பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா?
ரஃபீக்
பதில்:
அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் பர்ளு அதாவது கட்டாயக்கடமை ஆகும். உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஜகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம் செய்ய வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால் குற்றம் ஏற்படும். இதற்காக மறுமையில் கேள்வி கேட்கப்படும். எனவே இது மாதிரியான விஷயங்களை விட்டுவிடாமல் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் கற்றுத் தந்த வணக்கங்களில் செயல்படுத்துவதற்கும், செயல்படுத்தாமல் விடுவதற்கும் அனுமதியுள்ளவை இரண்டாவது வகையாகும். இது சுன்னத் எனப்படும்.
கடமையான தொழுகைக்கு முன் பின் நிறைவேற்றப்படும் சுன்னத்தான தொழுகைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது போன்ற வணக்கங்களைக் கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. செய்தால் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டால் நன்மையும் கிடைக்காது. குற்றமும் ஏற்படாது.
திருக்குர்ஆனில் வலியுறுத்தப்பட்டால் அது பர்ளு – கடமை என்றும் நபிமொழியில் வலியுறுத்தப்பட்டால் அது சுன்னத் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.
திருக்குர்ஆனில் வலியுறுத்தப்பட்ட பல விஷயங்கள் கடமையாக இல்லாமல் இருக்கின்றன. உதாரணம் ஜகாத் அல்லாத தான தர்மங்கள்.
அது போல் ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளிலும் கடமையானவை உள்ளன.
ஒரு காரியத்தைச் செய்யுமாறு அல்லாஹ்வோ, அவனது தூதரோ கட்டளையிட்டதுடன் அக்கட்டளையை மீறினால் கடும் தண்டனையும் கிடைக்கும் என்று சொல்லி இருந்தால் அவை கட்டாயக் கடமை என்று புரிந்து கொள்ளலாம்.
கடமையை விட்டால் தான் அல்லாஹ் தண்டிப்பான். கடமையாக்காத ஒன்றை விட்டால் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்.
ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளை இட்டு அதைச் செய்தால் பெரிய பரிசுகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டால் அல்லது பரிசோ தண்டனையோ குறிப்பிடாமல் ஆர்வமூட்டப்பட்டால் அதை சுன்னத் அதாவது கடமையாக்கப்படாத நபிவழி என்று முடிவு செய்யலாம்.
பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode