Sidebar

03
Tue, Dec
21 New Articles

கறுப்பு நிறம் தரித்திரமா

மூட நம்பிக்கைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கறுப்பு நிறமும், தரித்திரமும்

முஸ்லிம்களில் சிலர் கறுப்பு நிறத்தை தரித்திரம் என்று நம்புகின்றனர். கறுப்பு நிறப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீங்குகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நம்பிக்கை சரியானதா?

பதில்

صحيح مسلم 
451 - (1358) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وقَالَ قُتَيْبَةُ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ الدُّهْنِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ، " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ - وَقَالَ قُتَيْبَةُ: دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ - وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்காவில் பிரவேசித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2638

صحيح مسلم 
452 - (1359) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَا: أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

நூல்: முஸ்லிம் 2639

صحيح البخاري 

5823 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ سَعِيدِ بْنِ فُلاَنٍ هُوَ عَمْرُو بْنُ سَعِيدِ بْنِ العَاصِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ صَغِيرَةٌ، فَقَالَ: «مَنْ تَرَوْنَ أَنْ نَكْسُوَ هَذِهِ» فَسَكَتَ القَوْمُ، قَالَ: «ائْتُونِي بِأُمِّ خَالِدٍ» فَأُتِيَ بِهَا تُحْمَلُ، فَأَخَذَ الخَمِيصَةَ بِيَدِهِ فَأَلْبَسَهَا، وَقَالَ: «أَبْلِي وَأَخْلِقِي» وَكَانَ فِيهَا عَلَمٌ أَخْضَرُ أَوْ أَصْفَرُ، فَقَالَ: «يَا أُمَّ خَالِدٍ، هَذَا سَنَاهْ» وَسَنَاهْ بِالحَبَشِيَّةِ حَسَنٌ

உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்று கேட்டார்கள். மக்கள் (பதில் கூறாமல்) மௌனமாக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டுவரப்பட்டேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், (இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு என்று கூறிவிட்டு, உம்மு காலிதே! இது சனாஹ்' (அழகாயிருக்கிறது) என்று சொன்னார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சனாஹ்' எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும்.

அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நூல் : புகாரி 5823

صحيح البخاري 

5824 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: " لَمَّا وَلَدَتْ أُمُّ سُلَيْمٍ، قَالَتْ لِي: يَا أَنَسُ، انْظُرْ هَذَا الغُلاَمَ، فَلاَ يُصِيبَنَّ شَيْئًا حَتَّى تَغْدُوَ بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَنِّكُهُ، فَغَدَوْتُ بِهِ، فَإِذَا هُوَ فِي حَائِطٍ، وَعَلَيْهِ خَمِيصَةٌ حُرَيْثِيَّةٌ، وَهُوَ يَسِمُ الظَّهْرَ الَّذِي قَدِمَ عَلَيْهِ فِي الفَتْحِ "

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்த போது என்னிடம் அவர்கள் அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனது வாயி-டுவதற்காக இவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும் வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம் என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ஹுரைஸ்' (அல்லது ஜவ்ன்') குலத்தார் தயாரித்த கறுப்பு நிறக் கம்பளி மேலங்கியை அணிந்து கொண்டு மக்கா வெற்றியின் போது தம்மிடம் வந்த தமது வாகன(ஒட்டக)த்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நூல் : புகாரி 5824

 

صحيح مسلم 
61 - (2424) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ - وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ - قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ زَكَرِيَّاءَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ: قَالَتْ عَائِشَةُ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةً وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ، مِنْ شَعْرٍ أَسْوَدَ، فَجَاءَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فَأَدْخَلَهُ، ثُمَّ جَاءَ الْحُسَيْنُ فَدَخَلَ مَعَهُ، ثُمَّ جَاءَتْ فَاطِمَةُ فَأَدْخَلَهَا، ثُمَّ جَاءَ عَلِيٌّ فَأَدْخَلَهُ، ثُمَّ قَالَ: " {إِنَّمَا يُرِيدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا} [الأحزاب: 33] "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருப்புப் போர்வை அணிந்திருந்தார்கள். ஹஸன்,ஹுசைன், ஃபாத்திமா ஆகியோரை அதற்குள்ளே சேர்த்துக் கொண்டார்கள்.

நூல்: முஸ்லிம் 4450

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புப் போர்வை, கறுப்புக் கம்பளி அணிந்ததாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

கறுப்பு நிறப் பொருட்கள் தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பது மூடநம்பிக்கை என்று இதிலிருந்து உணரலாம். காவி நிற ஆடையைத் தவிர மற்ற எல்லா நிறங்களும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account