Sidebar

13
Mon, May
1 New Articles

ஈ விழுந்த பானத்தை குடிக்கலாமா

மருத்துவம் சுகாதாரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தேநீரில் ஈ விழுந்தால் அதே டீயில் மூழ்க வைத்து குடிக்க சொல்லும் ஹதீஸின் நிலை என்ன? 30/05/2021 


ஈ விழுந்த உணவை சாப்பிடலாமா.? 

ஈ விழுந்த உணவை சாப்பிடுவது நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் , இது குறித்து ஆய்வாளர்கள் மருத்துவர்கள் தரும் தகவல்களை பாருங்கள்.

1. ஈக்களால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து, அரசு பொது நல மருத்துவர் எம்.ஆனந்த் பிரதாப் கூறியதாவது: ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம், ஆபத்தான பாக்டீரியாக்களை, ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்திற்கு பரப்புகின்றன.அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள், உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்த கிருமிகளால், சீதபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, 'டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும்.இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, உணவுகள், தண்ணீர் ஆகியவற்றில் ஈக்கள் உட்காராமல் பார்த்து கொள்ள வேண்டும்.... இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் : தினமலர் நாளிதழ் ஜுன்.10/2019

2.. ஈக்களின் ஒவ்வொரு கால்களிலும் வட்டமான பிசின் போன்ற பசைப் பொருட்கள் காணப்படுகின்றன . கழிவுகளில் அமரும் போது அந்த பிசின்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும். அவை மீண்டும் மனிதன் மீதோ உணவின் மீதோ உட்காரும் போது , அந்த பாக்டீரியாக்கள் எளிதில் உணவில் இறங்கி மிக எளிதாக மனித உடலுக்குள் சென்று , வயிற்றுப் போக்கு  குடற்புழு உடல் நமைச்சல் தோல் நமைச்சல் வயிற்றுப் புண் டைபாய்டு தொற்றுக் கிருமி காய்ச்சல் எனப் பல்வேறு வகை நோய்களுக்கு வாயில் படியாக உள்ளது.

தகவல் : திணமனி நாளிதழ் . மே -19/2015

3. ஈக்களின் கால்கள் மற்றும் இறக்கைகளில் உள்ள பாக்டீரியா கிருமிகள் உணவை பாக்டீரியாவின் கூடாரமாகவே மாற்றும், ஈக்களின் வெளிப்புற உடற்பகுதியில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் படிந்திருக்கும். ஒரு ஈ அது பறந்து செல்கின்ற பாதையில் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர் கிருமிகளை பரப்பிக் கொண்டே இருக்கும் என நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தகவல் : புதிய தலைமுறை  ஆகஸ்ட்.17/2020.

4. ஈக்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுநல மருத்துவர் சிவராமக்கண்ணனிடம் கேட்டோம். ``ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம் ஆபத்தான பாக்டீரியாக்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரப்புகின்றன. கழிவுகள், குப்பைகள், சாக்கடை, அழுகியப் பொருள்கள் என ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரும். அப்படி நாம் உண்ணும் உணவுகள் மீதும் உட்காரும். அப்போது அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகளால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காயங்கள் மூலம் ரத்தத்தில் விஷம் பரவுதல், நிமோனியா, டைஃபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன

தகவல் : ஆனந்த விகடன் . மே.18/2018

5.       ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும் - பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்ட் பிரையண்ட். ஜர்னல் சைண்டிபிக் இதழில் . 

தகவல் : பிபிசி நவம்பர்.17/2017

கழிவுகளில் உட்காரும் போது ,  ஈக்களின் கால்களில் இருபது லட்சம் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களின் ஆய்வுகளில் ஈக்களின் இறகுகளிலும் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் உள்ளது என்பதை அறிய முடிகிறது . இப்போது கூறுங்கள் நபி ஸல் அவர்கள் ஈக்களின் ஒரு இறகில் நோய் கிருமியும் மற்றொரு இறகில் நிவாரணமும் உள்ளது என்று கூறியிருப்பார்களா. ? ஈயை மூன்று முறை உணவில் மூழ்க வைத்து சாப்பிடுங்கள் என்று கூறி இருப்பார்களா.? * ஒரு உணவில் ஈ அமர்ந்தால் எவ்வளவு பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும் என்பதை வீடியோ காணுங்கள் .

வீடியோ லிங்க் - https://youtu.be/GHHFJDkk18Q 

https://vimeo.com/557712457

 يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ  

(முஹம்மது நபி ஸல்) இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மை இல்லாத அசுத்தமானவற்றை அவர்களுக்கு தடை செய்கிறார். அல்குர்ஆன் : 7:157.

وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ ﴿88﴾

அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்.! அல்குர்ஆன் : 5:88.

[يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ﴿172﴾

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.! அல்குர்ஆன் : 2 :172. 

 وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ 

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.! அல்குர்ஆன் :2 :195.

இதை பதிவிறக்கம் செய்ய
onlinepj

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account