உளு நீங்குவது போல உணர்ந்தால்?
கேள்வி:
தொழுகைக்கு உளு செய்யும் போது அல்லது உளு செய்த பிறகு எனக்கு உளு நீங்கி விடுவது போல உணர்கின்றேன். நான் என்ன செய்வது?
முஹம்மது அப்பாஸ்
பதில் :
உளூ முறியாமலேயே உளூ முறிந்துவிட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே உளூ முறிந்துவிட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தால் தான் மீண்டும் நாம் உளூ செய்ய வேண்டும்.
137 حَدَّثَنَا عَلِيٌّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ فَقَالَ لَا يَنْفَتِلْ أَوْ لَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا رواه البخاري
அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
"தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது (இதனால் உளூ முறிந்துவிடுமா?)'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(காற்றுப் பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டாம்'' என்றார்கள்.
நூல் : புகாரி 137
எனவே உளூ நீங்கியது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அதைக் கண்டுகொள்ளாதீர்கள். சப்தம் அல்லது நாற்றத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்தாலே மீண்டும் உளூ செய்துகொள்ளுங்கள்.
உளு நீங்குவது போல உணர்ந்தால்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode