Sidebar

16
Mon, Sep
1 New Articles

ஜும்ஆ நாளில் ஜும்ஆ அத்தியாயத்தை ஓதினால் சிறப்பா?

துஆ திக்ர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஜும்ஆ நாளில் ஜும்ஆ அத்தியாயத்தை ஓதினால் சிறப்பா?

வெள்ளிக்கிழமை ஜுமுஆ அத்தியாயத்தை ஓதினால் குறிப்பிட்ட நன்மையுண்டு என்று ஒரு செய்தி உள்ளது. ஆனால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

الكشف والبيان -

أخبرنا أبو عمرو الفراتي قال : أخبرنا موسى قال : أخبرنا مكي قال : حدّثنا سليمان قال : حدّثنا أبو معاذ عن أبي عصمة عن زيد العمي عن أبي نصرة عن ابن عباس عن أُبي بن كعب عن النبي ( صلى الله عليه وسلم ) قال : ( من قرأ سورة الجمعة كتب له عشر حسنات بعدد من ذهب إلى الجمعة من مصر من أمصار المسلمين ومن لم يذهب)

யார் ஜுமுஆ அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு ஒரு பட்டணத்திலிருந்து ஜுமுஆக்கு வருகை தந்தவர், மேலும் வராதவர் எண்ணிக்கையளவு பத்து மடங்கு நன்மைகள் அவருக்கு எழுதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அல்கஷ்பு வல்பயான்

இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளரான அபூ இஸ்மா என்ற நூஹ் பின் அபீ மர்யம் என்பவர் இட்டுக்கட்டிச் சொல்பவர். குறிப்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக திருக்குர்ஆனின் சிறப்புகள் தொடர்பாக இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டவர்.

ميزان الاعتدال في نقد الرجال - (7 / 56) وقال مسلم وغيره متروك الحديث وقال الحاكم وضع أبو عصمة حديث فضائل القرآن الطويل

அபூஇஸ்மா என்பவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் (பொய்யர்) என்று இமாம் முஸ்லிம் மற்றும் பலர் கூறியுள்ளார்கள். அபூஇஸ்மா என்பவர் திருக்குர்ஆன் சிறப்புகள் தொடர்பான செய்திகளை இட்டுக்கட்டுக் கட்டியவர் என்று இமாம் ஹாகிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : மீஸானுல் இஃதிதால்

தனியான சிறப்புகள் தொடர்பாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை இந்த அத்தியாயத்தை நபிகளார் ஓதியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

) حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ - وَهُوَ ابْنُ بِلَالٍ - عَنْ جَعْفَرٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ ، قَالَ : اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ، وَخَرَجَ إِلَى مَكَّةَ، فَصَلَّى لَنَا أَبُو هُرَيْرَةَ الْجُمُعَةَ، فَقَرَأَ بَعْدَ سُورَةِ الْجُمُعَةِ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ { إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ }، قَالَ : فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ، فَقُلْتُ لَهُ : إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ : إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ.

அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு ஜுமுஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் அல்ஜுமுஆ எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன் (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்தபோது ஓதிவந்தவை என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன் என்று விடையளித்தார்கள்.

நூல் : முஸ்லிம்

02.04.2014. 1:35 AM

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account