Sidebar

04
Wed, Dec
21 New Articles

மீலாதும் மவ்லூதும் கூடாது - தேவ்பந்த் மதரஸா ஃபத்வா

பித்அத்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மீலாதும் மவ்லூதும் கூடாது - தேவ் பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

உலக அளவில் ஹனபி மத்ஹபை பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி மத்ஹபின் பல்கலைக் கழக்மான இம்மதரஸா மீலாதும் மவ்லூதும் மார்க்கத்தில் கிடையாது அவ்லியாக்கலள் அதை ஓதச் சொல்லவில்லை என்று தேவ்பந்த் மதரஸா ஃபத்வா கொடுத்துள்ளது. நாங்கள் ஹனபிகள் என்று கூறிக் கொண்டு மேற்கண்ட செயல்களைச் செய்து வருவோர் இனியாவது இதில் இருந்து திருந்திக் கொள்வார்களா?

  உருது ஃபத்வாவின் தமிழாக்கம் இதோ:

கண்ணியத்திற்குரிய தலைமை முப்தி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். கீழ்கண்ட இரு விஷயங்களைப் பற்றி தயவு செய்து தெளிவை தந்து நன்றி நவில வாய்ப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1) சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ரப்பியுல் அவ்வல் 12 ஆம் தேதி அன்று வழக்கமாக மவ்லூத் ஓதப்படுகிறது. இதைப்போல குறிப்பிட்ட நாளில் மவ்லூத் ஓதுவது மார்க்க அடிப்படையில் கூடுமா அல்லது கூடாதா ?

2) ரமலானுடைய மாதத்தில் தராவீஹ் தொழுகையின் ஒவ்வொரு நான்கு ரக்அத்திற்கு பிறகு கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீத், கலீமா தவ்ஹீதுடன் நான்கு கலீபாக்களின் பெயரில், அதாவது முதல் நான்கு ரக்அத்திற்கு பிறகு முதல் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயராலும், இரண்டாம் நான்கு ரக்அத்திற்கு பிறகு இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் பெயராலும், மூன்றாம் நான்கு ரக்அத்திற்கு பிறகு மூன்றாம் கலீபா உஸ்மான் கனி (ரலி) அவர்களின் பெயராலும், நான்காம் நான்கு ரக்அத்திற்கு பிறகு அலி ஹைதர் (ரலி) அவர்களின் பெயராலும் தஸ்பீஹ் படிக்கப்படுகிறது. மார்க்கத்தில் இதைப்போல தஸ்பீஹ் படிப்பது கூடுமா அல்லது கூடாதா ? தெளிவு படுத்தவும்.

அல்லாஹ் தங்களின் ஆயுளில் பரக்கத்தை கொடுத்து தங்களுடைய பணியை எல்லா இடங்களிலும் பரவ செய்யட்டும்.

வஸ்ஸலாம்

ஷம்சுத்தீன்

சென்னை

2 முஹர்ரம் 1426

பதில் :

1) இறுதித்தூதர் அஹ்மதே முஜ்தபா முஹம்மதே முஸ்தபா (ஸல்) அவர்களுடைய திருப்பெயர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ், ஜிஹாத் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்புகள் உதாரணத்திற்கு கொடுக்கல் வாங்கல், கடன் மற்றும் அடமானம் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு, உட்காருதல் எழுதல் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆடைகளைப்பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது கால்நடைகளான ஒட்டகம், ஆடு, குதிரை போன்றவைகளைப்பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும் அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தை பருவம் மற்றும் பிறப்பை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப்பற்றி எதை குறிப்பிடுவதாக இருந்தாலும், அதிலிருந்து பாடம் மற்றும் படிப்பினை பெறுவது, சந்தேகத்திற்கு இடமின்றி பரக்கத்தும் கட்டாயமும் ஆகும். அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தருவதாகும்.

ஆனால் இச்செய்திகள் ஆதாரப்பூர்வமற்ற செய்திகளாகவும், நம்ப முடியாத செய்திகளாகவும், இட்டுகட்டப்பட்ட செய்திகளாவும் இருக்கக் கூடாது. இதைப் போன்ற செய்திகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எனவே, வழக்கத்தில் இருக்கும் மீலாதைக் கொண்டாடுவது தெளிவான தீய நூதனப் பழக்கமாகும் (பித்அத் சய்யிஆ), பழக்கத்தில் இருக்கும் இந்த மீலாதிற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் ஆதாரம் இல்லை, சஹாபாக்கள், தாபியீன்கள், தப்அ தாபியீன்கள் மற்றும் முழுமையான அவ்லியாக்களிடமிருந்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக இந்த உம்மத்தின் 600 ஆண்டு காலங்கள் வழக்கத்தில் இருக்கும் மீலாது இல்லாமல் தான் கடந்தது. மீலாது உருவாக்கப்பட்ட போது அல்லாமா இப்னு அமீர் அல்ஹாஜ் மக்கீ (ரஹ்) அவர்கள் தன்னுடைய நூலான அல்மத்கலில் விரிவான ஆதாரங்களை கொண்டு இதை தடுத்துள்ளார்கள். இதுவரைக்கும் சத்தியத்தில் இருக்கும் உலமாக்கள் இதை தடுத்து கொண்டு தான் வருகிறார்கள்.

2) தராவீஹ் உடைய ஒவ்வொரு நான்கு ரக்அத்திற்கு பிறகு உட்கார வேண்டும். உட்காரும் எவருக்கும் துஆ செய்வதற்கோ அல்லது தரூத் (ஸலவாத்) ஒதுவதற்கோ, அல்லது மஸ்ஜிதுல் ஹராமாக இருந்தால் தவாப் செய்வதற்கோ அதிகாரம் உள்ளது. தங்களுடைய பகுதியில் வழக்கத்தில் இருக்கும் கலீமா ஷஹாதத் போன்றவற்றை ஓதுதல் என்பது பிக்ஹ் நூல்களிலோ, பத்வா நூற்களிலோ அல்லது ஹதீஸ்களிலோ அல்லது ஹதீஸ்களின் விரிவுரைகளிலோ, இந்த திக்ருகள் தராவீஹ்வுடைய சுன்னத்களில் இடம் பெறவில்லை. அதைப் போல இந்த திக்ருகள் ஒழுக்கம் மற்றும் விரும்பத் தக்கவைகளிலும் இடம்பெறவில்லை. ஆக இவை எல்லாம் விடுவதற்கு தகுதியானவைகள். தூர பார்வையுடனும், ஹிக்மத்துடனும் இவைகளை விட்டு மக்களை தூரமாக்க முயற்சி செய்யப்பட வேண்டும்.

28.08.2011. 12:55 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account