Sidebar

22
Sun, Dec
26 New Articles

இரண்டாம் ஜமாஅத் நடத்தலாமா?

ஜமாஅத் தொழுகை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இரண்டாம் ஜமாஅத் நடத்தலாமா?

ஒரு பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தாமதமாக வருபவர்கள் தனித்தனியாகத் தொழாமல் ஜமாஅத்தாகத் தொழலாம்; அதுவே சிறந்தது என்று நாம் கூறி வருகிறோம்.

அது போல் மக்கள் கூட்டம் நிரம்பியதால் ஜமாஅத் தொழுகையில் சேர முடியாதவர்கள் அந்த ஜமாஅத் முடிந்து மக்கள் வெளியேறிய பின் ஜமாஅத்தாக தொழலாம் என்றும் நாம் கூறி வருகிறோம். இரண்டு மட்டுமல்ல; இது போல் தேவை ஏற்பட்டால் எத்தனை ஜமாஅத்தும் ஒரு பள்ளியில் நடத்தலாம் என்றும் நாம் கூறி வருகிறோம்.

இது குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம்.

سنن الترمذي

220 - حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا؟»،  فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்? என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன்வந்தார். வந்த மனிதர் அவருடன் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

நூல்கள்: திர்மிதி 204, அபூதாவூத் 487

ஜமாஅத் தொழுகை நடத்தி முடிந்த பிறகு, மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் மிகத் தெளிவான ஆதாரமாகும்.

தவறவிட்ட ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகைக்கும் கூட இதை ஆதாரமாகக் கொள்ளலாம். ஜமாஅத் நன்மையை இழக்கக் கூடாது என்பதற்காக இன்னொருவர் சேர்ந்து தொழலாம் என்றால் ஜமாஅத்தாக மட்டுமே தொழமுடியும் என்ற நிலையில் உள்ள ஜும்மாவுக்கும் பெருநாளுக்கும் இது அதிகம் பொருந்தும்.

ஒருவர் தனியாக தொழுதால் அவரது தொழுகை நிறைவேறி விடும் என்று இருந்தும் கூடுதல் நன்மைக்காக இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுகிறார்கள். ஜும்மா, பெருநாள் தொழுகை தனியாக தொழ முடியாது எனும் போது அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

ஜமாஅத் தொழுகைக்கு எண்ணிக்கைக்கு எல்லை இல்லை. இருவர் இருந்தாலே போதும். ஒருவர் இமாமாகவும், மற்றவர் பின்பற்றித் தொழுபவராகவும் ஜமாஅத் தொழலாம். பயணத்தில் இருப்பவர்களுக்கு ஜமாஅத் அவசியம் இல்லை என்றாலும் பயணத்தில் இருவர் இருந்தால் ஒருவர் இமாமாகி தொழுகை நடத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

صحيح البخاري

658 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَأَذِّنَا وَأَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»

தொழுகை நேரம் வந்து விட்டால் நீங்கள் இருவரும் பாங்கும், இகாமத்தும் சொல்லி உங்களில் மூத்தவர் தொழுகை நடத்தட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபித்தோழர்களின் செயல்பாடுகளும் இந்த நபிமொழியின் சரியான பொருளை அறிந்து கொள்ள உதவுகிறது.

وجاء أنس بن مالك: «إلى مسجد قد صلي فيه، فأذن وأقام وصلى جماعة»

அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

நூல்: புகாரி

الأوسط لابن المنذر

2028 - وحدثنا موسى ، قال : ثنا أبو بكر ، قال : ثنا إسحاق الأزرق ، عن عبد الملك بن أبي سليمان ، عن سلمة بن كهيل ، أن ابن مسعود ، دخل المسجد وقد صلوا فجمع بعلقمة ، والأسود ، ومسروق

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள்

அறிவிப்பவர்: ஸலமா இப்னு குகைல்

நூல்: இப்னுல் முன்திரியின் அல்அவ்ஸத்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account