மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்?
90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதா?
எஸ். அப்துல் காதிர்
நீங்கள் குறிப்பிடுவது போல் எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது.
கணவன் மனைவியர் பிரிந்திருப்பது அவர்களின் தேவை சம்மந்தப்பட்ட விஷயமாகும்.
எந்த அளவுக்கு பிரிந்து இருந்தால் கணவனோ மனைவியோ தவறிவிட மாட்டார்களோ அந்த அளவுக்கு பிரிந்து இருக்கலாம். தவறிழைக்கும் அளவுக்கு பிரிந்து இருக்கக் கூடாது.
அனைவருக்கும் பொதுவான அளவுகோல் இதற்கு இல்லை. ஆட்களைப் பொருத்தும் வயதைப் பொருத்தும் இது வித்தியாசப்படும்.
இளமையில் தேவைப்படும் அளவுக்கு முதுமையில் தேவைப்படாமல் போகலாம். முதுமையில் அறவே தேவை இல்லாமல் போகலாம். இப்படி இருந்தால் அவர்கள் அவசியத் தேவைகளுக்காக அதிக நாட்கள் பிரிந்திருப்பது குற்றமில்லை.
இளைஞர்களாக இருப்பவர்கள் திருமணம் முடித்த சில நாட்களில் பணம் திரட்ட வெளிநாடு செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தாம்பத்திய ஆசை பீறிட்டு எழும். அவர்களின் மனைவியரும் அந்த நிலையில் இருப்பார்கள். இது போன்றவர்கள் வழிதவறாமல் இருக்கும் காலத்துக்கு பிரிந்து இருக்கலாம். இதை ஆண் மட்டும் தீர்மானிக்க முடியாது. மனைவியுடனும் கலந்து பேசி இந்தக் காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். மனம் விட்டுப் பேசுவதற்கு வெட்கப்படக் கூடாது.
திருக்குர்ஆன் விளக்கம் 65 வது குறிப்பைப் பார்க்கவும்
மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode