Sidebar

22
Sun, Dec
38 New Articles

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன?

ஆடை அலங்காரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன?

ஆடைகளின் நிறங்களைப் பொருத்தவரை ஆண்களுக்கு காவி நிறம் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து எல்லா நிறங்களிலும் ஆண்கள் ஆடை அணியலாம்.

பெண்களுக்கு காவி உட்பட எல்லா நிற ஆடைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த ஒரு நிற ஆடையும் தடுக்கப்படவில்லை.

இதற்கான ஆதாரங்கள்:

மஞ்சள் ஆடை

صحيح البخاري 

166 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ: لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا، قَالَ: وَمَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ: رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلَّا اليَمَانِيَّيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ. قَالَ عَبْدُ اللَّهِ: أَمَّا الأَرْكَانُ: فَإِنِّي لَمْ «أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَسُّ إِلَّا اليَمَانِيَّيْنِ»، وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ: فَإِنِّي «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النَّعْلَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا»، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ: فَإِنِّي «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا»، وَأَمَّا الإِهْلاَلُ: فَإِنِّي «لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ»

அபூஅப்திர் ரஹ்மானே! நீங்கள் நான்கு காரியங்களைச் செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள் நண்பர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இப்னு ஜுரைஜே, அவை எவை? என்று கேட்டார்கள். நான், (தவாஃபின் போது கஅபாவின் மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ருக்னுல் இராக்கீ ஆகிய இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடுவதைக் கண்டேன். மேலும் முடி களையப்பட்ட தோல் செருப்பையே நீங்கள் அணிவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் நிறச் சாயம் பூசுவதை நான் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருக்கும் போது மக்கள் (துல்ஹஜ்) பிறை கண்டவுடன் இஹ்ராம் கட்டுவதைப் போன்று இஹ்ராம் கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள் வரை இருப்பதைக் கண்டேன் (இவை தாம் அந்த நான்கு காரியங்கள்) என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ருக்னுல் இராக்கீ ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை நான் காணவில்லை. முடி களையப்பட்ட செருப்புகளைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத செருப்புகளை அணிவதையும் அதனுடன் உளூ செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் ஆடையில்) அதன் மூலம் தான் சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அதைக் கொண்டு சாயமிடுவதை நான் விரும்புகிறேன். இஹ்ராம் கட்டுவதைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் (துல்ஹஜ் எட்டாம் நாள்) வரை இஹ்ராம் கட்டுவதை நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர் : உபைத் பின் ஜுரைஜ்

நூல் புகாரி 166

சிவப்பு ஆடை

صحيح البخاري

376 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلًا أَخَذَ وَضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ ذَاكَ الوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ، ثُمَّ رَأَيْتُ بِلاَلًا أَخَذَ عَنَزَةً، فَرَكَزَهَا وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ، مُشَمِّرًا  صَلَّى إِلَى العَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنِ يَدَيِ العَنَزَةِ»

376 அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ-ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின் போது அப்தஹ்' எனுமிடத்தில்) தோலினாலான சிவப்பு நிற கூடாரத்தில் (தங்கியிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்துவிட்டு எஞ்சிய தண்ணீரை பிலால் (ரலி) அவர்கள் எடுத்து வருவதைக் கண்டேன். மேலும், அந்த எஞ்சிய தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிது கிடைத்த ஒருவர் அதைத் (தமது உடம்பில்) தடவிக் கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை எடுத்து வந்து அதை ஊன்றுவதை நான் கண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற மேலாடை மற்றும் கீழாடை அணிந்து  (தமது கணைக்கால்கள் தெரியுமளவிற்கு) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்து (தடுப்பாக வைக்கப்பட்டிருந்த) அந்த கைத்தடியை நோக்கி மக்களுடன் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அந்த கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால் நடைகளும் கடந்து செல்வதையும் நான் பார்த்தேன்.

நூல் : புகாரி 376

கறுப்பு ஆடை

صحيح البخاري 

5823 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ سَعِيدِ بْنِ فُلاَنٍ هُوَ عَمْرُو بْنُ سَعِيدِ بْنِ العَاصِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ صَغِيرَةٌ، فَقَالَ: «مَنْ تَرَوْنَ أَنْ نَكْسُوَ هَذِهِ» فَسَكَتَ القَوْمُ، قَالَ: «ائْتُونِي بِأُمِّ خَالِدٍ» فَأُتِيَ بِهَا تُحْمَلُ، فَأَخَذَ الخَمِيصَةَ بِيَدِهِ فَأَلْبَسَهَا، وَقَالَ: «أَبْلِي وَأَخْلِقِي» وَكَانَ فِيهَا عَلَمٌ أَخْضَرُ أَوْ أَصْفَرُ، فَقَالَ: «يَا أُمَّ خَالِدٍ، هَذَا سَنَاهْ» وَسَنَاهْ بِالحَبَشِيَّةِ حَسَنٌ

உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்று கேட்டார்கள். மக்கள் (பதில் கூறாமல்) மௌனமாக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டுவரப்பட்டேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், (இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு என்று கூறிவிட்டு, உம்மு காலிதே! இது சனாஹ்' (அழகாயிருக்கிறது) என்று சொன்னார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சனாஹ்' எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும்.

அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நூல் : புகாரி 5823

صحيح البخاري 

5824 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: " لَمَّا وَلَدَتْ أُمُّ سُلَيْمٍ، قَالَتْ لِي: يَا أَنَسُ، انْظُرْ هَذَا الغُلاَمَ، فَلاَ يُصِيبَنَّ شَيْئًا حَتَّى تَغْدُوَ بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَنِّكُهُ، فَغَدَوْتُ بِهِ، فَإِذَا هُوَ فِي حَائِطٍ، وَعَلَيْهِ خَمِيصَةٌ حُرَيْثِيَّةٌ، وَهُوَ يَسِمُ الظَّهْرَ الَّذِي قَدِمَ عَلَيْهِ فِي الفَتْحِ "

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்த போது என்னிடம் அவர்கள் அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனது வாயி-டுவதற்காக இவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும் வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம் என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ஹுரைஸ்' (அல்லது ஜவ்ன்') குலத்தார் தயாரித்த கறுப்பு நிறக் கம்பளி மேலங்கியை அணிந்து கொண்டு மக்கா வெற்றியின் போது தம்மிடம் வந்த தமது வாகன(ஒட்டக)த்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நூல் : புகாரி 5824

பச்சை ஆடை

صحيح البخاري 

5825 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ: أَنَّ رِفَاعَةَ طَلَّقَ امْرَأَتَهُ، فَتَزَوَّجَهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ القُرَظِيُّ، قَالَتْ عَائِشَةُ: وَعَلَيْهَا خِمَارٌ أَخْضَرُ، فَشَكَتْ إِلَيْهَا وَأَرَتْهَا خُضْرَةً بِجِلْدِهَا، فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنِّسَاءُ يَنْصُرُ بَعْضُهُنَّ بَعْضًا، قَالَتْ عَائِشَةُ: مَا رَأَيْتُ مِثْلَ مَا يَلْقَى المُؤْمِنَاتُ؟ لَجِلْدُهَا أَشَدُّ خُضْرَةً مِنْ ثَوْبِهَا. قَالَ: وَسَمِعَ أَنَّهَا قَدْ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ وَمَعَهُ ابْنَانِ لَهُ مِنْ غَيْرِهَا، قَالَتْ: وَاللَّهِ مَا لِي إِلَيْهِ مِنْ ذَنْبٍ، إِلَّا أَنَّ مَا مَعَهُ لَيْسَ بِأَغْنَى عَنِّي مِنْ هَذِهِ، وَأَخَذَتْ هُدْبَةً مِنْ ثَوْبِهَا، فَقَالَ: كَذَبَتْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي لَأَنْفُضُهَا نَفْضَ الأَدِيمِ، وَلَكِنَّهَا نَاشِزٌ، تُرِيدُ رِفَاعَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَإِنْ كَانَ ذَلِكِ لَمْ تَحِلِّي لَهُ، أَوْ: لَمْ تَصْلُحِي لَهُ حَتَّى يَذُوقَ مِنْ عُسَيْلَتِكِ " قَالَ: وَأَبْصَرَ مَعَهُ ابْنَيْنِ لَهُ، فَقَالَ: «بَنُوكَ هَؤُلاَءِ» قَالَ: نَعَمْ، قَالَ: «هَذَا الَّذِي تَزْعُمِينَ مَا تَزْعُمِينَ، فَوَاللَّهِ، لَهُمْ أَشْبَهُ بِهِ مِنَ الغُرَابِ بِالْغُرَابِ»

இக்ரிமா அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்து கொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். ........... சுருக்கம்

நூல் புகாரி 5825

வெள்ளை ஆடை

صحيح البخاري 

5826 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الحَنْظَلِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ: «رَأَيْتُ بِشِمَالِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَمِينِهِ رَجُلَيْنِ، عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ يَوْمَ أُحُدٍ، مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ»

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் பின்பும் அவர்களை நான் பார்க்கவில்லை.

நூல் : புகாரி 5826

صحيح البخاري 
5827 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنِ الحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، حَدَّثَهُ أَنَّ أَبَا الأَسْوَدِ الدُّؤَلِيَّ حَدَّثَهُ: أَنَّ أَبَا ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبٌ أَبْيَضُ، وَهُوَ نَائِمٌ، ثُمَّ أَتَيْتُهُ وَقَدِ اسْتَيْقَظَ، فَقَالَ: " مَا مِنْ عَبْدٍ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الجَنَّةَ " قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ عَلَى رَغْمِ أَنْفِ أَبِي ذَرٍّ» وَكَانَ أَبُو ذَرٍّ إِذَا حَدَّثَ بِهَذَا قَالَ: وَإِنْ رَغِمَ أَنْفُ أَبِي ذَرٍّ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: هَذَا عِنْدَ المَوْتِ، أَوْ قَبْلَهُ إِذَا تَابَ وَنَدِمَ، وَقَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، غُفِرَ لَهُ

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே) என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 5827

காவி ஆடை

குங்குமப்பூ சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளைஅதாவது காவி ஆடைகளை ஆண்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் பெண்களுக்கு அனுமதித்துள்ளனர்.

صحيح مسلم

27 - (2077) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، أَنَّ ابْنَ مَعْدَانَ، أَخْبَرَهُ، أَنَّ جُبَيْرَ بْنَ نُفَيْرٍ، أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، أَخْبَرَهُ، قَالَ: رَأَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا»،

என் மீது குங்குமச்சாயம் தோய்த்த (காவி நிறம்) இரு ஆடைகள் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இது இறை மறுப்பாளர்களின் ஆடை; இதை அணியாதீர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ருபின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

مسند أحمد

6852 - حَدَّثَنَا أَبُو مُغِيرَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ، حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: هَبَطْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثَنِيَّةِ أَذَاخِرَ، قَالَ: فَنَظَرَ إِلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا عَلَيَّ رَيْطَةٌ مُضَرَّجَةٌ بِعُصْفُرٍ، فَقَالَ: " مَا هَذِهِ؟ "، فَعَرَفْتُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَرِهَهَا، فَأَتَيْتُ أَهْلِي وَهُمْ يَسْجُرُونَ تَنُّورَهُمْ، فَلَفَفْتُهَا، ثُمَّ أَلْقَيْتُهَا فِيهِ، ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " مَا فَعَلَتِ الرَّيْطَةُ؟ " قَالَ: قُلْتُ: قَدْ عَرَفْتُ مَا كَرِهْتَ مِنْهَا، فَأَتَيْتُ أَهْلِي وَهُمْ يَسْجُرُونَ تَنُّورَهُمْ فَأَلْقَيْتُهَا فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَهَلَّا كَسَوْتَهَا بَعْضَ أَهْلِكَ "

ஸனிய்யா அதாகிர் எனும் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் தங்கினோம். என் மீது குங்குமச்சாயம் தோய்த்த (காவி) ஆடையைக் கண்டு இது என்ன என்று கேட்டார்கள். அவர்கள் இதை வெறுக்கிறார்கள் என்று நான் விளங்கிக் கொண்டேன். நான் வீட்டுக்கு வந்த போது அவர்கள் அடுப்பு எரித்துக் கொண்டு இருந்தனர். அந்த ஆடையை அதில் போட்டு (எரித்து) விட்டு நபிகள் நாயகத்திடம் வந்தேன். அந்த ஆடையை என்ன செய்தாய் என்று கேட்டார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன் என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) உன் குடும்பத்தினருக்கு இதை அணிவித்திருக்கக் கூடாதா எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி

நூல் : அஹ்மத்

19956 - أخبرنا عبد الرزاق قال : أخبرنا معمر عن أيوب عن عائشة بنت سعد قالت : رأيت ستا من أزواج النبي صلى الله عليه وسلم يلبسن المعصفر.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஆறு பேர் குங்குமச் சாயம் ஏற்றப்பட்ட (காவி) உடை அணிந்திருந்த்தை நான் பார்த்துள்ளேன்

அறிவிப்பவர் : ஆயிஷா பின்த் ஸஅத்

நூல் முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account