Sidebar

18
Wed, Sep
1 New Articles

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

இத்தா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன?

அக்பர்

பதில் :

கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.

திருக்குர்ஆன் 65:4

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காலக் கெடுவிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.

கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.

பின்வரும் நபிமொழியிலிருந்தும் இச்சட்டத்தை அறியலாம்.

4910 حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ فَقَالَ أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرُ الْأَجَلَيْنِ قُلْتُ أَنَا وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ قَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي يَعْنِي أَبَا سَلَمَةَ فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلَامَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةِ وَهِيَ حُبْلَى فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً فَخُطِبَتْ فَأَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا رواه البخاري

அபூ ஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின் பிரசவித்த ஒரு பெண்ணைப் பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்கிடுங்கள் என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (நான்கு மாதம் பத்து நாட்கள், நாற்பது நாட்கள் ஆகிய) இரு தவணைகளில் எது அதிகமோ அது தான் இத்தா (அதாவது நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா) என்று கூறினார்கள்.

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும் (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் குரைப் என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் இறந்து விட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு இத்தா பிரசவம் வரையில் தான்) என்று சொல்லி அனுப்பினார்கள்.

நூல் : புகாரி 4909

கர்ப்பம் உறுதியாகி விட்டால் முதல் கணவரால் உருவான குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தான் அவள் இன்னொரு கணவனை மணக்க வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account