Sidebar

30
Mon, Jun
0 New Articles

கடமையான தொழுகைகளைவீட்டில் தொழலாமா?

ஜமாஅத் தொழுகை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கடமையான தொழுகைகளைவீட்டில் தொழலாமா?

கடமையான தொழுகைகளைப் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும்.

حيح مسلم

1520 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ عَنْ أَبِى الْعُمَيْسِ عَنْ عَلِىِّ بْنِ الأَقْمَرِ عَنْ أَبِى الأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلاَءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ -صلى الله عليه وسلم- سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِى بُيُوتِكُمْ كَمَا يُصَلِّى هَذَا الْمُتَخَلِّفُ فِى بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلاَّ مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُؤْتَى بِهِ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِى الصَّفِّ.

(ஜமாஅத்திற்குப் போகாமல்) தன் வீட்டிலேயே தங்கியிருந்து இன்னார் தொழுவது போல் உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் உங்கள் நபிவழியை விட்டவராவீர்கள். உங்கள் நபிவழியை விட்டீர்களானால் நீங்கள் வழிகெட்டுப் போய் விடுவீர்கள். எந்த ஒரு மனிதரும் அழகுற உலூச் செய்து இந்தப் பள்ளிகள் ஏதேனும் ஒன்றை நோக்கி வருகின்ற போது, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதி ஓர் அந்தஸ்தை உயர்த்தி அதன் மூலம் ஒரு தீமையை அழிக்காமல் இருப்பதில்லை.  நன்கு அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர இந்த ஜமாஅத் தொழுகைக்கு வேறு யாரும் வராமல் இருப்பது கிடையாது.  ஒருவர், இரண்டு பேரின் கைத்தாங்கலாக (பள்ளிக்கு) கொண்டு வரப்பட்டு வரிசையில் நிறுத்தப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : முஸ்லிம்

வீட்டில் தொழ அனுமதிக்கப்பட்டவர்கள்

எந்தக் காரணமும் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல சோம்பல்பட்டு வீட்டில் தொழுவதை இந்த ஹதீஸ்கள் தடை செய்கின்றன.

உடல் பாதிப்புகளால் பள்ளிக்கு வர இயலாதவர்கள் வீட்டில் தொழுது கொள்ளலாம். இத்தகையவர்கள் வீட்டில் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாமும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதுள்ளனர்.

صحيح البخاري

688 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ وَهُوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது தமது இல்லத்தில் உட்கார்ந்த படியே தொழுதார்கள். மக்கள் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் உட்காருங்கள் என்று சைகை செய்தார்கள். தொழுகை முடிந்த போது, பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்படுகிறார். அவர் குனிந்தால் நீங்களும் குனியுங்கள்; அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 688

ஒருமாத காலம் மனைவியருடன் நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்ததாலும் ஒரு மாத காலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் தொழுதுள்ளனர் என்பதை மேற்கண்ட ஹதீஸில் இருந்து அறியலாம்.

இது குறித்து புகாரி 1113, 1236 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.

صحيح البخاري

667 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ، كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالسَّيْلُ، وَأَنَا رَجُلٌ ضَرِيرُ البَصَرِ، فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلَّى، فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ؟» فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنَ البَيْتِ، فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

கண் பார்வையிழந்த இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் சமூகத்தாருக்கு தொழுகை நடத்துபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "அல்லாஹ்வின் தூதரே! இருட்டும், வெள்ளமுமாக இருக்கிறது. நானோ பார்வை மங்கியவன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் வந்து) என் வீட்டில் ஓர் இடத்தில் தொழ வேண்டும். அதை நான் தொழும் இடமாக ஆக்கிக் கொள்வேன்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, "(உங்கள் வீட்டில்) எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்கள்?'' எனக் கேட்டார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் வீட்டில் ஒரு பகுதியைக் சுட்டிக் காட்டினார்கள். அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி)

நூல் : புகாரி 667

670حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ قَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ إِنِّي لَا أَسْتَطِيعُ الصَّلَاةَ مَعَكَ وَكَانَ رَجُلًا ضَخْمًا فَصَنَعَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا فَدَعَاهُ إِلَى مَنْزِلِهِ فَبَسَطَ لَهُ حَصِيرًا وَنَضَحَ طَرَفَ الْحَصِيرِ فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ فَقَالَ رَجُلٌ مِنْ آلِ الْجَارُودِ لِأَنَسِ بْنِ مَالِكٍ أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى قَالَ مَا رَأَيْتُهُ صَلَّاهَا إِلَّا يَوْمَئِذٍ رواه البخاري

அன்சாரிகளில் ஒருவர் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) "என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் தொழ முடிவதில்லை'' என்று கூறினார்- (ஏனெனில்) அவர் உடல் பருமனான மனிதராக இருந்தார். எனவே, அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக உணவு தயார் செய்து தம் இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். நபி (ஸல்) அவர்களுக்காகப் ஒரு பாயை விரித்து (பதப்படுத்துவதற்காக) அந்தப் பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். அந்தப் பாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்''

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 670

கடமையான தொழுகைகளை வீட்டில் தொழுவதற்குக் காரணம் இருக்க வேண்டும். இந்தக் காரணம் நிர்பந்தமான நிலைகளாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை.

ஒருவரைச் சந்திக்கச் செல்லுதல், தொழில் போன்ற மார்க்கம்  அனுமதித்த விஷயங்களுக்காக வீட்டில் தொழவேண்டிய நிலை ஏற்பட்டால் அவ்வாறு தொழுவது தவறல்ல. இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

1054و حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ وَأَبُو الرَّبِيعِ كِلَاهُمَا عَنْ عَبْدِ الْوَارِثِ قَالَ شَيْبَانُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا فَرُبَّمَا تَحْضُرُ الصَّلَاةُ وَهُوَ فِي بَيْتِنَا فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ ثُمَّ يُنْضَحُ ثُمَّ يَؤُمُّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَقُومُ خَلْفَهُ فَيُصَلِّي بِنَا وَكَانَ بِسَاطُهُمْ مِنْ جَرِيدِ النَّخْلِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது சில வேளைகளில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும். உடனே, தாம் அமரும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு பணிப்பார்கள். அவ்வாறே அது பெருக்கி(த் துடைத்து)ச் சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். (அன்று) மக்களுடைய விரிப்பு பேரீச்சை மட்டையால் செய்யப்பட்டதாகவே இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம் 1169

477حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 477

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யப்பட்ட காரியத்துடன் அனுமதிக்கப்பட்ட காரியத்தை ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள். மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைத்தெருவில், வீட்டில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.

கடைத் தெருவில், வீட்டில் தொழுவது தடுக்கப்பட்ட காரியமாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுவதை இதனுடன் ஒப்பிட்டு சிறப்பித்துக் கூறியிருக்க மாட்டார்கள்.

எனவே தொழில் காரணத்துக்காக பள்ளிக்குச் சென்று தொழாமல் கடையில் தொழுதால் அது தவறல்ல என்ற கருத்தை மேலுள்ள செய்தி கூறுகின்றது.

மேலும் பின்வரும் செய்திகளும் இதை உறுதி செய்கின்றன.

17217حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ قَالَ صَلَّيْتُ الظُّهْرَ فِي بَيْتِي ثُمَّ خَرَجْتُ بِأَبَاعِرَ لِي لِأُصْدِرَهَا إِلَى الرَّاعِي فَمَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي بِالنَّاسِ الظُّهْرَ فَمَضَيْتُ فَلَمْ أُصَلِّ مَعَهُ فَلَمَّا أَصْدَرْتُ أَبَاعِرِي وَرَجَعْتُ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي مَا مَنَعَكَ يَا فُلَانُ أَنْ تُصَلِّيَ مَعَنَا حِينَ مَرَرْتَ بِنَا قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ كُنْتُ صَلَّيْتُ فِي بَيْتِي قَالَ وَإِنْ  رواه أحمد

பனூ தைல் குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :

நான் என்னுடைய வீட்டில் தொழுது விட்டு எனது கால்நடைகளை மேய்ப்பாளரிடம் ஒப்படைப்பதற்காக அவற்றுடன் வெளியே சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் தொழாமல் கடந்து சென்று விட்டேன். எனது கால்நடைகளை மேய்க்க விட்டுவிட்டு திரும்பினேன். இத்தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம் இன்னாரே நீர் நம்மைக் கடந்து சென்ற போது ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய வீட்டிலேயே தொழுது விட்டேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள் நீ ஏற்கனவே தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு வந்தால் ஜமாஅத்துடன் தொழ வேண்டும்) என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மது 17217

488حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنِي يَعْلَى بْنُ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ عَنْ أَبِيهِ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غُلَامٌ شَابٌّ فَلَمَّا صَلَّى إِذَا رَجُلَانِ لَمْ يُصَلِّيَا فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَدَعَا بِهِمَا فَجِئَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا قَالَا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا فَقَالَ لَا تَفْعَلُوا إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ أَدْرَكَ الْإِمَامَ وَلَمْ يُصَلِّ فَلْيُصَلِّ مَعَهُ فَإِنَّهَا لَهُ نَافِلَةٌ حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ بِمِنًى بِمَعْنَاهُ رواه أبو داود

யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் பருவமடைந்த சிறுவனாக இருந்த போது  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு முறை) தொழுதேன். அவர்கள் தொழுது கொண்டிருந்த போது பள்ளியின் ஒரு பகுதியில் இருவர் தொழாமல் அமர்ந்திருந்தார்கள். அவ்விருவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவ்விருவரும் தங்களது தோள்புஜங்கள் நடுங்கியவாறு வந்தார்கள். நீங்கள் எங்களுடன் தொழாமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எங்கள் இருப்பிடங்களிலேயே நாங்கள் தொழுது விட்டோம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யாதீர்கள். உங்களில் ஒருவர் தனது இருப்பிடத்தில் தொழுதுவிட்டு பிறகு இமாம் தொழாமல் இருக்கும் நிலையில் அவரை வந்தடைந்தால் அவருடன் சேர்ந்து அவர் தொழட்டும். அத்தொழுகை அவருக்கு உபரியாக அமைந்து விடும்.

அபூதாவூத் : 488

வீட்டிலே தொழுததாக கூறியவர்களை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக ஜமாஅத் தொழுகை நடக்கும் போது அதிலும் சேர்ந்து தொழுங்கள் என்று வழிகாட்டியுள்ளனர். தக்க காரணம் இருந்தால் வீட்டில் தொழலாம் என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை, குளிர் போன்ற நேரங்களில் வீட்டில் தொழுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். இவை நிர்பந்தமான சூழ்நிலைகள் அல்ல. இதில் மக்களுக்குச் சற்று சிரமம் இருப்பதால் இந்த அனுமதியை நபியவர்கள் வழங்குகிறார்கள்.

எனவே பள்ளிக்குச் செல்லும் போது சிரமம் ஏற்படுமானாலும் அந்தச் சிரமம் நிர்பந்தம் என்ற அளவில் இல்லாவிட்டாலும் வீட்டில் தொழ அனுமதியுண்டு என்பதை அறியலாம்.

பள்ளிக்குச் செல்வதின் சிறப்பு

காரணம் இருந்தால் வீட்டில் தொழுவது அனுமதி என்றாலும் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதே சிறப்பிற்குரியதும், அதிக நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதுமாகும்.

பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதற்கு ஏராளமான சிறப்புகளும், அதிகமான நன்மைகளும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. பள்ளி அல்லாத இடங்களில் தொழும் போது இந்த சிறப்புகளையும், நன்மைகளையும் இழக்க நேரிடும்.

27 மடங்கு நன்மைகள்

731حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى فِيهَا لَيَالِيَ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلَاةِ صَلَاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَرواه البخاري

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக் கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின்பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் அறிந்த போது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமந்து கொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து, "உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர!'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 731

صحيح البخاري

645 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»

"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)

நூல் : புகாரி 645

ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள்

صحيح البخاري

2119 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " صَلاَةُ أَحَدِكُمْ فِي جَمَاعَةٍ، تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي سُوقِهِ وَبَيْتِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ بِأَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ، ثُمَّ أَتَى المَسْجِدَ لاَ يُرِيدُ إِلَّا الصَّلاَةَ، لاَ يَنْهَزُهُ إِلَّا الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رُفِعَ بِهَا دَرَجَةً، أَوْ حُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَالمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ، اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ، وَقَالَ: أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ "

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ, கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்.  ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகின்றது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account