கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா?
முஹம்மத் ஃபைஸர்
திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும், தர்மம் செய்யுமாறும் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பார்க்க: 1040, 1041, 1042, 1043, 1044
கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை.
விஞ்ஞான அடிப்படையில் வெறும் கண்ணால் கிரகணம் பிடித்த நிலையில் உள்ள சூரியனைப் பார்க்கக் கூடாது; அது கண் பார்வையைப் பாதிக்கும் என்பது மட்டுமே காரணத்துடன் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருட்டறையில் கர்ப்பிணிப் பெண்களை அடைத்து வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் பொய்யான கட்டுக் கதையாகும்.
கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode