Sidebar

21
Sat, Dec
38 New Articles

மோசடி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றலாமா?

நாணயம் நேர்மை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மோசடி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றலாமா?

சவூதி அரேபியாவில் நான் பணி செய்யும் நிறுவனத்தில் பொய், ஏமாற்றுதல், எடை அளவுகளில் மோசடி செய்தல் ஆகியவற்றைக் கம்பெனி லாபம் அடைவதற்காகச் செய்கிறேன். கம்பெனி நிர்வாகமே இப்படி செய்யச் சொல்வதால் செய்யலாமா?

முஹம்மது முபஷ்ஷிர்

பதில்:

வியாபாரத்தில் பொய் சொல்வதும், அளவு நிறுவையில் மோசடி செய்வதும் இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாவங்களாகும். இந்தப் பாவத்தைச் செய்யுமாறு யார் கூறினாலும் அதை நாம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் செய்யச் சொன்னவரும், செய்தவரும் இருவருமே பாவிகளாகி விடுவார்கள்.

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4)83

அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

திருக்குர்ஆன் 83 : 1,2,4

وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (85)11

என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!   (என்று ஷுஐப் கூறினார்)

திருக்குர்ஆன் 11 : 87

صحيح البخاري

6177 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الغَادِرَ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ: هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَن

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் கொடி ஒன்று நாட்டப்பட்டு,  இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி  என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6177

صحيح مسلم

(102) وَحَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து)  உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?   என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது   என்று கூறினார். அதற்கு அவர்கள்,  மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

صحيح مسلم

59 - (2581) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ»

முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், யாரிடத்தில் பொற்காசுகளும், எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)  என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ் யாரெனில், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) அவனைப் பற்றி இட்டுக்கட்டியிருப்பான். அவனைத் திட்டியிருப்பான். அவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். அவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். இதை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் முடிந்து விட்டால் இவனுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

இது மாபெரும் குற்றம்; மறுமை நன்மையைப் பாழாக்கக்கூடியவை.

இந்தப் பாவத்தைச் செய்தால் தான் கம்பெனியில் வேலை செய்ய முடியும் என்றால் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

சவூதி போன்ற நாடுகளில் பணியாற்றுவதால் நினைத்த நேரத்தில் வேலையை விட்டு விலக முடியாத நிலை இருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சியில் இப்போதே இறங்கினால் உங்கள் செயல் நிர்பந்தத்தில் அடங்கும். எவ்வித முயற்சியும் செய்யாமல் அதில் நிலைத்திருந்தால் அந்தப் பாவத்தில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும். மேற்கண்ட மார்க்கத்தின் எச்சரிக்கைகளை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

14.02.2012. 11:14 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account