இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?
கேள்வி: கிறித்துவத்தைப் போன்று, இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாத காரணத்தினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சேவைக்கு அவசியம் இல்லாததினாலும், ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவத்தை நோக்கிச் செல்கின்றார்களாமே?
சாஜிதா ஹுஸைன், சென்னை.
பதில்: இஸ்லாம் மார்க்கம் சேவைகள் புரிவதை வலியுறுத்தினாலும் கூட முஸ்லிம்கள் பின் தங்கியே உள்ளனர் என்பது உண்மை தான்.
இது போன்ற சேவைகள் செய்வதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படுகிறது. கிறித்தவ நாடுகள் அதிகமாக உதவுவது போல் முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லை. இங்குள்ள முஸ்லிம்களுக்கும் வசதிகள் இல்லை. இதனால் இது போன்ற பணிகளில் குறைவாகவே முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர்.
மேலும், இது போன்ற சேவைகளைக் காட்டி அறியாத மக்களை மதத்தின் பால் ஈர்ப்பதை இஸ்லாம் ஆர்வமூட்டவில்லை. கொள்கையை விளங்கி இணைவதையே இஸ்லாம் விரும்புகிறது. கிறித்தவ மிஷினரிகளுக்கு இத்தகைய காரியங்கள் மூலம் மதமாற்றம் செய்ய அனுமதி உள்ளது.
அர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க
இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode