Sidebar

22
Sun, Dec
38 New Articles

வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?

உண்ணுதல் பருகுதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?

ஃபைரோஸ்

பதில் :

சாப்பிடுவதற்கும், பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

صحيح مسلم

105 - (2020) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ،، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ»،

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம்

வலது கையின் உட்புறத்தில் உணவு ஓட்டியிருக்கும் போது தண்ணீர் பாத்திரத்தை வலக் கையால் எடுத்தால் கையில் உள்ள உணவு தண்ணீர் பாத்திரத்தின் மீது படும் நிலை ஏற்படும்.

இதைத் தவிர்ப்பதற்காக இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து வலது கையின் மேற்புறத்தின் மீது அதை வைத்துப் பருகிக் கொள்ளலாம். பருகிய பிறகு இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்து விடலாம். இவ்வாறு செய்வது மேற்கண்ட நபிமொழிக்கு மாற்றமாகாது.

ஒரு பாத்திரத்தை இரண்டு கைகளால் பிடித்தால் தான் சுலபமாகப் பருக முடியும் என்றால் இந்நேரத்தில் வலது கையைப் பிரதானக் கருவியாகவும், இடது கையை துணைக் கருவியாகவும் கருதி இரண்டையும் பயன்படுத்தலாம். இதில் தவறேதுமில்லை. வலது கையால் மட்டும் பிடிக்க இயலாது என்பதால் தான் இடது கையையும் பயன்படுத்துவதால் இது குற்றமாகாது.

எவரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்,

திருக்குர் ஆன் 2:286

வலது கை இல்லாதவர்களும், செயலிழந்த வலது கையைக் கொண்டவரும், வலது கையைப் பயன்படுத்த முடியாமல் காயம், ரணம் உள்ளவர்களும் இடது கையால் சாப்பிடுவ்தும் குடிப்பதும் குற்றமாகாது.

14.06.2011. 12:27 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account