Sidebar

08
Sun, Sep
0 New Articles

வெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா?

ஆடை அலங்காரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா?

கேள்வி

நகம், முடி இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே! இது சரியா?

பதில்:

இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமாகவும் இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன.

المعجم الكبير للطبراني

17149 - حَدَّثَنَا مُحَمَّدُ بن مُحَمَّدٍ التَّمَّارُ الْبَصْرِيُّ، ثنا يُونُسُ بن مُوسَى السَّامِيُّ، وَسُلَيْمَانُ بن دَاوُدَ الشَّاذَكُونِيُّ، قَالا: ثنا مُحَمَّدُ بن سُلَيْمَانَ بن مَسْمُولٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بن سَلَمَةَ بن وَهْرَامٍ، عَنْ مِيلٍ بنتِ مِشْرَحٍ، قَالَتْ: رَأَيْتُ أَبِي قَلَّمَ أَظْفَارَهُ، ثُمَّ دَفَنَهَا وَقَالَ: أَيْ بنيَّةُ، هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ.

என் தந்தை மிஷ்ரஹ் (ரலி) நகங்களை வெட்டி பின்னர் அதைப் புதைத்தைப் பார்த்தேன். மகளே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ய நான் பார்த்துள்ளேன் என்று அப்போது கூறினார்.

மீல் பின்த் மிஷ்ரஹ்

நூல் : தப்ரானி கபீர்

இதை அறிவிக்கும் முஹம்மத் பின் சுலைமான் என்பாரும், உபைதுல்லாஹ் பின் சலமா பின் வஹ்ராம் என்பாரும் பலவீனமானவர்கள். எனவே இது ஆதாரமாக எடுக்கப்படாது.

شعب الإيمان

6068 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا حُمَيْدُ بْنُ دَاوُدَ بْنِ إِسْحَاقَ الْقَيْسِيُّ الْقَمَّاحُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ [ص:444] شملولٍ، حَدَّثَنِي عُبَيْدُ بْنُ سَلَمَةَ بْنِ وَهْرَامَ، عَنْ أَبِيهِ قَالَ: حَدَّثَتْنِي مِيلُ بِنْتُ مُسْرَجٍ الْأَشْعَرِيَّةُ، أَنَّ أَبَاهَا مُسْرَجٍ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصَّ أَظْفَارَهُ فَجَمَعَهَا، ثُمَّ دَفَنَهَا ثُمَّ قَالَ: " هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ

இதே ஹதீஸ் பைஹகியின் ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் உள்ளது.

இதன் அறிவிப்பாளரான ஹுமைத் பின் தாவூத் பின் இஸ்ஹாக் என்பார் யார் என்று அறியப்படாதவர்.

மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் சுலைமான் பின் ஷம்லூல் என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இன்னொரு அறிவிப்பாளரான உபைத் பின் சலமா பின் வஹ்ராம் என்பாரும் பலவீனமானவர்.

மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுடுவதால் இது பலவீனமான ஹதீஸாகும்.

الكامل في ضعفاء الرجال - ابن عدي

حدثنا بن صاعد ثنا الجراح بن مخلد ثنا إبراهيم بن عبد الرحمن بن مهدي ثنا محمد بن مشمول المكي ثنا عبيد الله بن سلمة بن وهرام عن أبيه عن ميل بنت مسرح الأشعري قالت رأيت أبي يقلم أظفاره ويدفنها ويقول رأيت رسول الله صلى الله عليه و سلم يفعل ذلك قال الشيخ ولمحمد بن سليمان بن مشمول غير ما ذكرت وعامة مما يرويه لا يتابع عليه في إسناده ولا متنه

அல்காமில் என்ற நூலிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் முஹம்மத் பின் மஷ்மூல், உபைதுல்லாஹ் பின் சலமா பின் வஹ்ராம் ஆகிய இருவரும் பலவீனமானவர்கள். எனவே இதுவும் ஆதாரமாக கொள்ளப்படாது.

الآحاد والمثاني لابن أبي عاصم

2513 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، ثنا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، ثنا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ، ثنا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ المَسْمُولِيُّ ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ سَلَمَةَ بْنِ وَهْرَامَ، عَنْ أَبِيهِ قَالَ: حَدَّثَتْنِي مِيلُ بِنْتُ مِشْرَحٍ الْأَشْعَرِيِّ: أَنَّ أَبَاهَا قَصَّ أَظْفَارَهُ ثُمَّ دَفَنَهَا ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ مِثْلَ هَذَا

அல் ஆஹாத் வல் மஸானி என்ற நூலில் மேற்கண்ட இரு பலவீனமான அறிவிப்பாளர்களுடன் முஹம்மத் பின் அல்காசிம் என்ற பொய்யரும் இடம் பெற்றுள்ளார். எனவே இது இட்டுக்கட்டப்பட்டதாகும். 

مصنف ابن أبي شيبة

 25661 - حدثنا وكيع عن عبد الجبار بن عباس عن رجل من بني هاشم أن رسول الله صلى الله عليه و سلم أمر بدفن الشعر والظفر والدم

முடி, இரத்தம், நகம் ஆகியவற்றைப் புதைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : பனூ ஹாசிம் குலத்தைச் சேர்ந்த ஒருவர்

நூல் : முஸன்னஃப் அபீ ஷைபா

இதை நபித்தோழர் அறிவிக்கவில்லை. ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அவர் யார் என்ற விபரம் இல்லை. எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

المعجم الكبير للطبراني

17541 - حَدَّثَنَا علانُ بن عَبْدِ الصَّمَدِ الطَّيَالِسِيُّ مَاغِمَةُ، قَالَ: ثنا مُحَمَّدُ بن الْحَسَنِ الأَسَدِيُّ، ثنا أَبِي، ثنا قَيْسٌ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بن وَائِلٍ، عَنْ أَبِيهِ: أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:كَانَ يَأْمُرُ بِدَفْنِ الشَّعْرِ، وَالأَظْفَارِ

شعب الإيمان

6069 - أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ الْفَقِيهُ، أَنَا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ الْأَصْبَهَانِيُّ، ثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْعَسْكَرِيُّ، ثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، ثَنَا  أَبِي، ثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " كَانَ يَأْمُرُ بِدَفْنِ الشَّعْرِ وَالْأَظْفَارِ " " هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ وَرُوِيَ مِنْ أَوْجُهٍ، كُلُّهَا ضَعِيفَةٌ

முடிகளையும், நகங்களையும் புதைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்கள்: தப்ரானி கபீர், ஷுஅபுல் ஈமான்

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறியதாக அவரது மகன் அப்துல் ஜப்பார் இதை அறிவிக்கிறார்.

இவர் தனது தந்தையின் வழியாக அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் தனது தந்தையிடம் எதையும் செவியுற்றதில்லை.

جامع التحصيل في أحكام المراسيل

413 - عبد الجبار بن وائل بن حجر عن أبيه في السنن الأربعة قال بن معين لم يسمع من أبيه شيئا مات أبوه وهو حمل قلت صح عن عبد الجبار أنه قال كنت غلاما لا أعقل صلاة أبي وهذا ينفي أنه مات أبوه وهو حمل والله أعلم

என் தந்தை மரணிக்கும் போது அவரது தொழுகை முறை எவ்வாறு இருந்தது என்பதை நான் அறியாத பருவத்தில் இருந்தேன் என்று அவரே கூறியுள்ளார்.

நூல் : ஜாமிவுத் தஹ்ஸீல்

எனவே இது பலவீனமான செய்தியாகும்.

மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் கைஸ் பின் ரபீவு என்பாரும் நினைவாற்றல் குறைவானவர்; பலவீனமானவர்."

மூன்றாவதாக முஹம்மத் பின் ஹஸன் என்பவர்  இடம் பெற்றிருக்கிறார். இவரிடம் பலவீனம் உள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேற்கண்ட ஷுஅபுல் ஈமான் நூலில் இதைப் பதிவு செய்துள்ள பைஹகி அவர்கள் இது குறித்து பல ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன என்றும் குறிப்பிடுகிறார்கள்.

எனவே முடிகளையும் நகங்களையும் புதைக்க வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் முக்கியத்துவம் இல்லை. விரும்பினால் புதைக்கலாம்; அல்லது குப்பையில் போடலாம்.

09.04.2014. 1:59 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account