இளைஞர்கள் தாடி வைப்பதை தவிர்க்கலமா?
சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை; ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம்; வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை' என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்?
பதில்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ
'இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை நறுக்குங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5892
தாடி வைப்பதை வலியுறுத்தி இது போன்ற பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே தாடி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும்.
தாடியை மழித்தல் தானாக வளரும் ஒரு சுன்னத்தை அழித்தல் என்று தான் கூற வேண்டும்.
பாவமான காரியத்தில் மனைவிக்குக் கணவனோ, அல்லது கணவனுக்கு மனைவியோ கட்டுப்படக் கூடாது.
حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ابْنُ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ زَوَّجَتْ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا فَقَالَ لَا إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلَاتُ
அன்சாரிகளில் ஒரு பெண் தனது மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்து விட்டு, 'என் கணவர் எனது தலையில் ஒட்டு முடி வைத்துக் கொள்ளுமாறு பணிக்கிறார்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'வேண்டாம்! ஒட்டு முடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5205, 5934
எனவே மனைவியோ, அல்லது மற்றவர்களோ கூறுகின்றார்கள் என்பதற்காக தாடியைச் சிரைக்கக் கூடாது.
இவ்வாறு செய்பவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்? என்று கேட்டுள்ளீர்கள்.
ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு, இந்தப் பாவத்துக்கு அவரது நிலை மறுமையில் இப்படியிருக்கும் என்று மார்க்கத்தில் கூறப்படவில்லை. எனவே தவறு என்று கண்டால் அதைச் சுட்டிக் காட்டுவது தான் நமது கடமை. மறுமை நிலை குறித்து அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.
அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர். (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.
திருக்குர் ஆன் :7:8,9
Published on: August 16, 2009, 9:20 PM
இளைஞர்கள் தாடி வைப்பதை தவிர்க்கலமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode