துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படியும் வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க வேண்டுமா?
பதில்
இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் குழப்பங்கள் உள்ளதால் இது சரியான ஹதீஸ் அல்ல என்று ஸைலயீ, முன்திர் உள்ளிட்ட ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
مسند أحمد ط الرسالة (37/ 24)
22334 - حَدَّثَنَا سُرَيْجٌ، وَعَفَّانُ قَالَا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الْحُرُّ بْنُ الصَّيَّاحِ قَالَ: سُرَيْجٌ، عَنِ الْحُرِّ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ " قَالَ عَفَّانُ: أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ (1)
سنن أبي داود ت الأرنؤوط (4/ 101)2437 - حدَّثنا مُسَدَّدٌ، حدَّثنا أبو عَوانة، عن الحرِّ بنِ الصَّيَّاح، عن هُنيدَة ابنِ خالد، عن امرأتِه عن بعضِ أزواج النبيِّ -صلَّى الله عليه وسلم- قالت: كان رسولُ الله -صلَّى الله عليه وسلم- يَصُوُم تسعَ ذي الحجة، ويَوْمَ عاشوراء، وثلاثةَ أيامٍ من كُلِّ شهرٍ: أولَ اثنين من الشهر، والخميسَ والخَميسَ (2) (3).
துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்களும் ஆஷூரா நாளிலும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்களும், மாதத்தின் முதல் இரு நாட்களும், இரண்டு வியாழன்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர்.
அஹ்மது அபூதாவூத் உள்ளிட்ட சில நூல்களில் இது இடம் பெற்றுள்ளது. இதை நபியின் ஒரு மனைவி கூறியதாக என் மனைவி சொன்னார் என்று ஹுனைதா என்பார் இதை அறிவிக்கிறார்.
- ஹுனைதாவின் மனைவியின் பெயர் அவரது நம்பகத் தன்மை குறித்து எந்த விபரமும் இல்லை. இதன் காரணமாக இது பலவீனமாகின்றது.
- அத்துடன் ஹுனைதா என்பார் அறிவிப்பாளர் குறித்து பலவாறாக முரண்பட்டு அறிவிக்கிறார்.
- மனைவி சொன்னதாக அறிவிப்பவர் மற்றொரு சந்தர்ப்பத்தில் என் தாய் சொன்னார் என்று அறிவிக்கிறார்.
- மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியின் மனைவியிடம் தானே கேட்டதாக கூறுகிறார்.
- நபியின் மனைவி உம்மு சலமா என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.
- நபியின் மனைவி ஹஃப்ஸா என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.
இப்படி மாற்றி மாற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ் முள்தரப் (மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது) என்று கூறப்படுகிறது. இது பலவீனமான ஹதீஸின் ஒரு வகையாகும்.
இந்தக் குழப்பங்கள் உள்ள ஹதீஸ்களைக் கீழே தந்துள்ளோம்.
(அல்பானி அவர்கள் இதை சரியான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளது தவறானதாகும்.)
سنن أبي داود
2452 - حدَّثنا زهيرُ بنُ حربٍ، حدَّثنا محمدُ بنُ فضيلٍ، حدَّثنا الحسنُ بنُ عُبيدِ الله، عن هُنيْدة الخُزاعيِّ عن أُمِّهِ، قالت: دخلتُ على أُمِّ سلمةَ فسألتُها عن الصِّيامِ، فقالت: كان رسولُ الله -صلَّى الله عليه وسلم- يأمرُني أن أصومَ ثلاثةَ أيامٍ من كل شهرٍ، أوَّلَها الاثنينِ، والخميسَ، والخَميسَ (2).
سنن النسائي
2414 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ عَنْ زُهَيْرٍ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ قَالَ سَمِعْتُ هُنَيْدَةَ الْخُزَاعِيَّ قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ سَمِعْتُهَا تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ أَوَّلَ اثْنَيْنِ مِنْ الشَّهْرِ ثُمَّ الْخَمِيسَ ثُمَّ الْخَمِيسَ الَّذِي يَلِيهِ
سنن النسائي
2415 - أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ
سنن النسائي
2418 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ هُنَيْدَةَ الْخُزَاعِيِّ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ أَوَّلِ خَمِيسٍ وَالِاثْنَيْنِ وَالِاثْنَيْنِ
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். இது முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது.
صحيح مسلم
9 - (1176) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ - قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: - حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ»
அரஃபா எனும் ஒன்பதாம் நாள் நோன்பு மட்டுமே ஹஜ்ஜில் இருப்போர் தவிர மற்றவர்களுக்கு சுன்னத் ஆகும்.
பொதுவாக தடை செய்யப்பட்ட ஐந்து நாட்கள் தவிர மற்ற நாட்களில் நாம் உபரியாக நோன்பு நோற்கலாம். அந்த அடிப்படையில் ஒருவர் தாமாக விரும்பி இந்த ஒன்பது நாள் நோன்பு நோற்றால் உபரியான நோன்பின் நன்மையை அவர் பெற்றுக் கொள்வார்.
இந்த நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என்பது போல் கருதினாலோ அப்படி வலியுறுத்தினாலோ அது பித்அத் ஆகும்.
துல்ஹஜ் மாதம் 9 நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode