Sidebar

18
Fri, Oct
11 New Articles

சுன்னத் செய்வதன் நன்மைகள்!

இஸ்லாமின் கொள்கை/ சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சுன்னத் செய்வதன் நன்மைகள்!

உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள்

டாக்டர். த. முஹம்மது கிஸார்

குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான American Academy Of Pediatrics என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாடமி, கத்னா செய்வதால் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளன என்று 2012 இல் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது.

சுன்னத செய்வதால் நுண்கிருமிகள் ஆண்குறியின் முன்பக்கம் சேர்வதைத் தடுக்க முடியும். ஆண்குறியின் முன்பு சேரும் அழுக்கை, சாதாரணமாக நீக்கி கத்னா  செய்த ஆணுறுப்பைப்  பராமரிக்க முடியும்.

சிறுநீர்ப் பாதையில் தொற்றுநோய் வரும் வாய்ப்பு, சுன்னத் செய்த ஆண்களுக்கு மிகமிகக் குறைவு.

சிறுவர்களுக்கு phimosis  என்னும் ஆணுறுப்பின் முன் தோல் மிக இறுக்கமாக இருந்து அதனால் சிறுநீர் சிறிது தங்கிவிடும். இந்த நிலை கத்னா  செய்த ஆண்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த phimosis காரணமாக சிறுநீர் பாதையில் தொற்று வரும் ஆபத்து அதிகம். சில சமயம் சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தோற்று, கிட்னி பாதிப்பை ஏற்படுத்தலாம் .இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு வருவது கிடையாது.

கத்னா செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வும், CDC math model என்னும் அமெரிக்க ஆய்வும் உறுதிபடுத்துகிறது.

ஆணுறுப்பில் வரும் பிரச்சினைகள் குறைவு:

கத்னா செய்யப்படாத ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுக்க முடியாமல் போகும் நிலையால் ஆண்குறியில் அழற்சி வரலாம். தோலின் கீழ் மாவு போன்ற அழுக்கு சேர்ந்து, கட்டி போன்று உருவாகலாம்.

ஆண்குறி கேன்சர் அறவே வாராது,

கத்னா  செய்த ஆண்களுக்கு ஆண்குறியில் கேன்சர் வரவே வராது.

கத்னா செய்த ஆண்களின் மனைவியருக்கு cervical cancer என்னும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

காரணம் கத்னா செய்த ஆண்களுக்கு HPV என்னும் Human Pappiloma Virus தொற்று வரும் வாய்ப்பே இல்லை .இந்த HPV என்னும் வைரஸ் கிருமி தான் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் ஏற்படுத்துகிறது. மேலும் கத்னா செய்த ஆண்குறியில், smegma என்னும் மாவு போன்ற அழுக்கு சேராததால், ஆண்குறியில் வரும் நோய்த் தாக்கம் குறைவு.

இதை இன்னொரு ஆப்ரிக்கன் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

prostate cancer என்னும் ஆண் இனப்பெருக்க உள் உறுப்பில் வரும் புற்று நோய், கத்னா செய்த ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவு என்று இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு புதிய ஆய்வு இவ்வாறு உறுதிப்படுத்துகிறது : கத்னா  செய்வதால், ஆணுறுப்பில் உள்ள பாக்டீரியா ecocsystem எனப்படும் உயிர் பொருட்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் முறை, அதிகளவில் மாறுகிறது. நோயை உருவாக்கும் பாக்டீரியா எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது அதிலும் குறிப்பாக ஆக்ஸிஜென் இல்லாமல் வாழும் பாக்டீரியாவான anaerobic பாக்டீரியா வெகுவாகக் குறைகிறது. அதனால் ஆணுறுப்பில் வரும் நோய்த் தொற்று குறைகிறது

(தகவல் Journal mBio ஏப்ரல் 16, 2012)

இதே தகவலை இன்னொரு ஆய்வும் உறுதி செய்கிறது. அமெரிக்க ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளர் Lance Price, ஒரு பாறையைப் புரட்டி போட்டு ecosystem மாற்றுவதைப் போல் கத்னாவினால் ஆண்குறி பக்டீரியா ecosystem மாற்றம் அடைகிறது என்கிறார் (From an ecological perspective, it s like rolling back a rock and seeing the ecosystem change. ).

இது  போல் உகாண்டா நாட்டில் கத்னா செய்த ஆண்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், price மற்றும் கூட்டாளிகள் இவ்வாறு கண்டுபிடித்து உள்ளனர். கத்னாவினால் நீக்கப்பட்ட தோலின் கீழ் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளின் biodiversity மிக குறைவாக உள்ளது, மிக நல்ல விஷயம். காரணம் கத்னாவினால் நீக்கப்படும் நுண்ணியிரிகள் தான் ஆண்குறியில் அழற்சியை ஏற்படுத்துகிறது.

உலகிலேயே குழந்தை மருத்துவத்திற்கான மிகப் பெரிய அமைப்பான AAP, கடந்த 13 ஆண்டுகாலமாக ஏற்றுக் கொள்ள மறுத்து வந்த, கத்னாவினால் ஏற்படும் அதிக நன்மைகளை, கடந்த 2012 ஆண்டு பல ஆய்வுகளுக்குப் பின் உறுதிப்படுத்தி ஒத்துக் கொண்டுள்ளது.

உலகிலேயே கத்னாவால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு அதிகம் ஆப்ரிக்காவில் தான் செய்யப்பட்டது.

2005 இல் தென் ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கத்னா செய்யப்பட்ட ஆண், HIV positive என்னும் எய்ட்ஸ் நோய் உள்ள பெண்களோடு உடலுறவு கொண்டபோது, அவர்களுக்கு அந்தப் பெண்களில் இருந்து வரும் HIV வினால் ஏற்படும் AIDS 63 சதவிகிதம் குறைவு, இதனால் கத்னா செய்த ஆண்கள் பாதுகாப்பாக எந்தப் பெண்ணுடனும் தகாத உடலுறவு கொள்ளலாம் என்று கருதக் கூடாது. இது ஒரு ஆய்வின் அறிக்கை தான். இஸ்லாம் விபச்சாரத்தை அறவே தடுக்கிறது.

கத்னாவிற்கு எதிராக, இதன் எதிர்ப்பாளர்களால் வைக்கப்பட்ட ஒரு வாதம், கத்னா  செய்த ஆண்களுக்கு உடலுறவின் போது அதிக உடலுறவு சுகம் கிடைக்காது என்பது தான். ஆனால் இந்த வாதத்தையும் பல ஆய்வுகள் பொய் என்று உறுதி செய்து விட்டன.

இன்னொரு விஷயம் கத்னா செய்யப்பட்ட ஆண்களின் ஆணுறுப்பின் நுனிப்பகுதி, சிறு வயதில் இருந்தே, வேஷ்டி, ஜட்டி அல்லது பேன்ட் போன்றவற்றில் உரசி உரசி பழக்கப்பட்டதால், உடலுறவின் போது பெண்ணுறுப்பில், ஆணுறுப்பை வைத்த உடன் அதிக உணர்ச்சி கூச்சத்தால் ஏற்படும் premature ejaculation எனப்படும் முன்கூட்டியே விந்து வெளியாதல் என்னும் நிகழ்வு, கத்னா செய்த ஆண்ககளுக்கு ஏற்படாது. இதனால் அவர்களின் மனைவியருக்கு உடலுறவில் ஏற்படும் உச்சகட்டத்தை அடைய முடியாமல் போகும் ஏமாற்றம் ஏற்படாது.

16.05.2013. 9:23 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account