பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்?
கேள்வி
உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை. உதாரணமாக நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாக கப்பல்.
பதில் :
நூஹ் நபி காலத்தில் கப்பல் மூலம் நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த அதிசய நிகழ்வுக்குச் சான்றாக அமைந்துள்ளது.
இது குறித்து கீழ்க்கண்ட ஆக்கத்தில் முழு விபரம் காணலாம்
https://www.onlinepj.in/222-joodi_malai_meethu_kappal/
இது போல் மற்ற நபிமார்களின் வரலாற்றுக்கு எந்த அடையாளமும் இல்லையே என்று கேட்கிறீர்கள்.
மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான்.
நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தது போல் இப்ராஹீம் இஸ்மாயீல் நபியின் தாகம் தீர்க்க ஜம்ஜம் ஊற்றை அல்லாஹ் அடையாளமாக விட்டுவைத்துள்ளான்.
ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் வழங்கிய அற்புதங்களை மெய்ப்பிக்க ஒரு அத்தாட்சியை விட்டு வைக்க அல்லாஹ் நாடினால் விட்டு வைப்பான். இல்லாவிட்டால் எந்த அடையாளமும் இல்லாமல் ஆக்கி விடுவான்.
நமக்கு சில நபிமார்கள் பற்றிய விபரம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அனைத்து நபிமார்கள் பற்றிய விபரம் சொல்லவில்லை. இது அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் உள்ளதாகும்
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் இழப்பை அடைவார்கள்.
திருக்குர்ஆன் 40 : 78
எனவே அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள ஒரு விஷயத்தை அல்லாஹ் ஏன் செய்யவில்லை என்று கேட்க முடியாது.
அவன் நினைத்ததைச் செய்து முடிப்பவன்.
திருக்குர்ஆன் 85 : 16
அவன் செய்வது பற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 21 : 23
20.02.2012. 12:27 PM
பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode