Sidebar

14
Thu, Nov
12 New Articles

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா

கேள்வி - குஜராத்தில் மோடி நடத்திய மிருக வெறியாட்டத்தைப் பற்றி பேசுவோர் காங்கிரஸ் ஆட்சியிலும் இன்னபிற மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

கலவரங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கிறது. எல்லா கலவரங்களிலும் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் கேள்வி எழுப்புகின்றனவே? இந்தக் கேள்வி நியாயமானது தானா?

சொல்லின் செல்வன், அதிராம்பட்டிணம்

பதில் - குஜராத்தில் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பது உண்மை. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பதும் உண்மை. சில கலவரங்களில் குஜராத்தை விட அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான்.

ஆனால் குஜராத் வன்முறைக்கும் இன்னபிற மாநிலங்களில் நடந்த வன்முறைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை சங்பரிவாரமும் அதன் சார்பு ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன.

மற்ற மாநிலங்களில் நடந்த கலவரங்களின் போது மாநில அரசின் கையாலாகாத்தனம் காரணமாக இருக்கும்.

மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரடியாகத் திட்டமிட்டு நடத்தி இருக்க மாட்டார்கள்.

பெரும்பான்மை பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபடும்போது அதைத் தடுக்கத் தவறிய குற்றத்தைத்தான் அவர்கள் செய்தனர்.

ஆனால் குஜராத்தில் மோடிதான் கலவரத்தை நடத்தியவர். அவரது அமைச்சர்கள்தான் முன்னின்று நடத்தினார்கள். காவல் நிலையத்தில்தான் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

பிற ஆட்சியில் பிற மாநிலங்களில் நடந்த கலவரத்தின்போது 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றால் அந்த மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்திருந்தால் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

குஜராத் கலவரத்தின்போது மோடி அல்லாத வேறு யாராவது முதல்வராக இருந்திருந்தால் அப்போது கொல்லப்பட்டவர்களில் கால்வாசி மக்கள் கூட கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானி கலவரத்தை நடத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்காக 28 ஆண்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

உபியில் கலவரம் செய்வதற்காக மோடியால் அனுப்பி வைக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமித்ஷா என்ற கொடியவனுக்கு கலவரத்தில் சம்மந்தம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

மற்ற கலவரங்களுக்கும் மோடி நிகழ்த்திய கலவரத்திற்கும் இதுதான் பெரிய வேறுபாடு.  இதைத் திட்டமிட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.

மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற மாநில அரசுகள் இழப்பீடு அளித்தன. இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அரசுத் செலவில் புணர்நிர்மானம் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் பயங்கரவாதி மோடியோ இதைக்கூட செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

மற்ற கலவரங்கள் ஆள்வோரின் திறமையின்மையால் நடந்தன.

ஆனால் குஜராத் கலவரம் மோடியின் மதவெறித் திமிரால் திறமையாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரசின் திறமையின்மையும், அரசே கலவரத்தை முன்னின்று நடத்துவதும் சமமாகுமா?

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து மற்ற மாநில அரசுகள் தாமதமாக நீதி வழங்கினார்கள்.

ஆனால் கலவரக்கார்களை தப்பிக்க வைக்க எல்லா அயோக்கியத்தன்ங்களையும் செய்தவர் பயங்கரவாதி மோடி. நாட்டின் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்கா விட்டால் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் அனைவரும் தப்பித்து இருப்பார்கள். இந்த வித்தியாசம் தினமணிக்கும் தினமலருக்கும் தினத்தந்திக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் அவர்களின் மதவெறி இந்த உண்மையை மறைக்கச் சொல்கிறது.

ஒரு ஊரில் காவல் நிலையம் இருந்தும் திருட்டுக்கள் நடக்கின்றன. 100 கோடி ரூபாய் அளவுக்கு திருட்டு நடந்துள்ளதாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொரு ஊரில் 10 கோடி அளவுக்குத்தான் திருட்டு நடந்துள்ளது. ஆனால் இந்த பத்து கோடி திருட்டையும் காவல்துறையினரே செய்துள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இரண்டும் சமமானதா? பத்து கோடியைவிட நூறு கோடி பெரிது என்று மனசாட்சியுள்ளவர்கள் பேசுவார்களா?

ஒன்று சமூக விரோதிகளின் திருட்டு. இன்னொன்று காவல்துறையே நடத்திய திருட்டு என்று வேறுபடுத்தி பேச மாட்டார்களா? இவர்களைப் போலீஸ் வேலைக்கே வைக்கக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா?

மோடி செய்தது இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்.

தினத்தந்தியும், தினமலரும் தினமணியும் என்னதான் திசை திருப்பினாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். நடுநிலையான இந்துக்கள் மோடி என்ற பயங்கரவாதியைப் பிரதமராக ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்.

23.09.2013. 2:31 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account