Sidebar

22
Sun, Dec
38 New Articles

எல்லா நபிமார்களுக்கும் ஜிப்ரீல் மூலம் தான் வஹி வந்ததா

மலக்குகள் வானவர்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

எல்லா நபிமார்களுக்கும் ஜிப்ரீல் மூலம் தான் வஹி வந்ததா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்பட்டதை நாம் அறிவோம். திருக்குர்ஆனில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் அனுமதியின்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார். "இது, தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:97

நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து 'ரூஹுல் குதுஸ்' உண்மையுடன் இறக்கினார்' என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 16:102

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

திருக்குர்ஆன் 26:193, 194, 195

மற்ற நபிமார்களுக்கு ஜிப்ரீல் மூலம் வேதம் அருளப்பட்டதாக நேரடியாகச் சொல்லப்படவில்லை.

صحيح البخاري

3392 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، سَمِعْتُ عُرْوَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: " فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ يَرْجُفُ فُؤَادُهُ، فَانْطَلَقَتْ بِهِ إِلَى  وَرَقَةَ بْنِ نَوْفَلٍ، وَكَانَ رَجُلًا تَنَصَّرَ، يَقْرَأُ الإِنْجِيلَ بِالعَرَبِيَّةِ، فَقَالَ وَرَقَةُ: مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ، فَقَالَ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى، وَإِنْ أَدْرَكَنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا " النَّامُوسُ: صَاحِبُ السِّرِّ الَّذِي يُطْلِعُهُ بِمَا يَسْتُرُهُ عَنْ غَيْرِهِ "

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) கதீஜா (ரலி) அவர்களிடம், மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை (தம் ஒன்று விட்ட சகோதரரும், வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறிஸ்துவராக மாறிய மனிதராயிருந்தார். அவர், இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார். வரகா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், நீங்கள் என்ன பார்த்தீர்கள்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, இவர் தாம் மூஸாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த நாமூஸ்' எனும் வானவர். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப் போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன் என்று கூறினார்.

நூல் : புகாரி 3392

மூஸாவுக்கு வஹி கொண்டு வந்த நாமூஸ் என்பவர் தான் உம்மிடமும் வந்துள்ளார் என்று வரகா கூறியது மார்க்க ஆதாரமாக ஆகாது என்றாலும் யூத கிறித்தவ்ர்கள் இபடித்தான் நம்பி இருந்தனர் என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம். ஜிப்ரீலை அவர்கள் நாமூஸ் எனக் கூறிவந்தனர் என்பதும் தெரிகிறது

இதற்கு நேரடி ஆதாரம் இல்லாவிட்டாலும் ஜிப்ரீல் மூலம் தான் மற்ற நபிமார்களுக்கும் வேதம் அருளப்பட்டன என்று மறைமுகமாகச் சொல்லும் வசனங்கள் உள்ளன.

நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.

திருக்குர்ஆன் 4:163

நூஹ் நபிக்குப் பின் வந்த நபிமார்களுக்கு வஹி அறிவித்தது போல் உமக்கும் அறிவித்தோம் என்று இவ்வசனம் சொல்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் மூலம் வேதம் அருளப்பட்டது போல் மற்ற நபிமார்களுக்கும் அருளப்பட்டதாகக் கருத முடியும்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவமாக வேதம் அருளப்படவில்லை. ஒலி வடிவ்மாகவே ஜிப்ரீல் (அலை) வேத்தைக் கொண்டு வந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாதது காரணமாக இருக்கலாம்.

ஆனால் மூஸா நபிக்கு மட்டும் எழுத்து வடிவில் வேதம் வழங்கியதாக அலலாஹ் கூறுகிறான்

பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது. "இதைப் பலமாகப் பிடிப்பீராக! இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற் கும் கட்டளையிடுவீராக! குற்றம் புரிந்தோரின் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்'' (என்று இறைவன் கூறினான்.)

திருக்குர்ஆன் 7:145

கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பியபோது "எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) "என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார்.

திருக்குர்ஆன் 7:150

மூஸாவுக்குக் கோபம் தணிந்த போது பலகைகளை எடுத்தார். அதன் எழுத்துக்களில் இறைவனை அஞ்சுவோருக்கு அருளும், நேர்வழியும் இருந்தது.

திருக்குர்ஆன் 7:154

பலகைகளில் சில போதனைகளை அல்லாஹ் எழுதிக் கொடுத்ததாக இவ்வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வே இறங்கி வந்து பலகைகளைக் கொடுக்க மாட்டான்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 42:51

மூன்று வகையாக மட்டுமே அல்லாஹ் வஹி அறிவிப்பான்.

உள்ளத்தில் உதிப்பை போடுதல்

தானே நேரடியாக பேசுதல்

ஒரு வானவரை அனுப்பி அறிவித்தல்

பலகையில் எழுதப்பட்டதை மூன்றாவது வழியில் மட்டுமே மூஸா நபி பெற்றிருக்க முடியும் அதாவது வானவர் மூலம் அல்லாஹ் அந்தப் பலகைகளைக் கொடுத்து அனுபியுள்ளான் என்று அறியலாம்.

இது மூஸா நபிக்கு மட்டும் உள்ள சிறப்பாகும் என்பதைp பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்

صحيح البخاري

6614 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَفِظْنَاهُ مِنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: يَا آدَمُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنَ الجَنَّةِ، قَالَ لَهُ آدَمُ: يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلاَمِهِ، وَخَطَّ لَكَ بِيَدِهِ، أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً؟ فَحَجَّ آدَمُ مُوسَى، فَحَجَّ آدَمُ مُوسَى " ثَلاَثًا

6614 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்)  எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் என்று ஆதம் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் சொன்னார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) எழுதித் தந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6614

எழுத்து வடிவில் எழுதிக் கொடுத்ததும் நேரடியாக பேசியதும் மூஸா நபிக்கு அல்லாஹ் அருளிய தனிச் சிறப்பு என்பதை இதிலிருந்து அறியலாம்

மற்ற நபிமார்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியது போலவே வேதங்களை வழங்கினான்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account