ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா?
(அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அளித்த பதில்)
கேள்வி:
முஸ்லிம் வருடப் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடுவது நடைமுறையிலுள்ளது. ரசூல் ஸல் அவர்கள் காலத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டதா?
எம்.ஹாஜி முஹம்மது. நிரவி.
பதில்:
இஸ்லாமியர்களின் வருடப் பிறப்பு நாள் என்பதும், ஹிஜ்ரி ஆண்டு என்பதும் இஸ்லாத்தில் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றனர்.
அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி பரந்து விரிந்து விட்டதனால் நிர்வாக வசதிகளுக்காகப் பல அம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அப்போது தான் முக்கியமான நிகழ்ச்சியான ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்;டது.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் ஏற்படுத்தப்பட்ட ஹிஜ்ரி ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தம் இல்லை.
ஹிஜ்ரி வருடத்தை உருவாக்கிய உமர் (ரலி)
அவர்கள் ஆண்டு தோறும் ஹிஜ்ரி ஆண்டைக் கொண்டாடவில்லைஉமர்(ரலி) அவர்களுக்கும் வருடப்பிறப்பைக் கொண்டாடுவதற்கும் சம்மந்தமில்லை.
அவர்கள் ஹிஜ்ரி ஆண்டைத் தான் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தினார்கள். அதை விழாவாக ஆக்கியது மிகவும் பிற்காலத்தில் தான். எனவே எந்த வருடப் பிறப்பையும் கொண்டாடுவது கூடாது. மேலும் முஸ்லிம்கள் கொண்டாடும் விழாக்கள் இரு பெருநாட்கள் மட்டுமே! வேறு கொண்டாட்டமில்லை.
ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode