வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடையா
வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம்.. ஒட்டுக் கேட்பவனைத் தவிர, விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதைப் பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.
திருக்குர்ஆன் 15:16,17,18
210. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. 211. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. 212. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.307
திருக்குர்ஆன் 26:210,211, 212
கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).. (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீப்பந்தம் அவர்களை விரட்டும்.307 அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
திருக்குர்ஆன் 36:7-10
வானத்தைத்507 தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். . (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.. பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.
திருக்குர்ஆன் 72:8.9.10
இவ்வசனங்கள் வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன.
தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில் சிலவற்றைச் செவியுறுவோராக இருந்தனர். இறைவன் அதைத் தடுக்காமல் இருந்தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு இவ்வாறு ஒட்டுக் கேட்பதை விட்டும், வானுலக இரகசியத்தைச் செவியேற்பதை விட்டும் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வானுலகின் எந்த இரகசியத்தையும் ஷைத்தான்கள் அறிய முடியாது என்பதை இவ்வசனங்கள் தெரிவிக்கின்றன.
வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode