Sidebar

22
Sat, Feb
53 New Articles

சுன்னத் செய்யப்பட்ட நிலையில் ஏன் பிறக்கச் செய்யவில்லை?

இஸ்லாமின் வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பிறக்கும் போதே , 

ஏன் சுன்னத் செய்யப்படவில்லை...?

DrMohamed Kizhar

இந்தப் பதிவுக்குச் செல்லும் முன்பு

 ஆணுறுப்பின் முன் தோல் = 

Fore Skin or Prepuce

ஆணுறுப்பின் முன்பகுதி = 

Glans Penis

ஒரு நாத்திக மருத்துவ நண்பர் என்னிடம்  " கிஸார், ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..  சுன்னத்  ( ஆணுறுப்பின் முன்தோலை Prepuce /foreskin நீக்கம்) பண்ணுவதால் பல மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளது... இஸ்லாமிய மதம் சுன்னத் செய்யும்படி வலியுறுத்துகிறது.. உங்க இறைவன் மனிதனை, 

ஒரு முழுமை பெற்ற, அழகிய படைப்பாக படைத்து இருக்கிறான் என்று உங்கள் குர்ஆன் குறிப்பிடுகிறது.. அப்படியெனில்  உங்க இறைவன் ஆண் சிசுவை படைக்கும் போதே, ஆணுறுப்பின் முன் தோலை  ( Prepuce/ Foreskin) நீக்கிய படியே அதாவது சுன்னத் செய்யப்பட்ட நிலையில் படைத்து இருக்கலாமே..  ஒரு உறுப்பை படைத்து விட்டு, பின்பு அதை நீக்க பணிப்பதில் லாஜிக் இல்லையே"

என்று கேட்டார்.

அதற்கு நான்  " நல்ல பகுப்பாய்வுடன் கேட்கப்பட்ட கேள்வி.. இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் காரணம் உண்டு.. பொதுவாக மருத்துவ அறிவியல்படி, ஆணுறுப்பின் முன்தோல்  ( Foreskin or Prepuce), பிறந்தவுடன் தேவையற்ற ஒரு பகுதி ...  ஆனால் கருவியல் பார்வையில், ஆண் சிசு கருவில் வளரும் வரை, பிறக்கும் வரை Foreskin மிக மிக அவசியமான ஒன்று  அது இன்றி ஆணுறுப்பு மற்றும்  சிறுநீர் பாதை வளர்ச்சி  ( urogenital Embyrogenesis) முழுமை பெறாது...

 ஆண் சிசுக்கு கருவில் ஆணுறுப்பு உருவாகும் போது, ஆணுறுப்பின் முன் பகுதி ( Glans Penis) மற்றும் முன் தோல் ( Fore Skin/ Prepuce ) ஒன்றுடன் ஒன்று ஒட்டி பிணைந்து, சேர்ந்து ஒட்டியே உருவாகிறது.. அப்படி இரண்டும் இப்படி , சேர்ந்து உருவானால் தான், சிறுநீர் பாதையின் முன் பகுதி ( urethra) குறைவின்றி சரிவர உருவாகும்.. இல்லையேல் , சிறுநீர் பாதை உருவாவதில் பிறவிக் குறைபாடு ( Congenital Anomaly) வரலாம்..

 இப்படி கருவில் 14 வது வாரத்தில், சிறுநீர் பாதை (Urethra) உருவான பின்பு, அதன் வளர்ச்சிக்கு மேலும் துணை செய்ய , ஒட்டி இருக்கும் இரண்டும் ( Glans Penis & Prepuce) ஒன்றை விட்டு ஒன்று,  பிரிந்து விட வேண்டும்..பிரிந்து விடும் ...

இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தாலும்,முன்தோல் ( Foreskin / Prepuce ), ஆனது ஆணுறுப்பின் முன் பகுதி ( Glans Penis) மேல் மூடி மறைத்து விடும்.. ஆனால் ஒட்டி இருக்காது.. அப்படி ஒரு வேளை முன்தோல் ( Prepuce/ foreskin) , ஆணுறுப்பின் முன்பகுதியை ( Glans Penis) மூடாமல் இருந்தால், அதிக உணர்திறன் கொண்ட ,ஆணுறுப்பின் முன் பகுதி ( Glans Penis), கருவில் உள்ள பனி நீர் ( Amniotic Fluid) உடன் பல மாதம் நேரடி தொடர்பில் இருக்கும் போது, அதற்கு இரசாயன ரீதியான ( Chemical Damage) பாதிப்பு வரலாம் ..

 இந்த இரசாயன பாதிப்பை தவிர்க்க, தான் கருவில் இருக்கும் போது, Foreskin என்னும் முன்தோல் , Glans penis ஐ மறைத்து, மூடி வைத்துள்ளது.. இது தான் பிறக்கும் போதே சுன்னத் செய்யாமல் பிறக்கக் காரணம்..பிறந்த உடன், பனி நீர் மூலம் ஏற்படும் இரசாயன பாதிப்பு பிரச்சினை இல்லை.. ஆணுறுப்பின் முன் தோல் ( Prepuce/ Foreskin) தேவை இல்லாத ஆணி.. அதனால் அதை சுன்னத் மூலம், நீக்கி விடுகிறோம்.."

நண்பர்  " அப்ப Appendix கூட தேவையற்ற ஒரு ஆணி ,sorry, உறுப்பு ( Vestigial organ)..அதை நீக்கச் சொல்லி உங்க இறைவன்..ஏன் சொல்லவில்லை?

 நான்:   " நீ என்ன கேட்க வருறான்னு தெரியுது..  முதலில் கேட்டது லாஜிக் ஆன கேள்வி.. இப்போது கேட்பது குதர்க்கமானது.. இருந்தாலும்..அதையும் விளக்குறேன்..ஆணுறுப்பின் முன்தோல், உடலுக்கு வெளியில் உள்ள பகுதி..அதை யார் வேண்டுமானாலும், , எங்கேயும் வைத்து கூட, மிக எளிதாக நீக்கி விடலாம்..

 ஆனால் Appendix வயிற்றினுள் உள்ளது..அதை நீக்க,  மயக்க மருந்து சிகிச்சை அறுவை அரங்கம், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை அனுமதி அதிக பண செலவு  தேவை..

இறைவன் என்றும் தன் படைப்பை, தங்கள் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டான்..

Appendix நீக்கம் ,சுன்னத் போல கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டால், ஒவ்வொரு ஆண் குழந்தை பிரசவத்திற்கு பின்பும், இந்த காலத்தில், குறைந்தது 40000 இந்திய ரூபாய் செலவு ஆகும்...பின்பு மற்ற அலைச்சல், மருத்துவமனை அனுமதி மனஉளைச்சல் வேற..இப்ப புரியுதா மவனே.."

நண்பன்: " தப்பா எடுக்காதே..சும்மா சீண்ட தான் கேட்டேன்..நல்ல அறிவியல் சார்ந்த விளக்கம்.. பலரிடம் இதே சந்தேகம் கேட்டேன். எல்லோருமே  ' எங்க நபி ஒன்றை வலியுறுத்தினா ,அதில் ஒரு நன்மை இருக்காமல் இல்லை " என்று மட்டும் சொல்லி முடித்து விடுவார்கள்.. என்றார்

Dr D Mohamed Kizhar

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account