தூங்கும் முன் தபாரகல்லதீ அத்தியாயம் ஓதலாமா?
இரவில் தபாரகல்லதி அத்தியாயத்தை ஒதுவது சம்பந்தமாக வரும் ஹதீஸ் என்ன தரத்தில் உள்ளது?
தல்ஹா
பதில் :
இந்தக் கருத்தில் திர்மிதீ, நஸாயீ குப்ரா மற்றும் பால் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திர்மிதியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் வாசகத்தைக் கவனித்தால் இது பலவீனமான ஹதீஸ் எண்ரு அறிய முடியும்
سنن الترمذي
2892 - حَدَّثَنَا هُرَيْمُ بْنُ مِسْعَرٍ قَالَ: حَدَّثَنَا الفُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ الم تَنْزِيلُ، وَتَبَارَكَ الَّذِي بِيَدِهِ المُلْكُ»: «هَذَا حَدِيثٌ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، مِثْلَ هَذَا» وَرَوَاهُ مُغِيرَةُ بْنُ مُسْلِمٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا، وَرَوَى زُهَيْرٌ، قَالَ: قُلْتُ لِأَبِي الزُّبَيْرِ: سَمِعْتَ مِنْ جَابِرٍ يَذْكُرُ هَذَا الْحَدِيثَ؟ فَقَالَ أَبُو الزُّبَيْرِ: إِنَّمَا أَخْبَرَنِيهِ صَفْوَانُ أَوِ ابْنُ صَفْوَانَ،ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும், தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள்.
ஜாபிர் வழியாக இதை அறிவிக்கும் அபுஸ்ஸுபைர் என்பாரிடம் இந்த ஹதீஸை ஜாபிர் கூற நீங்கள் செவியுற்றீர்களா என்று ஸுஹைர் என்பார் கேட்ட போது ஜாபிர் (ரலி) இடம் இதை நான் கேட்கவில்லை. சப்வான் என்பவரோ அபூ சப்வான் என்பவரோ இதை எனக்கு அறிவித்தார்கள் என்று அபுஸ்ஸுபைர் கூறினார்,
நூல் : திர்மிதீ
ஜாபிர் என்ற நபித்தோழரிடம் அபுஸ்ஸுபைர் இதைச் செவியுற்று இருந்தால் இது சரியான ஹதீஸாக இருக்க முடியும் . ஜாபிர் வழியாக இது பல நூல்களில் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சம்மந்தப்பட்ட அபுஸ்ஸுபைர் என்பாரே அதை மறுத்து விடுகிறார். நபித்தோழராக இல்லாத சப்வான் என்பவரோ அபு சப்வான் என்பவரோ இதை எனக்கு அறிவித்தார்கள் என்று மாற்றிக் கூறி விட்டார். எனவே இது தொடர்பு அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.,
இரவில் தபாரகல்லதீ அத்தியாயம் ஓதுவது குறித்து வேறு ஹதீஸ்களை நாம் காணவில்லை.
தூங்கும் முன் தபாரகல்லதீ 67 வது அத்தியாயம் ஓதலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode