உடலுறவுக்கு தடுக்கப்பட்ட நாட்கள் உண்டா?
கேள்வி : மனைவியிடம் உடலுறவு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம், தடைசெய்யப்பட்ட நேரம் என்று மார்க்கத்தில் உள்ளதா? அப்படி உள்ளதாக ஒரு நூலில் படித்தேன்.
ஃபைசல் துபைபதில் : குறிப்பிட்ட நேரத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்றோ, உடலுறவு கொள்வது கூடாது என்றோ மார்க்கம் கூறவில்லை.
பிறமதங்களில் தான் இதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பார்கள். இஸ்லாத்தில் இந்த மூடநம்பிக்கைக்கு அனுமதியே இல்லை. எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம்.
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டின் நேரத்திலும், நோன்பு வைப்பவர் நோன்பு வைத்திருக்கும் நேரத்திலும் இஹ்ராமின் போதும் உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.
இதைத் தவிர எந்த நாளிலும், எந்த நேரத்திலும் உடலுறவு கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நூலில் அப்படி படித்திருந்தாலும் அது கட்டுக்கதையாகத் தான் இருக்கும். அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதாக இருக்காது.
24.10.2011. 12:50 PM
உடலுறவுக்கு தடுக்கப்பட்ட நாட்கள் உண்டா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode