து, பொருட்களில் நிழல் விழுவதற்கு சில நிமிடங்கள் ஆகும். அஸ்தமன நேரத்திலும் சூரியன் மறையத் துவங்குதற்கும் முழுமையாக மறைவதற்கும் இடையே சில நிமிடங்கள் தேவை. இந்த நேரங்களில் தொழுவதற்குத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள்.

அதனால் இந்த இடைப்பட்ட நேரம் தொழுவதற்குத் தடை என்பது தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து கிடைக்கும் விளக்கம் ஆகும். இதைத் தவிர பேணுதல் என்ற பெயரில் 20 நிமிடங்கள் முன்னரும், 20 நிமிடங்கள் பின்னரும் தொழக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

Published on: August 13, 2009, 7:05 PM

You have no rights to post comments. Register and post your comments.

Display virtual keyboard interface
Don't have an account yet? Register Now!

Sign in to your account

x
x
x

Create an account* Required field


x