தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?
தாரிக் ரஹ்மான்
பதில் :
தொப்பி அணிவதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பற்றி நமது இணையதளத்தில் விரிவாக பதில் தரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒருவர் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் தொப்பி அணிந்தால் அதைத் தவறு என்று கூற முடியாது. தொப்பி அணியும் எவரையும் நாம் தடுப்பதில்லை. எனவே தான் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிகளில் நீங்கள் தொப்பி அணிந்து தொழுதால் அவர்கள் உங்களைத் தடுக்க மாட்டார்கள்.
இதே போன்று தொப்பி அணியாத ஒருவரை தொப்பி அணியுமாறு வற்புறுத்துவதும் கூடாது.
ஒரு பள்ளியில் இமாம் உட்பட யாருமே தொப்பி அணியாமல் தொழுதால் இதை மார்க்கம் தடை செய்யவில்லை என்கிற போது இதை நாம் விமர்சனம் செய்யக் கூடாது.
தொப்பி அணிவது ஹராம் என்ற நம்பிக்கை நமது ஜமாஅத்திடம் கிடையாது. ஒருவர் தன் விருப்பத்தின் அடிப்படையில் வேட்டியை மட்டும் அணிகிறார். ஃபேண்ட் அணிவதில்லை. இதனால் அவர் ஃபேண்ட் அணிவதை ஹராமாக்கிக் கொண்டார் என்று கூற மாட்டோம். அது போன்றே தொப்பி அணியாமல் இருப்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode