சஜ்தா திலாவத் சட்டம்
பதில்:
சில வசனங்களை ஓதும் போது அதை நிறுத்திவிட்டு ஸஜ்தா செய்யும் நடைமுறை உள்ளத். இந்த ஸஜ்தா திலாவத் ஸஜ்தா எனப்படுகிறது. திருக்குர்ஆன் பிரதிகளில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று அடையாளமிடப்படுள்ளது. ஆனால் இதற்கு ஏற்கத்தக்க ஆதாரங்கள் இல்லை.
இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் ஆதாரமற்றவையாகும். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நான்கு வசனங்களை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.
صحيح البخاري
1067 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الأَسْوَدَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ بِمَكَّةَ فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ مَعَهُ غَيْرَ شَيْخٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى - أَوْ تُرَابٍ - فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا "، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ, மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, இவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி 1067, 1070
இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.
صحيح البخاري
1069 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: ص لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»
ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 1069, 3422
صحيح البخاري
766 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ لَهُ: قَالَ: «سَجَدْتُ خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்' என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ராஃபிவு
நூல் : புகாரீ 766, 768, 1078
صحيح مسلم
1329 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ سَجَدْنَا مَعَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى (إِذَا السَّمَاءُ انْشَقَّتْ) وَ (اقْرَأْ بِاسْمِ رَبِّكَ)
இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்
நஜ்மு (53வது அத்தியாயம்),
ஸாத் (38வது அத்தியாயம்),
இன்ஷிகாக் (84வது அத்தியாயம்),
அலக் (96வது அத்தியாயம்)
ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும்போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.
இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும்போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தா செய்து கொள்ளலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
صحيح البخاري
1072 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ أَخْبَرَهُ: أَنَّهُ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَزَعَمَ «أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا»
’நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல் : புகாரீ 1072. 1073
மேற்கண்ட நான்கு வசனங்கள் மட்டுமின்றி ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடும் எந்த வசனத்தை ஓதினாலும் விரும்பினால் அவ்வசனத்திற்காக ஸஜ்தா செய்து கொள்ளலாம்.
صحيح مسلم
254 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِى يَقُولُ يَا وَيْلَهُ - وَفِى رِوَايَةِ أَبِى كُرَيْبٍ يَا وَيْلِى - أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِىَ النَّارُ ».
ஆதமின் மைந்தன் ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு செர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் ஸஜ்தா செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்
ஸஜ்தா திலாவத் துஆ
தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் வசனங்களை ஓதும் போது செய்யும் ஸஜ்தாவில் ஓதுவதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
سنن الترمذي
580 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ القُرْآنِ بِاللَّيْلِ: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.
பொருள் : என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும், பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.
நூல் : திர்மிதீ
இந்த ஸஜ்தாவிற்குப் பின்னால் சலாம் கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே ஸஜ்தா மட்டும் செய்து கொள்ள வேண்டும்.
உளூ அவசியமில்லை
ஸஜ்தா திலாவத் செய்வதற்கு உளூவுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
صحيح البخاري
1071 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ بِالنَّجْمِ، وَسَجَدَ مَعَهُ المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ وَالجِنُّ وَالإِنْسُ» وَرَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ أَيُّوبَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதிய போது அவர்களுடன் முஸ்லிம்களும் இணை கறிப்பவர்களும் ஸஜ்தா செய்தனர்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 1071
ஒரு சபையில் ஓதும் போது அந்த சபையில் உளுவுடனும் உளூ இல்லாமலும் பலவாறாக இருப்பார்கள். சஜ்தா வசனத்தை ஓதிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூ இல்லாதவர்கள் உளு செய்து வாருங்கள் என்று கூறவில்லை. என்வே ஸஜ்தா திலாவதுக்கு உளூ அவசியம் இல்லை.
மேலும் தொழுகக்காக நிற்கும் போது உளூ செய்யுமாறு தான் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அது போன்ற எந்தக் கட்டளையும் ஸஜ்தா திலாவதுக்கு இல்லை.
ஸஜ்தா திலாவத் சட்டம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode