அபூபக்ர் (ரலி) யுடன் பாத்திமா (ரலி) க்கு சண்டை என்பது உண்மையா?
அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பாத்திமா (ரலி) சண்டை போட்டதாகவும், தன்னுடைய ஜனாஸாவில் அபூபக்ர் (ரலி) கலந்து கொள்ளக் கூடாது என்று பாத்திமா (ரலி) கூறியதாகவும் சொல்லப்படுவது உண்மையா?
ஜாகிர் ஹுஸைன் ஜித்தா
பதில்
ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும், அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசவேயில்லை என்பது ஆதாரப்பூர்வமான செய்தி தான்.
ஆனால் அபூபக்ர் (ரலி) தன்னுடைய ஜனாஸாவில் கலந்து கொள்ளக் கூடாது என ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும், மதீனாவில் இருந்த, அவர்கள் தருமமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். ஃபாத்திமாவுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள்.
நூல் புகாரி 3093
19.03.2011. 23:21 PM
அபூபக்ர் (ரலி) யுடன் பாத்திமா (ரலி) க்கு சண்டை என்பது உண்மையா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode