Sidebar

21
Sat, Dec
38 New Articles

குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் காட்டும் வழி என்ன?

போதைப் பொருட்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் காட்டும் வழி என்ன?

இத்தகையவர்கள் உலகில் அதிகமாக இருக்கும் போது இவர்கள் அனைவரையும் தண்டிப்பதால் தீர்வு கிடைத்துவிடுமா?

பதில் :

ஒரு தீமை பல வழிகளில் பரவ வாய்ப்பு இருந்தால் இஸ்லாம் அந்த வழிகள் அனைத்தையும் அடைத்துவிடும். போதைப் பொருட்களை ஒழிப்பதற்கும் இஸ்லாம் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கின்றது.

குடிகாரர்களுக்கு தண்டனை தருவதால் மட்டும் போதைப் பொருட்களை அழித்துவிட முடியாது. போதைப் பொருட்களை முற்றிலுமாக அழித்தல், உற்பத்திக்கு தடை விதித்தல், நாட்டுக்குள் ஊடுறுவவிடாமல் தடுத்தல், இவை பரவுவதற்கு காரணமாக உள்ள அனைவரையும் தண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலமே போதைப் பொருட்களை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த முடியும்.

போதைப் பொருளுடன் சம்பந்தப்படக்கூடிய அனைவரையும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

போதைப் பொருட்களைப் பயன்படுத்த தடை செய்தால் முதலில் அந்தப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இது தான் முக்கியமாக் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

صحيح البخاري

459 - حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ سُورَةِ البَقَرَةِ فِي الرِّبَا، «خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَسْجِدِ فَقَرَأَهُنَّ عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ تِجَارَةَ الخَمْرِ»

வட்டி குறித்த பகரா அத்தியாயத்தின் வசனங்கள் அருளப்பட்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து அதை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மது விற்பனையையும் ஹராமாக்கினார்கள்.

நூல் : புகாரி 459

மது விற்பனையை ஒரு பக்கம் அனுமதித்து விட்டு குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதிப் போடும் கள்ளத்தனத்தால் ஒருக்காலும் போதைப் பொருளை ஒழிக்க முடியாது.

صحيح البخاري

2464 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كُنْتُ سَاقِيَ القَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ، وَكَانَ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الفَضِيخَ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيًا يُنَادِي: «أَلاَ إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ» قَالَ: فَقَالَ لِي أَبُو طَلْحَةَ: اخْرُجْ، فَأَهْرِقْهَا، فَخَرَجْتُ فَهَرَقْتُهَا، فَجَرَتْ فِي سِكَكِ المَدِينَةِ، فَقَالَ بَعْضُ القَوْمِ: قَدْ قُتِلَ قَوْمٌ وَهِيَ فِي بُطُونِهِمْ، فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا} [المائدة: 93] الآيَةَ

2464 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவையே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, (மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், வெளியே சென்று இதை ஊற்றிவிடு என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், தங்கள் வயிறுகளில் மது இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?) என்று கேட்டார்கள். அப்போது தான், நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

நூல் : புகாரி 2464

صحيح البخاري

4617 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ: قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: " مَا كَانَ لَنَا خَمْرٌ غَيْرُ فَضِيخِكُمْ هَذَا الَّذِي تُسَمُّونَهُ الفَضِيخَ، فَإِنِّي لَقَائِمٌ أَسْقِي أَبَا طَلْحَةَ، وَفُلاَنًا وَفُلاَنًا، إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: وَهَلْ بَلَغَكُمُ الخَبَرُ؟ فَقَالُوا: وَمَا ذَاكَ؟ قَالَ: حُرِّمَتِ الخَمْرُ، قَالُوا: أَهْرِقْ هَذِهِ القِلاَلَ يَا أَنَسُ، قَالَ: فَمَا سَأَلُوا عَنْهَا وَلاَ رَاجَعُوهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ "

4617 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் ஃபளீக்' என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து, உங்களுக்குச் செய்தி எட்டியதா? என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், என்ன அது? என்று கேட்டனர். அவர், மது தடை செய்யப்பட்டுவிட்டது என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடு என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.

நூல் : புகாரி 4617

ஒரு ஆட்சித் தலைவர் கட்டளையிட்டால் அதை அவர் உறுதியுடன் கடைப்பிடிப்பார்; மேம்போக்காக சட்டம் போட மாட்டார் என்ற உறுதியை மக்களிடம் காட்ட வேண்டும். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) இருந்த காரணத்தாலும் அவர்கள் போதித்த ஆன்மிக நெறியாலும் அந்த வினாடியிலேயே மதுவை அவர்களால் கீழே கொட்ட முடிந்தது.

இருப்பு தீரும் வரை விற்கலாம் என்ற போலி அறிவிப்புகளால் மதுவை ஒழிக்க முடியாது. லாப நட்டக் கனக்கு பார்க்காமல் ஒரு உத்தரவில் முற்றாகத் தடை செய்ய வேண்டும். அனைத்து இருப்புகளையும் அழிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் போதைப் பொருளை ஒழிக்க முடியும். இதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

இதையும் மீறி ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்தினால் பொதுமக்கள் முன்னால் தேவயான அளவுக்கு செருப்பால் அடிக்க வேண்டும். செருப்பால் அடிக்கும் போது தான் அது கேவலமான செயல் என்ற கருத்து மக்கள் உள்ளத்தில் பதியும். மறுமை அச்சமில்லாவிட்டாலும் உலகில் கிடைக்கும் தண்டனைக்குப் பயந்து குடிப்பதை விட்டும் விலகிக் கொள்வார்கள்.

صحيح البخاري

6773 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ح حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « ضَرَبَ فِي الخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ»

6773 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும், செருப்பாலும் அடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.

நூல் : புகாரி 6773

25.06.2011. 1:44 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account