பிறரது சுவற்றில் சுவரொட்டி ஒட்டலாமா?
கேள்வி :
பிறர் வீட்டுச் சுவற்றில் வால் போஸ்டர் ஒட்டுவதால் பிறருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன வழி?
ஜுபைர் முஹம்மத்
பிறர் வீட்டு சுவற்றில் சுவரொட்டி ஒட்டலாமா?
இஸ்மாயீல், வண்ணாரப்பேட்டை
பதில்:
பிறருக்கு உரிமையான பொருட்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சுவற்றின் உரிமையாளரின் அனுமதி பெற்றுத்தான் எதையும் பயன்படுத்த வேண்டும். இது சுவர்களுக்கும் பொருந்தும்.
அனுமதி என்பது இரு வகையில் உள்ளன.
குறிப்பிட்ட நபருக்காக வழங்கப்படும் அனுமதி.
பொதுவாக வழங்கப்படும் அனுமதி.
ஒரு இடத்தில் தண்ணீர்ப் பந்தல் வைக்கப்படுகிறது என்றால், யார் வேண்டுமானாலும் அருந்திக் கொள்ளலாம் என்ற பொதுவான அனுமதி அதில் அடங்கியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சுவற்றில் யார் வேண்டுமானாலும் சுவரொட்டி ஒட்டிக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பலரும் அதில் சுவரொட்டிகளை ஒட்டுவதை நாம் பார்க்கிறோம். பல தரப்பட்ட இயக்கங்களின் அல்லது கட்சிகளின் சுவரொட்டிகளும் அதில் ஒட்டப்பட்டு வருகின்றன. இதை அந்தச் சுவற்றின் உரிமையாளர் ஆட்சேபிக்காமல் இருந்தால் அவர் பொது அனுமதி அளித்துள்ளார் என்று தான் பொருள். இது போன்ற சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்ட தனியாக அனுமதி பெறத் தேவை இல்லை.
ஆனால் ஒரு சுவற்றில் எந்தச் சுவரொட்டியும் ஒட்டப்படாமல் உள்ளது என்றால் அந்த வீட்டுக்காரர் பொது அனுமதி அளிக்கவில்லை என்று எடுத்துக் கொண்டு அது போன்ற சுவர்களில் அனுமதி பெற்றுத் தான் ஒட்ட வேண்டும்.
இந்தச் சுவற்றில் யாரும் சுவரொட்டி ஒட்டக் கூடாது என்று வீட்டு உரிமையாளர் எழுதி வைத்திருந்தால் அந்தச் சுவற்றில் மற்றவர்கள் சுவரொட்டி ஒட்டி வந்தாலும் நாம் ஒட்டக் கூடாது. மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அது போல் ஒரு சிலர் தாங்கள் சார்ந்துள்ள இயக்கம் அல்லது கட்சிகளுக்கு மட்டும் பொது அனுமதி அளித்திருப்பார்கள். இதைப் பல அறிகுறிகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். அது போன்ற சுவர்களில் மற்ற இயக்கத்தினர் சுவரொட்டி ஒட்டக் கூடாது. யாருக்கு அனுமதி கொடுப்பது யாருக்கு மறுப்பது என்பதை அந்த சுவற்றின் உரிமயாளர் தீர்மானிக்க அதிகாரம் உண்டு.
உதாரணமாக முஸ்லீம் லீக் அல்லது சுன்னத் ஜமாஅத் அமைப்புகளின் அலுவலகச் சுவர்களில் அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் ஒட்டக் கூடாது.
இப்படி கவனமாகச் செயல்பட்டால் இடையூறு என்ற பிரச்சனை வராது.
10.04.2012. 10:26 AM
பிறரது சுவற்றில் சுவரொட்டி ஒட்டலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode