Sidebar

23
Mon, Dec
31 New Articles

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

சுன்னத்தான தொழுகைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

கடமையான தொழுகை முடிந்த பின் உபரியான தொழுகையைத் தொழுவதாக இருந்தால் அவ்விடத்தை விட்டும் வேறு இடத்துக்கு மாறாமல் அல்லது  பேசாமல் தொழக் கூடாது என்று கூறுகிறார்கள். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டா?

பதில் :

நீங்கள் கூறும் கருத்தில் நபிமொழிகள் உள்ளன.

1463 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ أَرْسَلَهُ إِلَى السَّائِبِ ابْنِ أُخْتِ نَمِرٍ يَسْأَلُهُ عَنْ شَيْءٍ رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلَاةِ فَقَالَ نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمَ الْإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَيَّ فَقَالَ لَا تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ أَنْ لَا تُوصَلَ صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ و حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءٍ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ أَرْسَلَهُ إِلَى السَّائِبِ بْنِ يَزِيدَ ابْنِ أُخْتِ نَمِرٍ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلَمَّا سَلَّمَ قُمْتُ فِي مَقَامِي وَلَمْ يَذْكُرْ الْإِمَامَ رواه مسلم

உமர் பின் அதாஉ பின் அபில்குவார் கூறுகிறார் :

நாஃபிவு பின் ஜுபைர் அவர்கள், என்னை ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் அனுப்பி "(ஒரு முறை) நீங்கள்  முஆவியா (ரலி) அவர்களுடன் ஜுமுஆ தொழுது விட்டு, அதே இடத்தில் நின்று தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?'' என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள்.

(நான் அவ்வாறே கேட்ட போது) ஸாயிப் (ரலி) அவர்கள், "ஆம்; நான் முஆவியா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த ஒரு (தனி) அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம் சலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து தொழுதேன். முஆவியா (ரலி) அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். (நான் சென்ற போது என்னிடம்) அவர்கள், "இனிமேல் இவ்வாறு செய்யாதீர்!  ஜுமுஆ தொழுததும் (ஏதேனும்) பேசாதவரை, அல்லது புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறு தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, ஒரு தொழுகைக்கும், மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக் கூடாது'' என்று கூறினார்கள் என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 1603

22041 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْعَصْرَ فَقَامَ رَجُلٌ يُصَلِّي فَرَآهُ عُمَرُ فَقَالَ لَهُ اجْلِسْ فَإِنَّمَا هَلَكَ أَهْلُ الْكِتَابِ أَنَّهُ لَمْ يَكُنْ لِصَلَاتِهِمْ فَصْلٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ ابْنُ الْخَطَّابِ رواه أحمد

நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மது

கடமையான தொழுகை தொழுத பின் உபரியாகத் தொழ நாடினால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையாமல் இடம் மாறிக் கொள்ள வேண்டும். அல்லது ஏதேனும் பேசி விட்டு அதே இடத்தில் தொழ வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுகிறது. இதற்கான காரணமும் இந்த ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது இரண்டும் ஒரே தொழுகை என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பது தான் அந்தக் காரணம்.

தொழுகையுடன் சம்மந்தமில்லாத காரியத்தைச் செய்தல், அல்லது அதிக இடைவெளி கொடுத்தல், அல்லது தஸ்பீஹ் திக்ரு செய்தல் போன்றவற்றால் பிரித்து விட்டால் அதே இடத்தில் தொழலாம். உடனே உபரித் தொழுகை தொழக்கூடியவர்கள் யாரிடமாவது பேசிவிட்டோ, அல்லது இடம் மாறியோ தொழலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account